﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="sidiyar.xsl"?>


<document>

<heading>
<author>கொற்றவன்குடி உமாபதிதேவ நாயனார் அருளிச்செய்த</author>
<title><line>சிவப்பிரகாசம்</line></title>
</heading>

<verse>
<p-title>பாயிரம்</p-title>
<p-title>காப்பு</p-title>

<line>ஒளியான திருமேனி யுமிழ் தான மிகமேவு</line>
<line>களியார வருமானை கழனாளு மறவாம</line>
<line>லளியாளு மலர்தூவு மடியார்க ளுளமான</line>
<line>வெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே.</line>
</verse>

<verse>
<p-title>நடராசர்</p-title>

<line>ஓங்கொளியா யருண்ஞான மூர்த்தி யாகி</line>
<line>	யுலகமெலா மளித்தருளு முமையம்மை காணத்</line>
<line>தேங்கமழு மலரிதழி திங்கள் கங்கை</line>
<line>	திகழரவம் வளர்சடைமேற் சேர வைத்து</line>
</verse>

<verse>
<line>நீங்கலரும் பவத்தொடர்ச்சி நீங்க மன்று</line>
<line>	ணிண்றிமையோர் துதிசெய்ய நிருத்தஞ் செய்யும்</line>
<line>பூங்கமல மலர்த்தாள்கள் சிரத்தின் மேலும்</line>
<line>	புந்தியினு முறவணங்கிப் போற்றல் செய்வாம்.</line>
</verse>

<verse>

</verse>

<verse>
<p-title>சிவகாமியம்மை</p-title>
<line>பரந்தபரா பரையாதி பரன திச்சை</line>
<line>	பரஞானங் கிரியைபர போக ரூபந்</line>
<line>தருங்கருணை யுருவாகி விசுத்தா சுத்தத்</line>
<line>	தனுகரண புவனபோ கங்க டாங்க</line>
<line>விரிந்தவுபா தானங்கண் மேவி யொன்றாய்</line>
<line>	விமலமா யைந்தொழிற்கும் வித்தாய் ஞாலத்</line>
<line>தரந்தைகெட மணிமன்று ளாடல் காணு</line>
<line>	மன்னையருட் பாதமலர் சென்னி வைப்பாம்.</line>
</verse>

<verse>
<p-title>விநாயகர்</p-title>

<line>நலந்தரல்நூ லிருந்தமிழின் செய்யுட் குற்ற</line>
<line>	நன்ணாமை யிடையூறு நலியாமை கருதி</line>
<line>யிலங்குமிரு குசையருகு பொருதுவரி சிதறி</line>
<line>	யிணைவேல்க ளிகழ் ந்தகயற் கண்ணியொடு மிறைவன்</line>
<line>கலந்தருள வருமானை முகத்தான் மும்மைக்</line>
<line>	கடமருவி யெனநிலவு கணபதியி னருளா</line>
<line>லலர்ந்துமது கரமுனிவர் பரவவளர் கமல</line>
<line>	மனையதிரு வடியிணைக ணினைதல் செய்வாம்.</line>
</verse>

<verse>
<p-title>முருகக்கடவுள்</p-title>

<line>வளநிலவு குலவமர ரதிபதியாய் நீல</line>
<line>	மயிலேறி வருமீச னருண்ஞான மதலை</line>
<line>யளவில்பல கலையங்க மாரணங்க ளுணர்ந்த</line>
<line>	வகத்தியனுக் கோத்துரைக்கு மண்ணல்விற லெண்ணா</line>
<line>வுளமருவு சூரனுர மெமதிடும்பை யோங்க</line>
<line>	லொன்றிரண்டு கூறுபட வொளிதிகழ் வே லுகந்த</line>
<line>களபமலி குறமகடன் மணிமுலைகள் கலந்த</line>
<line>	கந்தன்மல ரடியிணைகள் சிந்தை செய்வாம்.</line>
</verse>

<verse>
<p-title>சந்தான பரம்பரை</p-title>

<line>தேவர்பிரான் வளர்கயிலைக் காவல் பூண்ட</line>
<line>	திருநந்தி யவர்கணத்தோர் செல்வர் பாரிற்</line>
<line>பாவியசத் தியஞான தரிசனிக ளடிசேர்</line>
<line>	பரஞ்சோதி மாமுனிகள் பதியா வெண்ணெய்</line>
<line>மேவியசீர் மெய்கண்ட திறலார் மாறா</line>
<line>	விரவுபுக ழருணந்தி விறலார் செல்வத்</line>
<line>தாவிலருண் மறைஞான சம்பந்த ரிவரிச்</line>
<line>	சந்தானத் தெமையாளுந் தன்மை யோரே.</line>
</verse>

<verse>
<p-title>குரு வணக்கம்</p-title>

<line>பார்திகழ வளர்சாம வேத மல்கப்</line>
<line>	பராசரமா முனிமரபு பயில ஞானச்</line>
<line>சார்புதர வந்தருளி யெம்மை யாண்ட</line>
<line>	சைவசிகா மணிமருதைத் தலைவ னந்தண்</line>
<line>கார்மருவு பொழில்புடைசூழ்  மதின்மீதே மதியங்</line>
<line>	கடவாமை நெடுங்கொடியின் கரந்தகையுங் கடந்தைச்</line>
<line>சீர்நிலவு மறைஞான சம்பந்த னெந்தை</line>
<line>	திருவளரு மலரடிகள் சென்னி வைப்பாம்.</line>
</verse>

<verse>
<p-title>நுதலிய பொருள்</p-title>

<line>புறச்சமயத் தவர்க்கிருளா யகச்சமயத் தொளியாய்ப்</line>
<line>	புகலளவைக் களவாகிப் பொற்பணிபோ லபேதப்</line>
<line>பிறப்பிலதா யிருள்வெளிபோற் பேதமுஞ்சொற் பொருள்</line>
<line>	பேதாபே தமுமின்றிப் பெருநூல் சொன்ன		[போற்</line>
</verse>

<verse>
<line>வறத்திறனால் வளைவதா யுடலுயிர்கண் ணருக்க</line>
<line>	னறிவொளிபோற் பிறிவருமத் துவித மாகுஞ்</line>
<line>சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாஞ் சைவ</line>
<line>	சித்தாந்தத் திறனிங்குத் தெரிக்கலுற்றாம்.</line>
</verse>

<verse>
<p-title>தீட்சாக்கிரமம்</p-title>

<line>முவகையா ருயிர்வருக்க மலத்தார் கன்ம</line>
<line>	மூலமலத் தார்மூன்று முடையா ரன்றே</line>
<line>தீவகமா மெனவுருவாய் வந்து நாதன்</line>
<line>	றிருநோக்காற் பரிசத்தாற் றிகழும் வாக்காற்</line>
<line>பாவனையான் மிகுநூலாலி யோகப் பண்பாற்</line>
<line>	பரவிவரு மவுத்திரியாற் பாச நாச</line>
<line>மேவவரு ளுதவுமவுத் திரியிரண்டு திறனாம்</line>
<line>	வியன்கிரியை ஞானமென விளம்பு மாறே.</line>
</verse>

