﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="prabandam.xsl"?>

<thirumozi>

<heading>
<author>ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிச்செய்த திருமொழி</author>
<title>திவ்யப் பிரபந்தம் (10/14)</title>
<number>10</number>
<total>1</total>
</heading>

<padiyam>
<number>1</number>

<title>இரண்டாம் திருவந்தாதி</title>

<verse>
<line> அன்பே தகளியா, ஆர்வமே நெய் ஆக,</line>
<line> இன்பு உருகு சிந்தை இடு திரியா, நன்பு உருகி,</line>
<line> ஞானச் சுடர்-விளக்கு ஏற்றினேன், நாரணற்கு-</line>
<line> ஞானாத் தமிழ் புரிந்த நான்.</line>
</verse>

<verse>
<line> ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணந்தன் நாமங்கள்,</line>
<line> தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால், வானத்து</line>
<line> அணி அமரர் ஆக்குவிக்கும்-அஃது அன்றே-நங்கள்</line>
<line> பணி அமரர் கோமான் பரிசு.</line>
</verse>

<verse>
<line> பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்</line>
<line> புரிவார் புகப்பெறுவர் போலாம்-புரிவார்கள்</line>
<line> தொல் அமரர் கேள்வித் துலங்கு ஒளி சேர் தோற்றத்து</line>
<line> நல் அமரர் கோமான் நகர்.</line>
</verse>

<verse>
<line> நகர் இழைத்து, நித்திலத்து நாள் மலர் கொண்டு, ஆங்கே</line>
<line> திகழும் மணி வயிரம் சேர்த்து, நிகர் இல்லாப்</line>
<line> பைங் கமலம் ஏந்திப் பணிந்தேந்பனி மலராள்</line>
<line> அங்கம் வலம் கொண்டான் அடி.</line>
</verse>

<verse>
<line> அடி மூன்றில் இவ் உலகம் அன்று அளந்தாய் போலும்;</line>
<line> அடி மூன்று இரந்து அவனி கொண்டாய்: படிநின்ற</line>
<line> நீர் ஓத மேனி நெடுமாலே! நின் அடியை</line>
<line> யார் ஓத வல்லார்-அறிந்து?</line>
</verse>

<verse>
<line> அறிந்து, ஐந்தும் உள் அடக்கி, ஆய் மலர் கொண்டு, ஆர்வம்</line>
<line> செறிந்த மனத்தராய், செவ்வே அறிந்து, அவந்தன்</line>
<line> பேர் ஓதி ஏத்தும் பெருந்தவத்தோர் காண்பரே-</line>
<line> கார் ஓத வண்ணன் கழல்.</line>
</verse>

<verse>
<line> கழல் எடுத்து, வாய் மடித்து, கண் சுழன்று, மாற்றார்</line>
<line> அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச, தழல் எடுத்த</line>
<line> போர் ஆழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியை</line>
<line> ஓர், ஆழி நெஞ்சே!-உகந்து.</line>
</verse>

<verse>
<line> உகந்து, உன்னை வாங்கி, ஒளி நிறம் கொள் கொங்கை,</line>
<line> அகம் குளிர, உண் என்றாள் ஆவி உகந்து,</line>
<line> முலை உண்பாய் போலே, முனிந்து உண்டாய்-நீயும்</line>
<line> அலை பண்பால், ஆனமையால், அன்று.</line>
</verse>

<verse>
<line> அன்று, அதுகண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி,</line>
<line> நின்று முலை தந்த இந் நீர்மைக்கு, அன்று</line>
<line> வரன்முறையால் நீ அளந்த மா கடல் சூழ் ஞாலம்</line>
<line> பெரு முறையால் எய்துமோ பேர்த்து?</line>
</verse>

<verse>
<line> பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய்; மண் இரந்து,</line>
<line> காத்தனை பல் உயிரும், காவலனே! ஏத்திய</line>
<line> நா உடையேன்; பூ உடையேன்; நின் உள்ளி நின்றமையால்,</line>
<line> கா-அடியேன் பட்ட கடை.</line>
</verse>

<verse>
<line> கடை நின்று அமரர், கழல் தொழுது, நாளும்</line>
<line> இடைநின்ற இன்பத்தர் ஆவர்-புடைநின்ற</line>
<line> நீர் ஓத மேனி நெடுமாலே! நின் அடியை</line>
<line> ஆர் ஓத வல்லார்-அவர்?</line>
</verse>

<verse>
<line> அவர் இவர் என்று இல்லை; அரவு-அணையான் பாதம்</line>
<line> எவர் வணங்கி ஏத்தாதார்? எண்ணில், பவரும்</line>
<line> செழும் கதிரோன், ஒண் மலரோன், கண்ணுதலோன், அன்றே-</line>
<line> தொழும் தகையார் நாளும் தொடர்ந்து?</line>
</verse>

