﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="sidiyar.xsl"?>

<document>

<heading>
<title><line>திருவருட்பயன்</line></title>
</heading>

<verse>
<p-title>கணபதி வணக்கம்</p-title>
<line>நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானங்</line>
<line>கற்குஞ் சரக்கன்று காண்.</line>
</verse>

<verse>
<p-title>1 பதிமுதுநிலை</p-title>

<line>அகர வுயிர்போ லறிவாகி யெங்கு</line>
<line>நிகரிலிறை நிற்கு நிறைந்து.</line>
</verse>

<verse>
<line>தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி</line>
<line>பின்னமிலா னெங்கள் பிரான்.</line>
</verse>

<verse>
<line>பெருமைக்கு நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றி</line>
<line>னருமைக்கு மொப்பின்மை யான்.</line>
</verse>

<verse>
<line>ஆக்கி யெவையு மளித்தா சுடனடங்கப்</line>
<line>போக்குமவன் போகாப் புகல்</line>
</verse>

<verse>
<line>அருவு முருவு மறிஞர்க் கறிவா</line>
<line>முருவு முடையா னுளன்</line>
</verse>

<verse>
<line>பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவ</line>
<line>னில்லாதா னெங்க ளிறை.</line>
</verse>

<verse>
<line>ஆனா வறிவா யகலா னடியவர்க்கு</line>
<line>வானாடர் காணாத மன்.</line>
</verse>

<verse>
<line>எங்கு மெவையு மெரியுறுநீர் போலேகந்</line>
<line>தங்குமவன் றானே தனி.</line>
</verse>

<verse>
<line>நலமில னண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்</line>
<line>சலமிலன் பேர்சங் கரன்</line>
</verse>

<verse>
<line>உன்னுமுள தைய மிலதுணர்வா யோவாது</line>
<line>மன்னுபவந் தீர்க்கு மருந்து.</line>
</verse>

<verse>
<p-title>2 உயிரவைநிலை</p-title>

<line>பிறந்தநாண் மேலும் பிறக்குநாள் போலுந்</line>
<line>துறந்தோர் துறப்போர் தொகை.</line>
</verse>

<verse>
<line>திரிமலத்தா ரொன்றதனிற் சென்றார்க ளன்றி</line>
<line>யொருமலத்தா ராயு முளர்.</line>
</verse>

<verse>
<line>மூன்றுதிறத் துள்ளாரு மூலமலத் துள்ளார்க</line>
<line>டோன்றலர்தொத் துள்ளார் துணை.</line>
</verse>

<verse>
<line>கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கிடுந்</line>
<line>திண்டிறலுக் கென்னோ செயல்</line>
</verse>

<verse>
<line>பொறியின்றி யொன்றும் புணராத புந்திக்</line>
<line>கறிவென்ற பேர்நன் றற.</line>
</verse>

<verse>
<line>ஒளியு மிருளு முலகு மலர்கட்</line>
<line>டெளிவி லெனிலென் செய.</line>
</verse>

<verse>
<line>சத்தசத்தைச் சாரா தசத்தறியா தங்கனிவை</line>
<line>யுய்த்தசத சத்தா முயிர்.</line>
</verse>

<verse>
<line>இருளி லிருளாகி யெல்லிடத்தி னெல்லாம்</line>
<line>பொருள்க ளிலதோ புவி.</line>
</verse>

<verse>
<line>ஊமன்கண் போல வொளியு மிகவிருளே</line>
<line>யாமன்கண் காணா அவை.</line>
</verse>

<verse>
<line>அன்றளவு மாற்றுமுயி ரந்தோ வருடெரிவ</line>
<line>தென்றளவொன் றில்லா விடர்.</line>
</verse>

<verse>
<p-title>3. இருண்மலநிலை</p-title>

<line>துன்றும் பவத்துயரு மின்புந் துணைப்பொருளு</line>
<line>மின்றென்ப தெவ்வாறு மில்.</line>
</verse>

<verse>
<line>இருளான தன்றி யிலதெவையு மேகப்</line>
<line>பொருளாகி நிற்கும் பொருள்.</line>
</verse>

<verse>
<line>ஒரு பொருளுங் காட்டா திருளுருவங் காட்டு</line>
<line>மிருபொருளுங் காட்டா திது.</line>
</verse>

<verse>
<line>அன்றளவி யுள்ளொளியோ டாவி யிடையடங்கி</line>
<line>யின்றளவு நின்ற திருள்.</line>
</verse>

<verse>
<line>பலரைப் புணர்ந்துமிருட் பாவைக்குண் டென்றுங்</line>
<line>கணவர்க்குந் தோன்றாத கற்பு.</line>
</verse>