<verse>
<line>விரும்பியமந் திராதிகார மர்ச்சனா திகார</line>
<line>	மேவுமியோ காதிகார மெனச்சமய விசேடம்</line>
<line>வரும்பொருவி னிருவாண மந்திரங்கள் பதங்கள்</line>
<line>	வன்னங்கள் புவனங்க டத்துவங்கள் கலைக</line>
<line>ளிரங்கடைவிற் றொகைபதினொன் றெண்பத்தொண் றைம்பத்</line>
<line>	றிருநூற்றோ டிருபத்தி நாலாறா றைந்திற்		[தொன்</line>
<line>பரந்தநெறி யறுவகையு மொருவிநினை வரிதாம்</line>
<line>	பரபதத்து ளுயிர்விரவப் பயிற்று மன்றே.</line>
</verse>

<verse>
<line>கிரியையென மருவுமவை யாவும் ஞானங்</line>
<line>	கிடைத்தற்கு நிமித்தமெனக் கிளக்கு முண்மைச்</line>
<line>சரியைகிரி யாயோகத் தன்மை யோர்க்குச்</line>
<line>	சாலோக சாமீப சாரூ பங்கண்</line>
<line>மருவியிடு முயர்ஞான மிரண்டா மாறா</line>
<line>	மலமகல வகலாது மன்னு போதத்</line>
<line>திருவருளொன் றொன்றதனைத் தெளிய வோதுஞ்</line>
<line>	சிவாகமமென் றுலகறியச் செப்பும் நூலே.</line>
</verse>

<verse>
<p-title>நூல்வழியும் நூற்பெயரும்</p-title>

<line>தெரித்தகுரு முதல்வருயர் சிவஞான போதஞ்</line>
<line>	செப்பினர்பின் பவர்புதல்வர் சிவஞான சித்தி</line>
<line>விரித்தனர்மற் றவர்கடிரு வடிகள் போற்றி</line>
<line>	விளம்பியநூ லவையிரண்டும் விரும்பி நோக்கிக்</line>
<line>கருத்திலுறை திருவருளு மிறைவ னூலுங்</line>
<line>	கலந்துபொது வுண்மையெனக் கருதி யானு</line>
<line>மருத்திமிக வுரைப்பன்வளர் விருத்த நூறு</line>
<line>	மாசில்சிவப் பிரகாச மாகு மென்றே.</line>
</verse>

<verse>
<p-title>அவையடக்கம்</p-title>

<line>தொன்மையவா மெனுமெவையு நன்றாகா வின்று</line>
<line>	தோன்றியநூ லெனுமெவையுந் தீதாகா துணிந்த</line>
<line>நன்மையினார் நலங்கொண்மணி பொதியுமதன் களங்க</line>
<line>	நவையாகா தெனவுண்மை நயந்திடுவர் நடுவாந்</line>
<line>தன்மையினார் பழமையழ காராய்ந்து தரிப்பர்</line>
<line>	தவறுநலம் பொருளின்கட் சார்வாராய்ந் தறித</line>
<line>லின்மையினார் பலர்புகழி லேத்துவரே திலருற்</line>
<line>	றிகழ் ந்தனரே லிகழ் ந்திடுவர் தமக்கெனவொன் றிலரே.</line>
</verse>


<verse>
<p-title>பொது வியல்பு</p-title>
<p-title>முதற் சூத்திரம்</p-title>
<p-title>பதி யியல்பு</p-title>

<line>பலகலையா கமவேதமி யாவையினுங் கருத்துப்</line>
<line>	பதிபசுபா சந்தெரித்தல் பதிபரமே யதுதா</line>
<line>னிலவுமரு வுருவின்றிக் குணங்குறிக ளின்றி</line>
<line>	நின்மலமா யேகமாய் நித்த மாகி</line>
<line>யலகிலுயிர்க் குணர்வாகி யசல மாகி</line>
<line>	யகண்டிதமா யானந்த வுருவா யன்றிச்</line>
<line>செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த்</line>
<line>	திகழ் வதுதற் சிவமென்பர் தெளிந்து ளோரே</line>
</verse>

<verse>
<line>நீடுபரா சத்திநிக ழிச்சா ஞான</line>
<line>	நிறைகிரியை தரவதனை நிமலன் மேவி</line>
<line>நாடரிய கருணைதிரு வுருவ மாகி</line>
<line>	நவின்றுபல கலைநாத விந்து வாதி</line>
<line>கூடுமொளி வளர்குடிலை மாயை மேவிக்</line>
<line>	கொடுவினைகொ டனுகரண புவன போகம்</line>
<line>பீடுபெற நிறுவியவை யொடுக்கு மேனி</line>
<line>	பிறங்கியநிட் களசகளப் பெற்றி யாமே.</line>
</verse>

<verse>
<line>ஈங்கிதுவென் றதுகடந்த வியல்பி னானு</line>
<line>	மீறுமுத னடுவொன்று மிலாமை யானு</line>
<line>மோங்கிவளர்  ஞானமய னாத லானு</line>
<line>	முண்மைபிறர்க் கறிவரிய வொருமை யானுந்</line>
<line>தாங்கரிய வெறுப்பினொடு விருப்பு மெல்லாஞ்</line>
<line>	சார்வரிய தனிமுதல்வ னாத லானு</line>
<line>நீங்கலரு முயிர்க்குயிராய் நிற்ற லானு</line>
<line>	நிறுத்திடுவ னினைந்தவுரு நிமலன் றானே.</line>
</verse>

<verse>
<line>உலகமெலா மொருவனோ டொருத்தி யொன்றேன்</line>
<line>	றுளதாகி நின்றளவி லொடுங்கும் பின்னு</line>
<line>மலமதனா லுளதாகு முருவ மாறி</line>
<line>	வருவது பேர் வதுசெல்வ தாத லானு</line>
<line>மலைவிலசே தனமாயை யாத லானு</line>
<line>	மணுக்களுரு வடையுமறி விலாமை யானு</line>
<line>நிலவுதொழின் மருவியுரு நிற்ற லானு</line>
<line>	நின்றெவையு மளித்திடுவ னிமலன் றானே.</line>
</verse>

<verse>
<line>கந்தமல ரயன்படைக்கு முலக மெல்லாங்</line>
<line>	கண்ணனளித் திடுமவையெங் கடவு டானே</line>
<line>யந்தமுற வழித்திடுவ னாத லாலே</line>
<line>	யயனரியு மவனதுய ராதிகா ரத்து</line>
<line>வந்தமுறை தன்றொழிலே மன்னுவிப்ப னெல்லாம்</line>
<line>	வருவிப்பன் விகாரங்கன் மருவான் வானின்</line>
<line>முந்திரவி யெதிர்முளரி யலர்வுறுமொன் றலர்வான்</line>
<line>	முகையாமொன் றொன்றுலரு முறையி னாமே.</line>
</verse>