<verse>
<line> தொடர் எடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு, அஞ்சி,</line>
<line> படர் எடுத்த பைங் கமலம் கொண்டு, அன்று இடர் அடுக்க,</line>
<line> ஆழியான் பாதம் பணிந்து அன்றே-வானவர்-கோன்</line>
<line> பாழி-தான் எய்திற்று, பண்டு?</line>
</verse>

<verse>
<line> பண்டிப் பெரும் பதியை ஆக்கி, பழி பாவம்</line>
<line> கொண்டு, இங்கு வாழ்வாரைக் கூறாதே, எண் திசையும்</line>
<line> பேர்த்த கரம் நான்கு உடையான் பேரோதி, பேதைகாள்!</line>
<line> தீர்த்தகரர் ஆமிந்திரிந்து.</line>
</verse>

<verse>
<line> திரிந்தது-வெம் சமத்துத் தேர் கடவி; அன்று</line>
<line> பிரிந்தது-சீதையை மான் பின் போய்; புரிந்ததுவும்</line>
<line> கண் பள்ளிகொள்ள-அழகியதே நாகத்தின்</line>
<line> தண் பள்ளி கொள்வாந்தனக்கு?</line>
</verse>

<verse>
<line> தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும்,</line>
<line> மனத்து அடைய வைப்பது ஆம் மாலை; வனத் திடரை</line>
<line> ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்,</line>
<line> மாரி யார் பெய்கிற்பார் மற்று?</line>
</verse>

<verse>
<line> மற்று ஆர் இயல் ஆவார்-வானவர்-கோன், மா மலரோன்</line>
<line> சுற்றும் வணங்கும் தொழிலானை, ஒற்றைப்</line>
<line> பிறை இருந்த செஞ்சடையான் பின் சென்று, மாலைக்</line>
<line> குறை இரந்து, தான் முடித்தான் கொண்டு?</line>
</verse>

<verse>
<line> கொண்டது உலகம் குறள் உருவாய்; கோளரியாய்</line>
<line> ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது; உண்டதுவும்</line>
<line> தான் கடந்த ஏழ் உலகே: தாமரைக்கண் மால், ஒரு நாள்,</line>
<line> வான் கடந்தான், செய்த வழக்கு.</line>
</verse>

<verse>
<line> வழக்கு அன்று கண்டாய், வலி சகடம் செற்றாய்;</line>
<line> வழக்கு என்று நீ மதிக்க வேண்டா-குழக் கன்று</line>
<line> தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை, திருமாலே!-</line>
<line> பார் விளங்கச் செய்தாய் பழி.</line>
</verse>

<verse>
<line> பழி பாவம் கையகற்றி, பல் காலும், நின்னை</line>
<line> வழிவாழ்வார் வாழ்வாராம் மாதோ-வழு இன்றி</line>
<line> நாரணந்தன் நாமங்கள் நன்கு உணர்ந்து, நன்கு ஏத்தும்</line>
<line> காரணங்கள்-தாம் உடையார்-தாம்.</line>
</verse>

<verse>
<line> தாம் உளரே; தம் உள்ளம் உள் உளதே; தாமரையின்</line>
<line> பூ உளதே; ஏத்தும் பொழுது உண்டே; வாமன்</line>
<line> திரு மருவு தாள் மருவு சென்னியரே-செவ்வே</line>
<line> அரு நரகம் சேர்வது அரிது.</line>
</verse>

<verse>
<line> அரியது எளிது ஆகும், ஆற்றலால் மாற்றிப்</line>
<line> பெருக முயல்வாரைப் பெற்றால்: கரியது ஓர்</line>
<line> வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தன்றே-</line>
<line> தண் கோட்டு மா மலரால், தாழ்ந்து?</line>
</verse>

<verse>
<line> தாழ்ந்து, வரம் கொண்டு, தக்க வகைகளால்</line>
<line> வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும்-தாழ்ந்த</line>
<line> விளங் கனிக்குக் கன்று எறிந்து, வேற்று உருவாய் ஞாலம்</line>
<line> அளந்து, அடிக்கீழ்க் கொண்ட அவன்.</line>
</verse>

<verse>
<line> அவன் கண்டாய், நல் நெஞ்சே! ஆர் அருளும் கேடும்;</line>
<line> அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான்: அவன் கண்டாய்</line>
<line> காற்று, தீ, நீர், வான், கரு வரை, மண், கார் ஓதச்</line>
<line> சீற்றத் தீ ஆவானும்-சென்று.</line>
</verse>