<verse>
<line>பன்மொழிக ளென்னுணரும் பான்மை தெரியாத</line>
<line>தன்மையிரு ளார்தந் தது.</line>
</verse>

<verse>
<line>இருளின்றேற் றுன்பே னுயிரியல்பேற் போக்கும்</line>
<line>பொருளுண்டே லொன்றாகப் போம்.</line>
</verse>

<verse>
<line>ஆசாதி யேலணைவ காரணமென் முத்திநிலை</line>
<line>பேசாது கவ்வும் பிணி.</line>
</verse>

<verse>
<line>ஒன்று மிகினு மொளிகவரா தேலுள்ள</line>
<line>மென்று மகலா திருள்.</line>
</verse>

<verse>
<line>விடிவா மளவும் விளக்கனைய மாயை</line>
<line>விடிவாதி கன்மத்து வந்து.</line>
</verse>

<verse>
<p-title>4 அருளதுநிலை</p-title>

<line>அருளிற் பெரிய தகிலத்தில் வேண்டும்</line>
<line>பொருளிற் றலையிலது போல்.</line>
</verse>

<verse>
<line>பெருக்க நுகரவினை பேரொளியா யெங்கு</line>
<line>மருக்கனென நிற்கு மருள்.</line>
</verse>

<verse>
<line>ஊனறியா தென்று முயிரறியா தொன்றுமிவை</line>
<line>தானறியா தாரறிவார் தான்.</line>
</verse>

<verse>
<line>பாலாழி மீனாளும் பான்மைத் தருளுயிர்கண்</line>
<line>மாலாழி யாழு மறித்து.</line>
</verse>

<verse>
<line>அணுகு துணையறியா வாற்றோனி லைந்து</line>
<line>முணர்வை யுணரா வுயிர்.</line>
</verse>

<verse>
<line>தரையை யறியாது தாமே திரிவோர்</line>
<line>புரையை யுணரா புவி.</line>
</verse>

<verse>
<line>மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் ஞானந்</line>
<line>தலைகெடுத்தோர் தற்கேடர் தாம்.</line>
</verse>

<verse>
<line>வெள்ளத்து ணாவற்றி யாங்கு விடிந்திருளாங்</line>
<line>கள்ளத் தலைவர் கடன்.</line>
</verse>

<verse>
<line>பரப்பமைந்து கேண்மினிது பாற்கலன்மேற் பூஞை</line>
<line>கரப்பருந்த நாடுங் கடன்.</line>
</verse>

<verse>
<line>இற்றை வரையியைந்து மேதும் பழக்கமிலா</line>
<line>வெற்றுயிர்க்கு வீடு மிகை.</line>
</verse>

<verse>
<p-title>5 அருளுருநிலை</p-title>

<line>அறியாமை யுண்ணின் றளித்ததே காணுங்</line>
<line>குறியாக நீங்காத கோ.</line>
</verse>

<verse>
<line>அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி யதனைச்</line>
<line>சகத்தவருங் காண்பரோ தான்.</line>
</verse>

<verse>
<line>அருளா வகையா லருள்புரிய வந்த</line>
<line>பொருளா ரறிவார் புவி.</line>
</verse>

<verse>
<line>பொய்யிருண்ட சிந்தைப் பொறியிலார் போதமா</line>
<line>மெய்யிரண்டுங் காணார் மிக.</line>
</verse>

<verse>
<line>பார்வையென மாக்களைப் பற்றிப் பிடித்தற்காம்</line>
<line>போர்வையெனக் காணார் புவி.</line>
</verse>

<verse>
<line>எமக்கெ னெவனுக் கெவைதெரியு மவ்வ</line>
<line>தமக்கவனை வேண்டத் தவிர்ம்</line>
</verse>

<verse>
<line>விடனகுல மேவினுமெய்ப் பாவகனின் மீளுங்</line>
<line>கடனிலிருள் போவதிவன் கண்.</line>
</verse>

<verse>
<line>அகலத் தருமருளை யாக்கும் வினை நீக்குஞ்</line>
<line>சகலர்க்கும் வந்தருளுந் தான்.</line>
</verse>

<verse>
<line>ஆரறிவா ரெல்லா மகன்ற நெறியருளும்</line>
<line>பேரறிவான் வாராத பின்.</line>
</verse>

<verse>
<line>ஞான மிவனொழிய நண்ணியிடு நற்கலனல்</line>
<line>பானு வொழியப் படின்.</line>
</verse>

<verse>
<p-title>6 அறியுநெறி</p-title>

<line>நீடு மிருவினையு நேராக நேராதல்</line>
<line>கூடுமிறை சத்தி கொளல்.</line>
</verse>