<verse>
<line>ஏற்றவிவை யரனருளின் றிருவிளையாட் டாக</line>
<line>	வியம்புவர்க ளணுக்களிடர்க் கடனின்று மெடுத்தே</line>
<line>யூற்றமிக வருள்புரித லேது வாக</line>
<line>	வுரைசெய்வ ரொடுக்கமிளைப் பொழித்தன் மற்றைத்</line>
<line>தோற்றமல பாகம்வரக் காத்தல் போகந்</line>
<line>	துய்ப்பித்த றிரோதாயி தக நிறுத்த லாகும்</line>
<line>போற்றவரு மருளருளே யன்றி மற்றுப்</line>
<line>	புகன்றவையு மருளொழியப் புகலொ ணாதே.</line>
</verse>


<verse>
<p-title>இரண்டாஞ் சூத்திரம்</p-title>
<p-title>பசு வியல்பு</p-title>

<line>எண்ணரிதாய் நித்தமா யிருண்மலத்தி னழுந்தி</line>
<line>	யிருவினையின் றன்மைகளுக் கீடான யாக்கை</line>
<line>யண்ணலரு ளானண்ணி யவையவரா யதனா</line>
<line>	லலகினிகழ்  போகங்க ளருந்து மாற்றாற்</line>
<line>புண்ணியபா வம்புரிந்து போக்குவர வுடைத்தாய்ப்</line>
<line>	புணருமிருண் மலபாகம் பொருந்தியக்கா லருளா</line>
<line>லுண்ணிலவு மொளியதனா லிருளகற்றிப் பாத</line>
<line>	முற்றிடுநற் பசுவருக்க மெனவுரைப்ப ருணர்ந்தோர்.</line>
</verse>

<verse>
<p-title>பாச வியல்பு</p-title>

<line>ஏகமாய்த் தங்கால வெல்லைகளின் மீளு</line>
<line>	மெண்ணரிய சத்தியதா யிருளொளிர விருண்ட</line>
<line>மோகமாய்ச் செம்பிலுறு களிம்பேய்ந்து நித்த</line>
<line>	மூலமல மாயறிவு முழுதினையு மறைக்கும்</line>
<line>பாகமாம் வகைநின்று திரோதான சத்தி</line>
<line>	பண்ணுதலான் மலமெனவும் பகர்வரது பரிந்து</line>
<line>நாகமா நதிமதியம் பொதிசடையா னடிக</line>
<line>	ணணுகும்வகை கருணைமிக நயக்குந் தானே.</line>
</verse>

<verse>
<line>உன்னலரும் பரசிவன்ற னருளாலே நாத</line>
<line>	முதிக்கு மிருங் குடிலைதனில் விந்துவரு நாதந்</line>
<line>தன்னிலதி னொளிவளருஞ் சதாசிவரா மவரிற்</line>
<line>	றயங்கவரு மீசர்வித்தை தனையளிப்ப ரதனான்</line>
<line>மன்னுவரிவ் வகையைவர் வாய்மையினான் முன்னே</line>
<line>	வந்திடுமென் றுரைசெய்த விந்துவழா வகையே</line>
<line>முன்னுதவுஞ் சூக்குமாதி யொருநான்கு மென்று</line>
<line>	மொழிந்திடுவ ரருங்கலைகன் முதிர்ந்து ளோரே.</line>
</verse>

<verse>
<line>உருவாதி சதுர்விதமா யொன்றொன் றொவ்வா</line>
<line>	வுண்மையதாய் நித்தமா யொன்றா யென்று</line>
<line>மருவாகிக் கன்மாந்த மணுக்களி யார்க்கு</line>
<line>	மாவார மாயசித்தா யசல மாகி</line>
<line>விரிவாய தன்செயலின் வியாபியா யெல்லாம்</line>
<line>	விரிந்தவகை புரிந்தடைவின் மேவியவை யொடுங்க</line>
<line>வருகால முயிர்களெல்லா மருவிடமாய் மலமாய்</line>
<line>	மன்னியிடு மரனருளான் மாயை தானே.</line>
</verse>

<verse>
<line>என்னையிது வெனினுலகுக் குபாதான மில்லை</line>
<line>	யிறைவனல தெனினசித்துச் சித்தினிடத் துதியா</line>
<line>மன்னியுள தேன்முதல்வ னென்கொ லென்னின்</line>
<line>	மாயைதா னசித்துருவாய் மருவ மாட்டா</line>
<line>தன்னவனு மிதுவொழிய வாக்க மாட்டா</line>
<line>	னசத்தனா மெனினதுவு மவன்போ னித்த</line>
<line>முன்னவனவ் வசித்தைவிரித் தெவையு மாக்கு</line>
<line>	முதன்மையது கொடுத்ததென மொழிந்தி டாரே.</line>
</verse>

<verse>
<line>படைத்ததொரு படியின்றிப் பறவைபசு நரராப்</line>
<line>	பண்ணியதென் முன்னைவினைப் பான்மை யென்ப</line>
<line>ரடுத்தவினை யுளதாயி னிறையே னென்னி</line>
<line>	லசேதனமற் றவையாவிக் கமைந்த தாகு</line>
<line>மெடுத்தவினை யுருவுறுவ துயிரேற் றானே</line>
<line>	யிருவினைக்குத் தக்கவுட லெய்து மென்னிற்</line>
<line>சடத்திரளு மகர்த்தாவா யறிவொன் றில்லாத்</line>
<line>	தன்மையனுங் கூடவொரு சங்கை யின்றே.</line>
</verse>

<verse>
<line>அல்லன்மிக வுயிர்க்கிவைதா னணைத்த தீச</line>
<line>	னருவினைக ளருந்துதற்கோ வினையோ வன்றிச்</line>
<line>சொல்லிவரு மாயையோ வணுவை முந்தச்</line>
<line>	சூழ் ந்ததெனு முரைமுதலோர் தொடக்கி லார்பா</line>
<line>லொல்லைவரு மெனினுளதா முயிருண் டாவே</line>
<line>	யுளதுமல மலமுளதா வொழிந்த வெல்லா</line>
<line>நெல்லின்முளை தவிடுமிபோ லநாதி யாக</line>
<line>	நிறுத்திடுவ ரிதுசைவ நிகழ் த்து மாறே.</line>
</verse>

<verse>
<line>அருத்திமிகுங் கலைகால நியதியுடன் வித்தை	</line>
<line>	யராகமிவை யனந்தரான் மாயைதனி லாகு</line>
<line>முருத்திரராற் கலையதனிற் பிரகிருதி குணங்க</line>
<line>	ளுளவாகு மாங்காரம் புந்திதனி லுதிக்குந்</line>
<line>தெரித்தவிது திரிவிதமாந் தைசதம்வை காரி</line>
<line>	திகழ் தருபூ தாதியெனத் திருந்தியசாத் துவிதம்</line>
<line>விரித்தகுண மனம்புத்தி யிந்திரிய மென்று</line>
<line>	விளம்பியசோத் திராதிமுதல் விளங்கியிடும் விரிந்தே.</line>
</verse>