<verse>
<line> சென்றது இலங்கைமேல் செவ்வே; தன் சீற்றத்தால்</line>
<line> கொன்றது இராவணனை; கூறுங்கால், நின்றதுவும்</line>
<line> வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே-விண்ணவர்-தம்</line>
<line> வாய் ஓங்கு தொல் புகழான் வந்து.</line>
</verse>

<verse>
<line> வந்தித்து அவனை-வழி நின்ற ஐம்பூதம்,</line>
<line> ஐந்தும் அகத்து அடக்கி-ஆர்வமாய், உந்திப்</line>
<line> படி அமரர் வேலையான் பண்டு-அமரர்க்கு ஈந்த-</line>
<line> படி-அமரர் வாழும் பதி.</line>
</verse>

<verse>
<line> பதி அமைந்து, நாடி, பருத்து எழுந்த சிந்தை,</line>
<line> மதி உரிஞ்சி, வான் முகடு நோக்கி, கதி மிகுத்து, அம்</line>
<line> கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே-</line>
<line> மால் தேடி ஓடும் மனம்.</line>
</verse>

<verse>
<line> மனத்து உள்ளாந்வேங்கடத்தான், மா கடலான், மற்றும்</line>
<line> நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான், எனைப் பலரும்</line>
<line> தேவாதி தேவன் எனப்படுவான், முன் ஒரு நாள்</line>
<line> மா வாய் பிளந்த மகன்.</line>
</verse>

<verse>
<line> மகனாகக் கொண்டு எடுத்தாள் மாண்பு ஆய கொங்கை</line>
<line> அகன் ஆர உண்பன் என்று உண்டு, மகனைத் தாய்</line>
<line> தேறாத வண்ணம் திருத்தினாய்-தென் இலங்கை</line>
<line> நீறு ஆக எய்து அழித்தாய் நீ!</line>
</verse>

<verse>
<line> நீ அன்று உலகு அளந்தாய், நீண்ட திருமாலே!</line>
<line> நீ அன்று உலகு இடந்தாய் என்பரால்: நீ அன்று</line>
<line> கார் ஓதம் முன் கடைந்து, பின் அடைந்த்தாய் மா கடலை-</line>
<line> பேர் ஓத மேனிப் பிரான்!</line>
</verse>

<verse>
<line> பிரான் என்றும், நாளும் பெரும் புலரி என்றும்,</line>
<line> குரா நல் செழும் போது கொண்டு, வராகத்து</line>
<line> அணி உருவன் பாதம் பணியும்-அவர் கண்டீர்</line>
<line> மணி உருவம் காண்பார்-மகிழ்ந்து.</line>
</verse>

<verse>
<line> மகிழ்ந்தது சிந்தை, திருமாளே! மற்றும்</line>
<line> மகிழ்ந்தது, உன் பாதமே போற்றி; மகிழ்ந்தது</line>
<line> அழல் ஆழி சங்கம் அவை பாடி; ஆடும்</line>
<line> தொழில் ஆகம்-சூழ்ந்து, துணிந்து.</line>
</verse>

<verse>
<line> துணிந்தது-சிந்தை, துழாய் அலங்கல் அங்கம்</line>
<line> அணைந்தவன் பேர், உள்ளத்துப் பல்கால்: பணிந்ததுவும்-</line>
<line> வேய் பிறங்கு சாரல் விறல் வேங்கடவனையே:</line>
<line> வாய்-திறங்கள் சொல்லும் வகை.</line>
</verse>

<verse>
<line> வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்</line>
<line> புகையால், நறு மலரால், முன்னே மிக வாய்ந்த</line>
<line> அன்பு ஆக்கி, ஏட்டி, அடிமைப்பட்டேன் உனக்கு-</line>
<line> என் பாக்கியத்தால், இனி.</line>
</verse>

<verse>
<line> இனிது என்பர் காமம்; அதனிலும் ஆற்ற</line>
<line> இனிது என்பர் தண்ணீரும்; எந்தாய்! இனிது என்று</line>
<line> காமம், நீர் வேளாது, நின் பெருமை வேட்பரேல்,</line>
<line> சேம நீர் ஆகும்-சிறிது.</line>
</verse>

<verse>
<line> சிறியார் பெருமை சிறிதின்கண் எய்தும்;</line>
<line> அறியாரும் தாம் அறியார் ஆவர்; அறியாமை,</line>
<line> மண் கொண்டு, மண் உண்டு, மண் உமிழ்ந்த மாயன் என்று</line>
<line> எண் கொண்டு, என் நெஞ்சே! இரு.</line>
</verse>

<verse>
<line> இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே,</line>
<line> திருந்து திசைமுகனைத் தந்தாய்! பொருந்திய நின்</line>
<line> பாதங்கள் ஏத்திப் பணியாவேல், பல் பிறப்பும்</line>
<line> ஏதங்கள்-எல்லாம், எமக்கு.</line>
</verse>