<verse>
<line>ஏக னநேக னிருள்கரும மாயையிரண்</line>
<line>டாகவிவை யாறாதி யில்.</line>
</verse>

<verse>
<line>செய்வானுஞ் செய்வினையுஞ் சேர்பயனுஞ் சேர்ப்பவனு</line>
<line>முய்வா னுளனென் றுணர்.</line>
</verse>

<verse>
<line>ஊனுயிரால் வாழு மொருமைத்தே யூனொடுயிர்</line>
<line>தானுணர்வோ டொன்றாந் தரம்.</line>
</verse>

<verse>
<line>தன்னிறமும் பன்னிறமுந் தானாங்கற் றன்மைதரும்</line>
<line>பொன்னிறம்போன் மன்னிறமிப் பூ.</line>
</verse>

<verse>
<line>கண்டொல்லை காணுநெறி கண்ணுயிர் நாப்பணிலை</line>
<line>யுண்டில்லை யல்ல தொளி.</line>
</verse>

<verse>
<line>புன்செயலி னோடும் புலன்செயல்போ னின்செயலை</line>
<line>மன்செயல தாக மதி.</line>
</verse>

<verse>
<line>ஓராதே யொன்றையுமுற் றுன்னாதே நீமுந்திப்</line>
<line>பாராதே பார்த்தனைப் பார்.</line>
</verse>

<verse>
<line>களியே மிகுபுல னாக்கருதி ஞான</line>
<line>வொளியே யொளியா வொளி.</line>
</verse>

<verse>
<line>கண்டபடி யேகண்டு காணாமை காணாமை</line>
<line>கொண்டபடி யேகொண் டிரு.</line>
</verse>

<verse>
<p-title>7 உயிரவை விளக்கம்</p-title>

<line>தூண் நிழல்ஆர் தற்காருஞ் சொல்லார் தொகுமிதுபோற்</line>
<line>றானதுவாய் நிற்குந் தரம்.</line>
</verse>

<verse>
<line>தித்திக்கும் கைக்கும் பால்காணுந் திருந்திடுநாப்</line>
<line>பித்தத்திற் றான்றவிர்ந்த பின்.</line>
</verse>

<verse>
<line>காண்பா னொளியிருளிற் காட்டிடவுந் தான்கண்ட</line>
<line>வீண்பாவம் எந்நாள் விடும்.</line>
</verse>

<verse>
<line>ஒளியு மிருளு மொருமைத்துப் பன்மை</line>
<line>தெளிவு தெளியாச் செயல்.</line>
</verse>

<verse>
<line>கிடைக்கத் தகுமேநற் கேண்மையார்க் கெல்லா</line>
<line>மெடுத்துச் சுமப்பானை யின்று.</line>
</verse>

<verse>
<line>வஞ்ச முடனொருவன் வைத்த நிதிகவரத்</line>
<line>துஞ்சினனோ போயினனோ சொல்.</line>
</verse>

<verse>
<line>தனக்குநிழ லின்றா வொளிகவருந் தம்ப</line>
<line>மெனக்கவர நில்லா திருள்.</line>
</verse>

<verse>
<line>உற்கைதரும் பொற்கை யுடையவர்போ லுண்மைப்பி</line>
<line>னிற்கை யருளார் நிலை.</line>
</verse>

<verse>
<line>ஐம்புலனாற் றான்கண்ட தன்றா லதுவொழிய</line>
<line>வைம்புலனார் தாமா ரதற்கு.</line>
</verse>

<verse>
<line>தாமே தருமவரைத் தம்வலியி னாற்கருத</line>
<line>லாமே யிவனா ரதற்கு.</line>
</verse>

<verse>
<p-title>8 இன்புறுநிலை</p-title>

<line>இன்புறுவார் துன்பா ரிருளி லெழுஞ்சுடரின்</line>
<line>பின்புகுவார் முன்புகுவார் பின்.</line>
</verse>

<verse>
<line>இருவர் மடந்தையருக் கென்பயனின் புண்டா</line>
<line>மொருவ னொருத்தி யுறின்.</line>
</verse>

<verse>
<line>இன்பதனை யெய்துவார்க் கீயு மவற்குருவ</line>
<line>மின்பகன மாதலினா லில்.</line>
</verse>

<verse>
<line>தாடலைபோற் கூடியவை தானிகழா வேற்றின்பக்</line>
<line>கூடலைநீ யேகமெனக் கொள்.</line>
</verse>

<verse>
<line>ஒன்றாலு மொன்றா திரண்டாலு மோசையெழா</line>
<line>தென்றாலொன் றன்றிரண்டு மில்.</line>
</verse>