<verse>
<line>மன்னியகன் மேந்திரிய மானவிரா சதஞ்சேர்</line>
<line>	வாக்காதி வைகாரி மருவிவருஞ் சத்தந்</line>
<line>தன்னைமுத லாகியதா மதமிகுமாத் திரைபின்</line>
<line>	றரு மதனின் வானநில மனல்புனன்மண் சத்த</line>
<line>முன்னதனில் வெளியாதி யொன்றொன் றாக</line>
<line>	முறையிலுறு மிருமையயன் முடிவா முன்னே</line>
<line>யுன்னுசதா சிவராதி யதிபதிக ளொடுக்க</line>
<line>	முதித்தவடை வெனவுரைப்ப ருணர்ந்து ளோரே.</line>
</verse>

<verse>
<line>நண்ணியிடு முருவதனுக் கேது வாகி</line>
<line>	னாபோ கங்களாய் நாசோற் பத்தி</line>
<line>பண்ணிவரு மாதலா லநாதி யாகிப்</line>
<line>	பலவாகி யணுக்கடொறும் படர்வ தாகி</line>
<line>யெண்ணிவரு மனவாச கன்மத்தா லியற்று</line>
<line>	மியல்பினதாய் மதிகதமா யிருபயனாம் பாவ</line>
<line>புண்ணியமாய்ப் புலர்காலை மாயை மேவிப்</line>
<line>	பொருந்துமிது கன்மமலம் புகலு மாறே.</line>
</verse>

<verse>
<line>கன்மநெறி திரிவிதநற் சாதியாயுப் போகக்</line>
<line>	கடனதென வருமூன்று முயிரொன்றிற் கலத்த</line>
<line>றொன்மையதூ ழல்லதுண வாகா கானுந்</line>
<line>	தொடங்கடைவி னடையாதே தோன்று மாறித்</line>
<line>தன்மைதரு தெய்விகமுற் பெளதிகமான் மிகமாந்</line>
<line>	தகையிலுறு மசேதனசே தனத்தாலுஞ் சாரு</line>
<line>நன்மையொடு தீமைதரு சேதனனுக் கிவணூ</line>
<line>	ணாடிலத னூழ் வினையா நணுகுந் தானே.</line>
</verse>

<verse>
<line>மேலைக்கு வருவினையே தென்னி னங்கண்</line>
<line>	விருப்புவெறுப் பெனவறியவ் விளைவு மெல்லா</line>
<line>மூலத்த வினைப்பயில்வா மென்னி னாமேன்</line>
<line>	முற்றியதன் பயனுனக்கு முளைக்கு மென்பர்</line>
<line>ஞாலத்து வினைகளிரு திறனாகும் புந்தி</line>
<line>	நண்ணாத வினைநணுகும் வினையெனவொன் றிரண்டா</line>
<line>யேலத்தா னிதமகித மாமிதனால் வழுவா</line>
<line>	தெய்தியிடும் புண்ணியபா வங்க ளென்றே.</line>
</verse>

<verse>
<line>உற்றதொழி னினைவுரையி னிருவினையு முளவா</line>
<line>	மொன்றொன்றா லழியாதூ ணொழியா துன்னின்</line>
<line>மற்றவற்றி னொருவினைக்கோர் வினையால் வீடு</line>
<line>	வைதிகசை வம்பகரு மரபி லாற்றப்</line>
<line>பற்றியது கழியுமிது விலையா லேற்கும்</line>
<line>	பான்மையுமாம் பண்ணாதும் பலிக்கு முன்னஞ் </line>
<line>சொற்றருநூல் வழியின்வரின் மிகுதி சோருஞ்</line>
<line>	சோராதங் கதுமேலைத் தொடர்ச்சி யாமே.</line>
</verse>

<verse>
<line>மோகமிக வுயிர்கடொறு முடனாய் நிற்கு</line>
<line>	மூலவ ணவமொன்று முயங்கிநின்று</line>
<line>பாகமிக வுதவுதிரோ தாயி யொன்று</line>
<line>	பகர்மாயை யொன்றுபடர் கன்ம மொன்று</line>
<line>தேகமுறு காரணமொடு புவன போகச்</line>
<line>	செயலாரு மாமாயைத் திரட்சி யொன்றென்</line>
<line>றாகமல மைந்தென்ப ரைந்து மாறா</line>
<line>	தருளென்ப தரிதென்ப ரறிந்து ளோரே.</line>
</verse>

<verse>
<p-title>அவத்தை வியல்பு</p-title>

<line>ஓங்கிவரும் பலவுயிர்கண் மூன்றவத்தை பற்றி</line>
<line>	யுற்றிடுங்கே வலசகல சுத்தமென வுணர்க</line>
<line>வீங்குவருங் கலாதியொடு குறியுருவ மொன்று</line>
<line>	மின்றிமல மன்றியொன்று மில்லையெனு மியல்பா</line>
<line>யாங்கறிவை யறிவரிதாய் அறிகருவி யணையா</line>
<line>	வாதலினா லிருண்மருவு மலர்விழிபோ லதுவாய்</line>
<line>நீங்கும்வகை யின்றி நித்த வியாபகமா யங்க</line>
<line>	ணிற்பதுகே வலமென்று நிகழ் த்து நூலே.</line>
</verse>

<verse>
<line>இன்மைமல மாயைகன்ம மென்றிரண்டே யிறைதா</line>
<line>	னிலங்குபல வுயிர்களுமுன் புரிந்தவிரு வினையின்</line>
<line>றன்மைகளா லெவர்களுக்குந் தனுகரண புவனந்</line>
<line>	தந்திடுமிங் கதனாலே யிருபயனுஞ் சார்ந்து</line>
<line>கன்மமெலா நேராக நேராதன் மருவக்</line>
<line>	கடவுளரு ளாலெவையுங் கழித்திடுவ னதனாற்</line>
<line>பின்மலமா னவையணுகா பெருகொளிமுன் புளதே</line>
<line>	பெற்றிடுமென் றித்திறமென் பேசு மாறே.</line>
</verse>

<verse>
<line>மாயைமுத லெனவினையின் பான்மைமுத லெனவே</line>
<line>	மன்னுபனை விதைமரபின் மயங்குமலஞ் சுத்தற்</line>
<line>கேயுநெறி யென்கொலத னியல்பாயின் முத்தி</line>
<line>	யென்பதென்மற் றிவைநிற்க விருங்கலாதி யுணர்வாய</line>
<line>மேய பினர்த் தன்னுருவம் விளங்காமை விளக்கு</line>
<line>	மிகுமுலகந் தனிலென்னி லிவைவிடுங்கா லுணர்வுட்</line>
<line>டோயுநெறி யிலதாத லறியாமை யெனநீ</line>
<line>	சொல்லியது மலமென்பர் துணிந்து ளோரே.</line>
</verse>

<verse>
<line>அந்நியமா னவையுணர்த்தி யநந்நியமாய் நிறைந்த</line>
<line>	வறிவறியா மையினானு மருணிலவுங் காலந்</line>
<line>தன்னிலவ னேயாவு மாய்நின்ற தொன்மை</line>
<line>	தாமுணர்த லானுமுயிர் தானெனவொன் றிலதாய்</line>
<line>மன்னியிடு மலமாயை கன்மங்கண் மாறி</line>
<line>	வந்திடுமிங் கிதுவழுவா தாதலினான் மனத்தா</line>
<line>லுன்னரிய திருவருளை யொழியமல முளதென்</line>
<line>	றுணர்வரிதா மதனுண்மை தெரிவரிதா முனக்கே.</line>
</verse>