<verse>
<line> எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே,</line>
<line> தமக்கு என்றும் சார்வம் அறிந்து, நமக்கு என்றும்</line>
<line> மாதவனே என்னும் மனம் படைத்து, மற்று அவன் பேர்</line>
<line> ஓதுவதே நாவினால் ஓத்து.</line>
</verse>

<verse>
<line> ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே-உத்தமன் பேர்</line>
<line> ஏத்தும் திறம்: அறிமின், ஏழைகாள்! ஒத்து-அதனை</line>
<line> வல்லீரேல்: நன்று அதனை மாட்டீரேல், மாதவன் பேர்</line>
<line> சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.</line>
</verse>

<verse>
<line> சுருக்காக வாங்கி, சுலாவி நின்று, ஐயார்</line>
<line> நெருக்கா முன், நீர் நினைமின் கண்டீர்-திருப் பொலிந்த</line>
<line> ஆகத்தான் பாதம்: அறிந்தும் அறியாத</line>
<line> போகத்தால் இல்லை-பொருள்.</line>
</verse>

<verse>
<line> பொருளால் அமர் உலகம் புக்கு இயலல் ஆகாது;</line>
<line> அருளால் அறம் அருளும் அன்றே; அருளாலே</line>
<line> மா மறையோர்க்கு ஈந்த மணிவண்ணன் பாதமே</line>
<line> நீ மறவேல், நெஞ்சே!-நினை.</line>
</verse>

<verse>
<line> நினைப்பன் திருமாலை, நீண்ட தோள் காண;</line>
<line> நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார்; மனைப்பால்</line>
<line> பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்</line>
<line> துறந்தார்-தொழுதார் அத் தோள்.</line>
</verse>

<verse>
<line> தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும், முடி அனைத்தும்,</line>
<line> தாள் இரண்டும் வீழச் சரம் துரந்தான் தாள் இரண்டும்</line>
<line> ஆர் தொழுவார் பாதம்-அவை தொழுவது அன்றே-என்</line>
<line> சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு.</line>
</verse>

<verse>
<line> சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்</line>
<line> மறந்தாரை மானிடமா வையேன்; அறம் தாங்கும்</line>
<line> மாதவனே என்னும் மனம் படைத்து, மற்று அவன்பேர்</line>
<line> ஓதுவதே நாவினால்-உள்ளு.</line>
</verse>

<verse>
<line> உளது என்று இறுமாவார்; உண்டு, இல்லை என்று</line>
<line> தளர்தல்-அதன் அருகும் சாரார்-அளவு அரிய</line>
<line> வேதத்தான், வேங்கடத்தன், விண்ணோர் முடி தோயும்</line>
<line> பாதத்தான் பாதம் பயின்று.</line>
</verse>

<verse>
<line> பயின்றது அரங்கம், திருக்கோட்டி; பல் நாள்</line>
<line> பயின்றதுவும் வேங்கடமே; பலநாள் பயின்றது</line>
<line> அணி திகழும் சோலை அணி நீர் மலையே-</line>
<line> மணி திகழும் வண் தடக்கை மால்.</line>
</verse>

<verse>
<line> மாலை அரி-உருவன் பாதமலர் அணிந்து,</line>
<line> காலைத் தொழுது எழுமின், கைகோலி-ஞாலம்</line>
<line> அளந்து, இடந்து, உண்டு, உமிழ்ந்த அண்ணலை, மற்று அல்லால்</line>
<line> உளம் கிடந்த ஆற்றால் உணர்ந்து.</line>
</verse>

<verse>
<line> உணர்ந்தாய் மறை நான்கும்; ஓதினாய் நீதி;</line>
<line> மணந்தாய் மலர்-மகள் தோள்; மாலே! மணந்தாய் போய்-</line>
<line> வேய் இரும் சாரல், வியல் இரு ஞாலம் சூழ்,</line>
<line> மா இரும் சோலை மலை.</line>
</verse>

<verse>
<line> மலை ஏழும், மா நிலங்கள் ஏழும், அதிர-</line>
<line> குலை சூழ் குரை கடல்கள் ஏழும்; முலை சூழ்ந்த</line>
<line> நஞ்சு உரத்துப் பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று</line>
<line> அஞ்சாது, என்நெஞ்சே! அழை.</line>
</verse>

<verse>
<line> அழைப்பன் திருமாலை-ஆங்கு அவர்கள் சொன்ன</line>
<line> பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி, இழைப்பு அரிய</line>
<line> ஆயவனே! யாதவனே! என்றவனை யார் முகப்பும்</line>
<line> மாயவனே! என்று மதித்து.</line>
</verse>