<verse>
<line>உற்றாரும் பெற்றாரு மோவா ருரையொழியப்</line>
<line>பற்றாரு மற்றார் பவம்.</line>
</verse>

<verse>
<line>பேயொன்றுந் தன்மை பிறக்கு மளவுமினி</line>
<line>நீயொன்றுஞ் செய்யாது நில்.</line>
</verse>

<verse>
<line>ஒண்பொருட்க ணுற்றார்க் குறுபயனே யல்லாது</line>
<line>கண்படுப்போர் கைப்பொருள்போற் காண்.</line>
</verse>

<verse>
<line>மூன்றாய தன்மையவர் தம்மின் மிகமுயங்கித்</line>
<line>தோன்றாத வின்பமதென் சொல்.</line>
</verse>

<verse>
<line>இன்பி லினிதென்ற லின்றுண்டே லின்றுண்டா</line>
<line>மன்பி னிலையே யது.</line>
</verse>

<verse>
<p-title>9 ஐந்தெழுத்தருணிலை</p-title>

<line>அருணூலு மாரணமு மல்லாது மைந்தின்</line>
<line>பொருணூ றெரியப் புகின்.</line>
</verse>

<verse>
<line>இறைசத்தி பாச மெழின்மாயை யாவி</line>
<line>யுறநிற்கு மோங்காரத் துள்.</line>
</verse>

<verse>
<line>ஊன நடன மொருபா லொருபாலா</line>
<line>ஞானநடந் தானடுவே நாடு.</line>
</verse>

<verse>
<line>விரியமந மேவியவை மீளவிடா சித்தம்</line>
<line>பெரியவினை தீரிற் பெறும்.</line>
</verse>

<verse>
<line>மாலார் திரோத மலமுதலாய் மாறுமோ</line>
<line>மேலாசி மீளா விடின்.</line>
</verse>

<verse>
<line>ஆராதி யாதார மந்தோ வதுமீண்டு</line>
<line>பாராது மேலோதும் பற்று.</line>
</verse>

<verse>
<line>சிவமுதலே யாமாறு சேருமேற் றீரும்</line>
<line>பவமிதுநீ யோதும் படி.</line>
</verse>

<verse>
<line>வாசி யருளியவை வாழ் விக்கு மற்றதுவே</line>
<line>யாசி லுருவமுமா மங்கு</line>
</verse>

<verse>
<line>ஆசின்நவா நாப்ப ணடையா தருளினால்</line>
<line>வாசியிடை நிற்கை வழக்கு.</line>
</verse>

<verse>
<line>எல்லா வகையு மியம்பு மிவனகன்று</line>
<line>நில்லா வகையை நினைந்து.</line>
</verse>

<verse>
<p-title>10 அணைந்தோர் தன்மை</p-title>

<line>ஓங்குணர்வி னுள்ளடங்கி யுள்ளத்து ளின்பொடுங்கத்</line>
<line>தூங்குவர்மற் றேதுண்டு சொல்.</line>
</verse>

<verse>
<line>ஐந்தொழிலுங் காரணர்க ளாந்தொழிலும் போகநுகர்</line>
<line>வெந்தொழிலு மேவார் மிக.</line>
</verse>

<verse>
<line>எல்லா மறியு மறிவுறினு மீங்கிவரொன்</line>
<line>றல்லா தறியா ரற.</line>
</verse>

<verse>
<line>புலனடக்கித் தம்முதற்கட் புக்குறுவர் போதார்</line>
<line>தலனடக்கு மாமை தக.</line>
</verse>

<verse>
<line>அவனையகன் றெங்கின்றா மாங்கவனா மெங்கு</line>
<line>மிவனையொழிந் துண்டாத லில்.</line>
</verse>

<verse>
<line>உள்ளும் புறம்பு மொருதன்மைக் காட்சியருக்</line>
<line>கெள்ளுந் திறமேது மில்.</line>
</verse>

<verse>
<line>உறுந்தொழிற்குத் தக்க பயனுலகந் தத்தம்</line>
<line>வறுந்தொழிற்கு வாய்மை பயன்.</line>
</verse>

<verse>
<line>ஏன்ற வினையுடலோ டேகுமிடை யேறும்வினை</line>
<line>தோன்றி லருளே சுடும்.</line>
</verse>

<verse>
<line>மும்மை தரும்வினைகண் மூளாவா மூதறிவார்க்</line>
<line>கம்மையு மிம்மையே யாம்.</line>
</verse>

<verse>
<line>கள்ளத் தலைவர் துயர்கருதித் தங்கருணை</line>
<line>வெள்ளத் தலைவர் மிக.</line>
</verse>

</document>