<verse>
<line>புகலுமல மொழித்தற்குக் கலாதிமுதன் மாயை</line>
<line>	பொருந்தியிடு மரனருளாற் போதந் தீபஞ்</line>
<line>சகலமெலா முடனாய வாறு போலுந்</line>
<line>	தருமருளை மலமுயிர்கள் சாராமன் மறைக்கு</line>
<line>மிகலிவரு மிவையுணரி னிருள்வெளியாந் தன்மை</line>
<line>	யெய்தும் வகை தன்செய்தி யிலங்கும் விந்து</line>
<line>பகர்வரிய வுணர்வாகி யொளியா யுள்ளப்</line>
<line>	பான்மையினா லொருநாதம் படருந் தானே.</line>
</verse>

<verse>
<line>வந்தடைந்து பின்னமாய் வன்னங்க டோற்றம்</line>
<line>	வருமடைவு படவொடுக்கி மயிலண்ட சலநேர்</line>
<line>சிந்தைதனி லுணர்வாகும் பைசந்தி யுயிரிற்</line>
<line>	சேர்ந்துவரு மவைமருவு முருவெவையுந் தெரித்து</line>
<line>முந்தியிடுஞ் செவியிலுறா துள்ளுணர்வா யோசை</line>
<line>	முழங்கியிடு மத்திமைதான் வைகரியி லுதானன்</line>
<line>பந்தமுறு முயிரணைந்து வந்தமொழி செவியின்</line>
<line>	பாலணைய நினைந்தபொருள் பகருந் தானே.</line>
</verse>

<verse>
<line>இத்தகைமை யிறையருளா லுயிரறியு மறிவுக்</line>
<line>	கீடாக வாடாதே யீரிரண்டா னுரைத்த</line>
<line>வித்தைமுத லைவரான் விளங்கு ஞான</line>
<line>	மேவியிடு மெனவுரைப்ப ரசுத்த மாயை</line>
<line>வைத்தகலை தான்மூல மலஞ்சிறிதே நீக்கி</line>
<line>	மருவும்வகை தெரிவிக்கும் வாயில்களின் பயனைப்</line>
<line>புத்திதர வித்தையிடை நின்றறிவை யுயிர்க்குப்</line>
<line>	பொருந்தியிடும் வகைபுணரும் புனிதசத்தி புணர்ந்தே.</line>
</verse>

<verse>
<line>பேசரிய வராகந்தன் கன்மத்துக் கீடாப்</line>
<line>	பெற்றதனி லாசைதனைப் பெருகுவிக்கு நியதி</line>
<line>தேசமிகு மரசர்தரு மாணை செய்தி</line>
<line>	செய்தவரைத் துய்ப்பிக்குஞ் செய்கை போல</line>
<line>நேசமுறு தங்கன்ம நிச்சயித்து நிறுத்து</line>
<line>	நிகழ் காலங் கழிகால மெதிர்கால மென்றே</line>
<line>யோசைதர வருங்கால மெல்லைபலம் புதுமை</line>
<line>	யுறுவிக்கு மிறைசத்தி யுடனாய் நின்றே.</line>
</verse>

<verse>
<line>ஐவகையா லுறுபயன்க ணுகரவருங் கால</line>
<line>	மதுபுருட தத்துவமென் றறைந்திடுவ ரறிந்தோர்</line>
<line>மெய்வகைய கலாசுத்தி தனினிதற்குஞ் சுத்தி</line>
<line>	மேவியிடும் வகைதானும் விரும்பியநூல் விளம்புஞ்</line>
<line>செய்வகையின் றொடர்ச்சியிங்குத் தோற்றுவிக்குங் குணத்</line>
<line>	சேர்வுபுரி பிரகிருதி திரிகுணமா மவைதா		[தின்</line>
<line>மிவ்வகையிற் சாத்துவித ராசததா மதமா</line>
<line>	யியம்புவர்க ளொன்றிரண்டு குணமேற்கையுடைத்தே.</line>
</verse>

<verse>
<line>அலகில்குணம் பிரகாசம் லகுதைவியா விருதி</line>
<line>	யடர்ச்சிமிகுங் கவுரவம நியமமிவை யடைவே</line>
<line>நிலவியிடு மும்மூன்று முயிரொன்றிற் கலந்தே</line>
<line>	நிற்குமிவை நிறைபுலனின் பயனெவையுங் கவருங்</line>
<line>குலவிவரு போகங்கொ ளிடமா மாறாக்</line>
<line>	குறைவிலொளி யாமலகில் புலனிடத்தி னொருமை</line>
<line>பலவகையு முடையதாய்ப் பரனருளாற் புந்தி</line>
<line>	பஞ்சாசற் பாவகமும் பண்ணுவிக்குந் தானே.</line>
</verse>

<verse>
<line>ஆனதனு வதனிலுறு மநிலனையு மியக்கி</line>
<line>	யாங்கார நீங்காத வகந்தைக்கு வித்தா</line>
<line>யானலது பிறரொருவ ரெனையொப்பார் புவியி	</line>
<line>	னில்லையெனு மியல்பினதா யிந்திரியம் புலன்க</line>
<line>டானுகரு மளவிலதின் முந்தியுறு மிச்சை</line>
<line>	தானுருவாய்ச் சங்கற்ப சதாகதியுந் தந்து</line>
<line>மானதமா னதுநிற்குஞ் சிந்தைநினை வையம்</line>
<line>	வந்துதரு மனமொழிய வகுப்பொ ணாதே.</line>
</verse>

<verse>
<line>சொன்னமுறை செவிதுவக்கு நோக்கு நாக்குத்</line>
<line>	துண்டமிவை யைந்திற்குந் தொகுவிடய மாக</line>
<line>மன்னியசத் தப்பரிச ரூபரச கந்த</line>
<line>	மருவியிடு மிவையடைவே வாக்குப் பாதம்</line>
<line>பின்னர்வரு பாணிமிகு பாயுவினோ டுபத்தம்</line>
<line>	பேசலுறு மைந்திற்கும் பிறங்கொலிகொள் வசன</line>
<line>முன்னரிய கமனதா னவிசர்க்கா னந்த</line>
<line>	முற்றதொழில் பெற்றிடுவ துண்மை யாமே.</line>
</verse>

<verse>
<line>முந்தியவைம் பூதங்கள் வானாதி யாக</line>
<line>	முயங்கியநற் செவிமெய்கண் ணாநாசி முறையா</line>
<line>லிந்தவயி னின்றுவரு மைம்புலனு முயிர்தா</line>
<line>	மெய்தும்வகை தம்முருவி னிலங்கியிடும் புறத்து</line>
<line>வந்தடைய விடங்கொடுக்கு மிரந்தரமாய் வானம்</line>
<line>	வாயுமிகச் சலித்தெவையுந் திரட்டுந்தீ வெம்மை</line>
<line>தந்தவைசுட் டொன்றுவிக்கு நீர்குளிர்ந்து பதமே</line>
<line>	தருமுரத்துத் தரிக்குமிகு தரணி தானே.</line>
</verse>