<verse>
<line> மதிக் கண்டாய், நெஞ்சே! மணிவண்ணன் பாதம்;</line>
<line> மதிக் கண்டாய் மற்று அவன் பேர்-தன்னை; மதிக் கண்டாய்-</line>
<line> பேர் ஆழிநின்று பெயர்ந்து, கடல் கடைந்த</line>
<line> நீர்-ஆழி வண்ணன் நிறம்.</line>
</verse>

<verse>
<line> நிறம் கரியன்; செய்ய நெடு மலராள் மார்வன்;</line>
<line> அறம் பெரியன்; ஆர் அது அறிவார்-மறம் புரிந்த</line>
<line> வாள் அரக்கன் போல்வானை வானவர்-கோன் தானத்து</line>
<line> நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி?</line>
</verse>

<verse>
<line> நெறியார் குழல் கற்றை முன்நின்று பின் தாழ்ந்து</line>
<line> அறியாது, இளங் கிரி என்று எண்ணி, பிரியாது,</line>
<line> பூங்கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்</line>
<line> வேங்கடமே-யாம் விரும்பும் வெற்பு.</line>
</verse>

<verse>
<line> வெற்பு என்று இரும் சோலை, வேங்கடம் என்று இவ் இரண்டும்</line>
<line> நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல், நிற்பு என்று</line>
<line> உளம்-கோயில் உள்ளம் வைத்து உள்ளினேந்வெள்ளத்து</line>
<line> இளங் கோயில் கைவிடேல் என்று.</line>
</verse>

<verse>
<line> என்றும் மறந்தறியேன், ஏழ் பிறப்பும், எப்பொழுதும்,</line>
<line> நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்-வென்றி</line>
<line> அடல் ஆழி கொண்ட அறிவனே!-இன்பக்</line>
<line> கடல்-ஆழி நீ அருளிக் காண்.</line>
</verse>

<verse>
<line> காணக் கழி காதல் கைமிக்குக் காட்டினால்,</line>
<line> நாணப்படும் என்றல், நாணுமே? பேணி,</line>
<line> கரு மாலைப் பொன் மேணி காட்டாமுன், காட்டும்-</line>
<line> திருமாலை நங்கள் திரு.</line>
</verse>

<verse>
<line> திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்</line>
<line> கருமம் கடைப்பிடிமின் கண்டீர்: உரிமையால்</line>
<line> ஏத்தினோம் பாதம், இருந் தடக்கை எந்தை பேர்-</line>
<line> நால்-திசையும் கேட்டீரே?-நாம்.</line>
</verse>

<verse>
<line> நாம் பெற்ற நன்மையும்-நா-மங்கை நல் நெஞ்சத்து</line>
<line> ஓம்பி இருந்து, எம்மை ஓதுவித்து, வேம்பின்</line>
<line> பொருள் நீர்மை ஆயினும், பொன் ஆழி பாடு என்று</line>
<line> அருள் நீர்மை தந்த அருள்.</line>
</verse>

<verse>
<line> அருள் புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து,</line>
<line> பொருள் தெரிந்து, காண்குற்ற அப்போது, இருள் திரிந்து</line>
<line> நோக்கினேன்; நோக்கி, நினைந்தேன் அது ஒண் கமலம்;</line>
<line> ஓக்கினேன் என்னையும், அங்கு ஓர்ந்து.</line>
</verse>

<verse>
<line> ஓர் உருவன் அல்லை: ஒளி உருவம் நின் உருவம்;</line>
<line> ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர்; ஓர் உருவம்</line>
<line> ஆதியாம் வண்ணம் அறிந்தார்-அவர் கண்டீர்</line>
<line> நீதியால் மண் காப்பார், நின்று.</line>
</verse>

<verse>
<line> நின்றது ஓர் பாதம் நிலம் புதைப்ப, நீண்ட தோள்</line>
<line> சென்று அளந்தது என்பர் திசை எல்லாம்-அன்று</line>
<line> கரு மாணியாய் இரந்த கள்வனே!-உன்னைப்</line>
<line> பிரமாணித்தார் பெற்ற பேறு.</line>
</verse>

<verse>
<line> பேறு ஒன்றும் முன் அறியேன்; பெற்று அறியேன் பேதைமையால்;</line>
<line> மாறு என்று சொல்லி வணங்கினேநேறின்</line>
<line> பெருத்தெருத்தம், கோடு ஓசிய, பெண் நசையின் பின் போய்,</line>
<line> எருத்து இறுத்த நல்-ஆயர் ஏறு.</line>
</verse>

<verse>
<line> ஏறு ஏழும் வென்று அடர்த்த எந்தை எரி உருவத்து</line>
<line> ஏறு ஏறி பட்ட இடுசாபம் பாறு ஏறி</line>
<line> உண்ட தலை வாய் நிறைய, கோட்டு அம் கை ஒண் குருதி</line>
<line> கண்ட பொருள் சொல்லின், கதை.</line>
</verse>