<verse>
<line>இந்நிரையி லைந்துசுத்த மேழ் சுத்தா சுத்த</line>
<line>	மெண்மூன்று மசுத்தமெனு மிவைமுப்பத் தாறா</line>
<line>மன்னியதத் துவங்களிடை மயங்கிநெடுந் துயர்தா</line>
<line>	மருவுமுரு நிலையழிய வரும்பொழுது வரியார்</line>
<line>பன்னகமண் டசங்கனவு படர்வகையே முன்னம்</line>
<line>	பகரவருங் கலாதிநிலை பரவியசூக் குமமாந்</line>
<line>தன்னுருவி லணைந்துபய னருந்தியர னருளாற்</line>
<line>	றரையினிடை வருமென்று சாற்று நூலே.</line>
</verse>

<verse>
<line>தோற்றியிடு மண்டசங்கள் சுவேதசங்கள் பாரிற்</line>
<line>	றுதைந்துவரு முற்பீசஞ் சராயுசங்க ணான்கி</line>
<line>னூற்றமிகு தாபரங்கள் பத்தொன்ப தென்று</line>
<line>	மூர்வபதி னைந்தமரர் பதினொன்றொ டுலவா</line>
<line>மாற்றருநீ ருறைவனநற் பறவைகணாற் காலி</line>
<line>	மன்னியிடும் பப்பத்து மானுடரொன் பதுமா</line>
<line>வேற்றியொரு தொகையதனி லியம்புவர்கள் யோனி</line>
<line>	யெண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே.</line>
</verse>

<verse>
<line>இனையபல பிறவிகளி னிறந்துபிறந் தருளா</line>
<line>	லிருவினைகள் புரிந்தருந்து மிதுசகலம் அகலா</line>
<line>முனமருவு மிருபயனு மொருகாலத் தருந்த</line>
<line>	முந்துநுக ருந்துபய னந்தமுற வந்த</line>
<line>வினையுமெதிர் வினையுமுடி வினையுதவு பயனா</line>
<line>	னேராக நேராதன் மேவுங் கான்முற்</line>
<line>சினமருவு திரோதாயி கருணை யாகித்</line>
<line>	திருந்தியசத் திநிபாதந் திகழு மன்றே.</line>
</verse>

<verse>
<line>நாடியசத் திநிபாத நாலு பாத</line>
<line>	நண்ணும்வகை யெண்ணரிய ஞான பாதங்</line>
<line>கூடுமவர் தமக்குணர்வாய் நின்ற ஞானக்</line>
<line>	கூத்தனொரு மூர்த்திகொடு குறுகி மோக</line>
<line>நீடியகே வலசகல நிகழா வாறு</line>
<line>	நிறுத்திமல மறுக்குமிது நிலையார் சுத்தங்</line>
<line>கேடில்புகழ்  தருஞ்சரியை கிரியா யோகக்</line>
<line>	கேண்மையரே லிவையுணர்த்தக் கிளக்கு நூலே.</line>
</verse>

<verse>
<p-title>முத்தி பேதங்களதியல்பு</p-title>

<line>அரிவையரின் புறுமுத்தி கந்த மைந்து</line>
<line>	மறுமுத்தி திரிகுணமு மடங்கு முத்தி</line>
<line>விரவுவினை கெடுமுத்தி மலம்போ முத்தி</line>
<line>	விக்கிரக நித்தமுத்தி விவேக முத்தி</line>
<line>பரவுமுயிர் கெடுமுத்தி சித்தி முத்தி</line>
<line>	பாடாண முத்தியிவை பழிசேர் முத்தி</line>
<line>திரிமலமு மகலவுயி ரருள்சேர் முத்தி</line>
<line>	திகழ் முத்தி யிதுமுத்தித் திறத்த தாமே.</line>
</verse>

<verse>

</verse>

<verse>
<p-title>உண்மையியல்பு</p-title>
<p-title>இவ் யலின் வகை</p-title>

<line>இங்கிவை பொதுவி யம்பு மென்பர்க ளிதன்மேல் ஆன்மாத்</line>
<line>தங்கிய அஞ்ச வத்தை தன்னுண்மை உணர்த்துந்</line>
<line>							தன்மை</line>
<line>பொங்கொளி ஞான வாய்மை அதன்பயன் புனித னாம</line>
<line>மங்கதில் அணைந்தோர் தன்மை யறைகுவ னருளி னாலே.</line>
</verse>


<verse>
<p-title>மூன்றாஞ் சூத்திரம்</p-title>
<p-title>1. ஆன்மா</p-title>

<line>செறிந்திடு முடலுண் மன்னிச் சேர்புலன் வாயில் பற்றி</line>
<line>யறிந்ததி லழுந்து மொன்று மறிந்திடா தறியுந் தன்மை</line>
<line>பிறிந்தடை வஞ்ச வத்தை பெருகிய மலத்தாற் பேணி</line>
<line>யுறுந்தனி யதீத முண்மை யுயிர்க்கென வுணர்த்து மன்றே.</line>
</verse>

<verse>
<line>உருவுணர் விலாமை யானு மோரொரு புலன்க ளாக</line>
<line>மருவிநின் றறித லானு மனாதிக டம்மின் மன்னித்</line>
<line>தருபய னுகர்த லானு முயிர்சட மாதலானு</line>
<line>மருவினை யுடலு ளாவி யறிவினா லறியு மன்றே.</line>
</verse>

<verse>
<line>அறிவெனில் வாயில் வேண்டா வன்றெனி லவைதாமென்னை</line>
<line>யறிவவை யுதவு மென்னி லசேதன மவைதா மெல்லா</line>
<line>மறிபவ னறியுந் தன்மை யருளுவ னென்னி லான்மா</line>
<line>வறிவில தாகு மீச னசேதனத் தளித்தி டானே.</line>
</verse>

<verse>
<line>அறிவினா லறிந்த யாவு மசத்தாத லறிதி யென்று</line>
<line>மறிவினா லறியொ ணாதே லாவதொன் றின்மை தொன்மை</line>
<line>யறிவுதா னொன்றை முந்தி யதுவது வாகக் காணு</line>
<line>மறிவுகா ணசத்து மற்ற தறிவினுக் கறியொ ணாதே.</line>
</verse>

<verse>
<line>எவ்வறி வசத்த றிந்த தெனிலுயி ரறியா தீச</line>
<line>னவ்வறி வறியா னல்ல தசேதன மறியா தாவி</line>
<line>செவ்விய கருவி கூடிற் றெரிவுறா தருளிற் சேரா</line>
<line>துவ்விரு வகைய தென்னி லொளியிரு ளொருங்கு றாவே.</line>
</verse>

<verse>
<line>சத்திது வென்ற சத்துத் தானறி யாத சத்தைச்</line>
<line>சத்தறிந் தகல வேண்டா வசத்திது சத்தி தென்றோர்</line>
<line>சத்திரு ளொளிய லாக்கண் டன்மைய தாம சத்தைச்</line>
<line>சத்துட னின்று நீக்குந் தன்மையாற் சதசத் தாமே.</line>
</verse>

<verse>
<line>கண்ணொளி விளக்க ளித்துக் காட்டிடு மென்னின் முன்னங்</line>
<line>கண்ணொளி யொன்று மின்றாம் விளக்கொளி கலந்தவற்றைக்</line>
<line>கண்ணொளி யகல நின்றே கண்டிடும் வேறு காணாக்</line>
<line>கண்ணொளி விளக்கின் சோதி கலந்திடுங் கருத்தொன் றன்றே</line>
</verse>

<verse>
<line>ஓரிடத் திருத்தன் மாயா வுருநிறைந் திடுத லொன்றாம்</line>
<line>பேரிடத் துறைத றானே பிறங்கறி வாகி நிற்றல்</line>
<line>சோர்வுடைச் சடநி கழ் த்த லெனுமிவை சொல்லார் நல்லோ</line>
<line>ரோரிடத் துணரு முண்மை யொளிர்தரு முபலம் போலும்.</line>
</verse>


<verse>
<p-title>நான்காஞ் சூத்திரம்</p-title>
<p-title>2. அஞ்சவத்தை</p-title>

<line>எண்ணவொன் றிலாத தீத மெய்திய துரியத் தொன்று</line>
<line>நண்ணிடுஞ் சுழுத்தி தன்னி னயந்துள தொன்று பின்னு</line>
<line>மண்ணிடுங் கனவு தன்னி லாறேழாஞ் சாக்கி ரத்திற்</line>
<line>கண்ணுறு மஞ்சா றாய கருவிகள் மருவுந் தானே.</line>
</verse>

<verse>
<line>இவ்வகை யவத்தை தன்னி லெய்திடுங் கரண மெல்லா</line>
<line>மெய்வகை யிடத்தி லுற்று மேவுமா கண்டு மிக்க</line>
<line>பொய்வகைப் பவம கற்றப் புரிந்திடி லருளா லாங்கே</line>
<line>யைவகை யவத்தை யுய்க்கு மறிவினா லறிந்து கொள்ளே.</line>
</verse>

<verse>
<line>நீக்கமி லதீத மாசு நிறைந்தகே வலமா நீர்மை</line>
<line>சாக்கிரங் கலாதி சேர்ந்த சகலமாந் தன்மை யாகு</line>
<line>மூக்கமி லிரண்டுங் கூடா தொழியவோர் நிலையி னீடுஞ்</line>
<line>சாக்கி ராதீதஞ் சுத்தத் தகைமைய தாகுந் தானே.</line>
</verse>


<verse>
<p-title>ஐந்தாஞ் சூத்திரம்</p-title>
<p-title>3. தன்னுண்மை</p-title>

<line>மருவிய பொறியி லொன்று மாபூத மைந்தி லொன்றுங்</line>
<line>கருவிக ணான்கு நீங்காக் கலாதிக ளைந்துங் கூடி</line>
<line>யொருபுல னுகரு மிந்த வொழுங்கொழிந் துயிரு மொன்றைத்</line>
<line>தெரிவுறா தவனொ ழிந்தத் திரள்களுஞ் செயலி லாவே.</line>
</verse>

<verse>
<line>தனக்கென வறிவி லாதான் றானிவை யறிந்து சாரான்</line>
<line>றனக்கென வறிவி லாத வாயிறா னறியா சாரத்</line>
<line>தனக்கென வறிவி லாதான் தத்துவ வன்ன ரூபன்</line>
<line>றனக்கென வறிவா னாலிச் சகலமு நுகருந் தானே.</line>
</verse>

<verse>
<p-title>4. உணர்த்துந் தன்மை</p-title>

<line>கண்டுணர் புலன்கள் காணுங் கருத்தினா லொருத்தன்</line>
<line>								ஞானங்</line>
<line>கொண்டுள மறியு மென்னிற் கொள்பவன் முதலி யாகு</line>
<line>மண்டிய வுணர்வு யிர்க்கா மன்னிநின் றறியு மென்னி</line>
<line>லுண்டிட வேண்டு வானுக் கொருவன்வே றுண்ட லாமே.</line>
</verse>

<verse>
<line>இருணனி யிரவி தான்வந் திரித்தலு மிரவி லெண்ணும்</line>
<line>பொருணிலை கண்டு மாந்தர் பொருந்திடு மாறு போல</line>
<line>மருணிலை யெங்கு நீங்க மகிழ் ந்துயிர் தன்னுண் மன்னு</line>
<line>மருளையு மொழிய ஞாலத் தறிந்தவா றறியு மன்றே.</line>
</verse>

<verse>
<line>அறிந்திடு மனாதி வாயி லானவை யவன்ற னாலே</line>
<line>யறிந்திடு மென்று மொன்று மறிந்திடா வவைபோலி யாவு</line>
<line>மறிந்திடு மறியுந் தன்மை யறிந்திடா கன்மத் தொன்மை</line>
<line>யறிந்தவை நுகரு மாறு மருளுவ னமலன் றானே.</line>
</verse>


<verse>
<p-title>ஆறாஞ் சூத்திரம்</p-title>
<p-title>5. ஞான வாய்மை</p-title>

<line>காட்டிடுங் கரண மொன்று மில்லையேற் காணொ ணாதா</line>
<line>னாட்டிய விவற்றான் ஞான நணுகவு மொண்ணா முன்ன</line>
<line>மீட்டிய தவத்தினாலே யிறையரு ளுருவாய் வந்து</line>
<line>கூட்டிடு மிவற்றை நீக்கிக் குரைகழல் குறுகு மாறே.</line>
</verse>

<verse>
<p-title>ஏழாஞ் சூத்திரம்</p-title>

<line>பன்னிறங் கவருந் தொன்மைப் படிகநீ டொளியும் பன்மை</line>
<line>மன்னிலங் கியல்புந் தந்த வளரொளி போல வையந்</line>
<line>தன்னகம் பயிலு நற்சிற் சடங்களின் றன்மை தாவா</line>
<line>நன்னலம் பெறநி றைந்த ஞானமே ஞான மென்பர்.</line>
</verse>

<verse>
<line>மாயை மா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை</line>
<line>யாயவா ருயிரின் மேவு மருளெனி லிருளாய் நிற்கு</line>
<line>மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை</line>
<line>யாயவா ருயிரின் மேவு மருளெனி ளொளியாய் நிற்கும்.</line>
</verse>



<verse>
<p-title>எட்டாஞ் சூத்திரம்</p-title>
<p-title>6. ஞானவாய்மையின் பயன்</p-title>
<line>தேசுற மருவு மான்ம தெரிசன மான்ம சுத்தி</line>
<line>வாசிலா வான்ம லாப மாகமூன் றாகு மூன்றும்</line>
<line>பாசம தகல ஞானம் பற்றறான் பணியை நீத்த</line>
<line>லேசினே யத்த ழுந்த லெனுமிவற் றடங்கு மன்றே.</line>
</verse>

<verse>
<line>தன்னறி வதனா லேதுந் தனக்கறி வில்லை யேனுந்</line>
<line>தன்னறி வாக வெல்லாந் தனித்தனி பயன ருந்துந்</line>
<line>தன்னறி வறியுந் தன்மை தன்னாலே தனைய றிந்தாற்</line>
<line>றன்னையுந் தானே காணுந் தானது வாகி நின்றே.</line>
</verse>