<verse>
<line> கதையின் பெரும் பொருளும், கண்ணா! நின் பேரே,</line>
<line> இதயம் இருந்தவையே ஏத்தில்: கதையின்</line>
<line> திருமொழியாய் நின்ற திருமாலே! உன்னைப்</line>
<line> பரு மொழியால் காணப் பணி.</line>
</verse>

<verse>
<line> பணிந்தேன் திருமேனி: பைங் கமலம் கையால்</line>
<line> அணிந்தேன், உன் சேவடிமேல், அன்பாய்: துணிந்தேந்</line>
<line> புரிந்து ஏத்தி உன்னை, புகலிடம் பார்த்து, ஆங்கே</line>
<line> இருந்து ஏத்தி வாழும் இது.</line>
</verse>

<verse>
<line> இது கண்டாய், நல் நெஞ்சே! இப் பிறவி ஆவது;</line>
<line> இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது; இது கண்டாய்</line>
<line> நாரணன் பேர் ஓதி, நரகத்து அருகு அணையாக்</line>
<line> காரணமும்; வல்லையேல், காண்.</line>
</verse>

<verse>
<line> கண்டேன் திருமேனி யான் கனவில்; ஆங்கு அவன் கைக்</line>
<line> கண்டேன் கனலும் சுடர் ஆழி; கண்டேந்</line>
<line> உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்து, பின்னும்,</line>
<line> மறு நோய் செறுவான் வலி.</line>
</verse>

<verse>
<line> வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள,</line>
<line> வலி மிக்க வாள் வரை மத்து ஆக, வலி மிக்க</line>
<line> வாள் நாகம் சுற்றி, மறுகக் கடல் கடைந்தாந்</line>
<line> கோள் நாகம் கொம்பு ஓசித்த கோ.</line>
</verse>

<verse>
<line> கோ ஆகி, மா நிலம் காத்து, நம் கண் முகப்பே</line>
<line> மா ஏகிச் செல்கின்ற மன்னவரும்-பூ மேவும்</line>
<line> செங் கமல நாபியான் சேவடிக்கே, ஏழ் பிறப்பும்,</line>
<line> தண் கமலம் ஏய்ந்தார் தமர்.</line>
</verse>

<verse>
<line> தமர் உள்ளம், தஞ்சை, தலை அரங்கம், தண்கால்,</line>
<line> தமர் உள்ளும் தண் பொருப்பு, வேலை, தமர் உள்ளும்</line>
<line> மாமல்லை, கோவல், மதிள் குடந்தை என்பரே-</line>
<line> ஏ வல்ல எந்தைக்கு இடம்.</line>
</verse>

<verse>
<line> இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப, எரி கான்று,</line>
<line> அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி-விடம் காலும்</line>
<line> தீ வாய் அரவு-அணைமேல் தோன்றல், திசை அளப்பான்,</line>
<line> பூ ஆர் அடி நிமிர்த்த போது.</line>
</verse>

<verse>
<line> போது அறிந்து வானரங்கள், பூஞ்சுனை புக்கு, ஆங்கு அலர்ந்த</line>
<line> போது அரிந்துகொண்டு ஏத்தும்; போது, உள்ளம்! போதும்,</line>
<line> மணி வேங்கடவன் மலர்-அடிக்கே செல்ல,</line>
<line> அணி-வேங்கடவன் பேர் ஆய்ந்து.</line>
</verse>

<verse>
<line> ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர், ஆதி நடு அந்திவாய்</line>
<line> வாய்ந்த மலர் தூவி, வைகலும்-ஏய்ந்த</line>
<line> பிறைக் கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மாந்</line>
<line> இறைக்கு ஆட்படத் துணிந்த யான்.</line>
</verse>

<verse>
<line> யானே தவம் செய்தேன், ஏழ் பிறப்பும், எப்பொழுதும்;</line>
<line> யானே தவம் உடையேன்: எம் பெருமான்! யானே</line>
<line> இருந் தமிழ் நல் மாலை இணை-அடிக்கே சொன்னேந்</line>
<line> பெருந் தமிழன் நல்லேன், பெருகு.</line>
</verse>

<verse>
<line> பெருகு மத வேழம் மாப் பிடிக்கும் முன் நின்று,</line>
<line> இரு கண் இள மூங்கில் வாங்கி, அருகு இருந்த</line>
<line> தேன் கலந்து, நீட்டும் திருவேங்கடம் கண்டீர்-</line>
<line> வான் கலந்த வண்ணன் வரை.</line>
</verse>

<verse>
<line> வரைச் சந்தனக் குழம்பும், வான் கலனும், பட்டும்,</line>
<line> விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு,</line>
<line> ஆதிக்கண் நின்ற அறிவன் அடி-இணையே</line>
<line> ஓதிப் பணிவது உறும்.</line>
</verse>

<verse>
<line> உறும் கண்டாய், நல் நெஞ்சே! உத்தமன் நல் பாதம்;</line>
<line> உறும் கண்டாய், ஒண் கமலம்-தன்னால்; உறும் கண்டாய்-</line>
<line> ஏத்திப் பணிந்து அவன் பேர் ஈர் ஐஞ்ஞூறு, எப்பொழுதும்,</line>
<line> சாத்தி, உரைத்தல் தவம்.</line>
</verse>

<verse>
<line> தவம் செய்து நான் முகனே பெற்றாந்தரணி</line>
<line> நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம்: சிவந்த தன்</line>
<line> கை அனைத்தும் ஆரக் கழுவினந்கங்கை நீர்</line>
<line> பேய்து, அனைத்துப் பேர் மொழிந்து, பின்.</line>
</verse>

<verse>
<line> பின் நின்று தாய் இரப்ப, கேளான்; பெரும் பணைத் தோள்</line>
<line> முன் நின்று தான் இரப்பாள், மொய்ம் மலராள்; சொல் நின்ற</line>
<line> தோள் நலத்தாந்நேர் இல்லாத் தோன்றல், அவன் அளந்த</line>
<line> நீள் நிலம்-தான் அத்தனைக்கும் நேர்.</line>
</verse>

<verse>
<line> நேர்ந்தேன் அடிமை; நினைந்தேன் அது ஒண் கமலம்;</line>
<line> ஆர்ந்தேன் உன் சேவடிமேல், அன்பாய்; ஆர்ந்த</line>
<line> அடிக் கோலம் கண்டவர்க்கு என்கொலோ-முன்னைப்</line>
<line> படிக் கோலம் கண்ட பகல்?</line>
</verse>

<verse>
<line> பகல் கண்டேன்; நாரணனைக் கண்டேன்; கனவில்</line>
<line> மிகக் கண்டேன் மீண்டு அவனை, மெய்யே; மிகக் கண்டேந்</line>
<line> ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்</line>
<line> வான் திகழும் சோதி வடிவு.</line>
</verse>

<verse>
<line> வடிக் கோல வாள் நெடுங் கண் மா மலராள் செவ்விப்</line>
<line> படிக் கோலம் கண்டு அகலாள், பல்நாள்; அடிக்கோலி</line>
<line> ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்கொலோ?</line>
<line> கோலத்தால் இல்லை குறை.</line>
</verse>

<verse>
<line> குறையாக வெம் சொற்கள் கூறினேன்; கூறி,</line>
<line> மறை ஆங்கு என உரைத்த மாலை, இறையேனும்,</line>
<line> ஈயும்கொல் என்றே இருந்தேன் எனைப் பகலும்-</line>
<line> மாயன்கண் சென்ற வரம்.</line>
</verse>

<verse>
<line> வரம் கருதி, தன்னை வணங்காத வன்மை</line>
<line> உரம் கருதி, மூர்க்கத்தவனை நரம் கலந்த</line>
<line> சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி-இணையே</line>
<line> அம் கண் மா ஞாலத்து அமுது.</line>
</verse>

<verse>
<line> அமுது என்றும், தேன் என்றும், ஆழியான் என்றும்,</line>
<line> அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும், அமுது அன்ன</line>
<line> சொல்-மாலை ஏத்தித் தொழுதேந்சொலப்பட்ட</line>
<line> நல் மாலை ஏத்தி, நவின்று.</line>
</verse>

<verse>
<line> நவின்று உரைத்த நாவலர்கள் நாள் மலர் கொண்டு, ஆங்கே</line>
<line> பயின்றதனால் பெற்ற பயன என் கொலொ?-பயின்றார்-தம்</line>
<line> மெய்த் தவத்தால் காண்பு-அரிய மேக மணி வண்ணனை யான்</line>
<line> எத் தவத்தால் காண்பன்கொல், இன்று?</line>
</verse>

<verse>
<line> இன்றா அறிகின்றேன் அல்லேநிரு நிலத்தைச்</line>
<line> சென்று ஆங்கு அளந்த திருவடியை: அன்று,</line>
<line> கருக்கோட்டியுள் கிடந்து, கைதொழுதேன், கண்டேந்</line>
<line> திருக்கோட்டி எந்தை திறம்.</line>
</verse>

<verse>
<line> திறம்பிற்று, இனி அறிந்தேந்தென் அரங்கத்து எந்தை</line>
<line> திறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால், திறம்பாச்</line>
<line> செடி நரகை நீக்கி, தாம் செல்வதன் முன், வானோர்</line>
<line> கடி நகர வாசல்-கதவு.</line>
</verse>

<verse>
<line> கதவி, கதம் சிறந்த கஞ்சனை முன் காய்ந்து;</line>
<line> அதவி, போர் யானை ஓசித்து; பதவியாய்ப்</line>
<line> பாணியால் நீர் ஏற்று, பண்டு ஒருகால் மாவலியை</line>
<line> மாணியாய்க் கொண்டிலையே-மண்?</line>
</verse>

<verse>
<line> மண்ணுலகம் ஆளேனே; வானவர்க்கும் வானவனாய்</line>
<line> விண்ணுலகம்-தன் அகத்தும் மேவேனே-நண்ணித்</line>
<line> திருமாலை, செங்கண் நெடியானை, எங்கள்</line>
<line> பெருமானை, கைதொழுத பின்.</line>
</verse>

<verse>
<line> பின்னால் அரு நரகம் சேராமல், பேதுறுவீர்!</line>
<line> முன்னால் வணங்க முயல்மினோ-பல் நூல்</line>
<line> அளந்தானை, கார்க் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்</line>
<line> அளந்தாநவன் சேவடி.</line>
</verse>

<verse>
<line> அடியால் முன் கஞ்சனைச் செற்று, அமரர் ஏத்தும்</line>
<line> படியான், கொடிமேல் புள் கொண்டான், நெடியாந்தன்</line>
<line> நாமமே ஏத்துமின்கள்: ஏத்தினால், தாம் வேண்டும்</line>
<line> காமமே காட்டும்-கடிது.</line>
</verse>

<verse>
<line> கடிது கொடு நரகம், பிற்காலும் செய்கை</line>
<line> கொடிது என்று, அது கூடாமுன்னம், வடி சங்கம்</line>
<line> கொண்டானை, கூந்தல் வாய் கீண்டானை, கொங்கை நஞ்சு</line>
<line> உண்டானை, ஏத்துமினோ-உற்று.</line>
</verse>

<verse>
<line> உற்று வணங்கித் தொழுமின்: உலகு ஏழும்</line>
<line> முற்றும் விழுங்கும் முகில் வண்ணன், பற்றிப்</line>
<line> பொருந்தாதான் மார்பு இடந்து, பூம் பாடகத்துள்</line>
<line> இருந்தானை ஏத்தும்-என் நெஞ்சு.</line>
</verse>

<verse>
<line> என் நெஞ்சம் மேயான்; என் சென்னியாந்தானவனை</line>
<line> வல் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன், முன்னம் சேய்</line>
<line> ஊழியான், ஊழி பெயர்த்தான், உலகு ஏத்தும்</line>
<line> ஆழியான், அத்தியூரான்.</line>
</verse>

<verse>
<line> அத்தியூரான், புள்ளை ஊர்வான், அணி மணியின்</line>
<line> துத்தி சேர் நாகத்தின்மேல் துயில்வான், முத்தீ</line>
<line> மறை ஆவான், மா கடல் நஞ்சு உண்டாந்தனக்கும்</line>
<line> இறை ஆவாநெங்கள் பிரான்.</line>
</verse>

<verse>
<line> எங்கள் பெருமான், இமையோர் தலைமகன், நீ!</line>
<line> செங்கண் நெடு மால்! திருமார்பா! பொங்கு</line>
<line> பட மூக்கின் ஆயிர-வாய்ப் பாம்பு-அணைமேல் சேர்ந்தாய்-</line>
<line> குடமூக்குக் கோயிலாகக் கொண்டு.</line>
</verse>

<verse>
<line> கொண்டு வளர்க்க, குழவியாய்த் தான் வளர்ந்தது;</line>
<line> உண்டது உலகு ஏழும், உள் ஒடுங்க; கொண்டு</line>
<line> குடம் ஆடி, கோவலனாய் மேவி, என் நெஞ்சம்</line>
<line> இடமாகக் கொண்ட இறை.</line>
</verse>

<verse>
<line> இறை எம் பெருமான்! அருள் என்று, இமையோர்</line>
<line> முறை நின்று, மொய்ம் மலர்கள் தூவ, அறை கழல</line>
<line> சேவடியான், செங்கண் நெடியான், குறள் உருவாய்</line>
<line> மாவடிவின் மண் கொண்டான் மால்.</line>
</verse>

<verse>
<line> மாலே! நெடியோனே! கண்ணனே! விண்ணவர்க்கு</line>
<line> மேலா! வியன் துழாய்க் கண்ணியனே! மேலால்</line>
<line> விளவின் காய் கன்றினால் வீழ்ந்தவனே!-எந்தன்</line>
<line> அளவு அன்றால், யானுடைய அன்பு.</line>
<line> இரண்டாம் திருவந்தாதி முற்றும்.</line>
</verse>

</padiyam>

</thirumozi>