<verse>
<line>தத்துவ மான வற்றின் றன்மைக ளுணருங் காலை</line>
<line>யுய்த்தறிந் திடவு திப்ப தொளிவளர் ஞான மாகு</line>
<line>மத்தன்மை யறியு மாறு மகன்றிட வதுவா யான்மா</line>
<line>சுத்தமாஞ் சுத்த ஞானத் தொருமுத றோன்று மன்றே.</line>
</verse>

<verse>
<line>உறைதரு முணர்வு மன்றி யதன்முத லுள்ள தென்றிங்</line>
<line>கறைவதெ னென்னி லண்ண லருளெனு மதுவே யன்றி</line>
<line>நிறையொளி முதல தன்றி நின்றிடா நிமல னாகு</line>
<line>மிறையவன் முதல வன்ற னிலங்கருள் சத்தி யாமே.</line>
</verse>

<verse>
<line>சுத்தமாஞ் சத்தி ஞானச் சுடராகுஞ் சிவமொ ழிந்தச்</line>
<line>சத்திதா னின்றா முன்னைத் தகவிலா மலங்கள் வாட்டி</line>
<line>யத்தனை யருளு மெங்கு மடைந்திடு மிருள கற்றி</line>
<line>வைத்திடு மிரவி காட்டும் வளரொளி போன்ம கிழ் ந்தே.</line>
</verse>

<verse>
<p-title>ஒன்பதாஞ் சூத்திரம்</p-title>

<line>புகலரு மசத்தர் தம்பாற் பொருந்திய வலகை யேபோ</line>
<line>லகிலமு முணரு மீச னருளுயிர் மேவ லாலே</line>
<line>சகலமு நிகழ வேண்டுந் தலைவனைந் தொழிலுந் தானே</line>
<line>யிகலற வியற்றல் வேண்டு மென்றது நன்றி யின்றே.</line>
</verse>

<verse>
<line>இன்றுநோக் குரைநடக்கு மியல்பிலோற் கினைய வாய்ந்து</line>
<line>நின்றதோ ரலகை நேர்ந்தா னிகழ் வதெ னதுபோ லுள்ளத்</line>
<line>தொன்றிய வுணர்வு தம்பா லுள்ளது நிகழ் த்து மீசன்</line>
<line>றன்றொழி னடத்து மேனி தனக்கெனக் கொண்டுதானே.</line>
</verse>

<verse>
<line>இந்நிலை தன்னின் மன்னி யெய்திடுங் கலாதி போதந்</line>
<line>தன்னள வறிந்து நிற்குந் தகவிலா மலங்க ணீத்த</line>
<line>வந்நிலை கரண மாகா வகையதி லறிவ டங்கி</line>
<line>மன்னிட வியாபி யாய வான்பயன் றோன்று மன்றே.</line>
</verse>

<verse>
<line>அடைபவர் சிவமே யாகு மதுவன்றித் தோன்று மென்ற</line>
<line>கடனதெ னென்னின் முன்னுங் கண்டிடார் தம்மைப் பின்னுந்</line>
<line>தொடர்வரு மருளி னாலுந் தோன்றுமா காணா ராயி</line>
<line>னுடையவ னடிசேர் ஞான முணர்தலின் றணைத லின்றே.</line>
</verse>

<verse>
<p-title>பத்தாஞ் சூத்திரம்</p-title>

<line>பொற்புறு கருவி யாவும் புணராமே யறிவி லாமைச்</line>
<line>சொற்பெறு மதீதம் வந்து தோன்றாமே தோன்றி நின்ற</line>
<line>சிற்பர மதனா லுள்ளச் செயலறுத் திடவு திக்குந்</line>
<line>தற்பர மாகி நிற்றல் சாக்கிரா தீதந் தானே.</line>
</verse>

<verse>
<line>ஒடுங்கிடா கரணந் தாமே யொடுங்குமா றுணர்ந்தொ டுக்க</line>
<line>வொடுங்கிடு மென்னி னின்ற தொடுங்கிடா கரண மெல்லா</line>
<line>மொடுங்கிட வொடுங்க வுள்ள வுணர்வுதா னொழியும் வேறா</line>
<line>யொடுங்கிடி னன்றி மற்றவ் வுண்மையை யுணரொ ணாதே.</line>
</verse>

<verse>
<line>பற்றிடுங் கருவி யாவும் படர்ந்துணர் வளிக்குங் காலை</line>
<line>யுற்றறிந் திடுவ தொன்றி னுணர்வினி னுண்மை யாகு</line>
<line>மற்றது பகல்வி ளக்கின் மாய்ந்திட வருவ துண்டேற்</line>
<line>பெற்றிடு மதனை மாயப் பிறப்பினை யறுக்க லாமே.</line>
</verse>

<verse>
<line>முந்திய வொருமை யாலே மொழிந்தவை கேட்டல் கேட்ட</line>
<line>சிந்தனை செய்த லுண்மை தெளிந்திட லதுதா னாக</line>
<line>வந்தவா றெய்த நிட்டை மருவுத லென்று நான்கா</line>
<line>மிந்தவா றடைந்தோர் முத்தி யெய்திய வியல்பி னோரே.</line>
</verse>

<verse>
<line>பாசமா ஞானத் தாலும் படர்பசு ஞானத் தாலு</line>
<line>மீசனை யுணர வொண்ணா திறையருண் ஞான நண்ணின்</line>
<line>தேசுறு மதனான் முன்னைச் சிற்றறி வொழிந்து சேர்ந்து</line>
<line>நேசமோ டுயர்ப ரத்து நிற்பது ஞான நிட்டை.</line>
</verse>

<verse>
<line>விளம்பிய வகையி னிட்டை மேவிட லரிதேன் முன்ன</line>
<line>மளந்துணர் வளித்த வற்றி னளவுமற் றவற்றி னாலே</line>
<line>யுளங்கொளுந் தனையு முள்ள படியுமுற் றுணர்ந்து செவ்வே</line>
<line>தளர்ந்திடா துவப்ப மற்றத் தன்மைய தாகுந் தானே.</line>
</verse>

<verse>
<line>பாவிக்கின் மனாதி வேண்டும் பயனிலை கரண நீத்துப்</line>
<line>பாவிப்ப னென்னி லென்ன பழுதுள பாவ கத்தாற்</line>
<line>பாவிக்க வொண்ணா னென்று பாவிப்ப னென்னி னீயென்</line>
<line>பாவிக்க வேண்டா வாண்ட பரனருள் பற்றி னோர்க்கே.</line>
</verse>

<verse>
<line>ஒன்றிரண் டாகி யொன்றி னொருமையா மிருமை யாகி</line>
<line>யொன்றினொன் றழியு மொன்றா தென்னினொன் றாகா தீயி</line>
<line>னொன்றிரும் புறழி னின்றா முயிரினைந் தொழிலும் வேண்டு</line>
<line>மொன்றிநின் றுணரு முண்மைக் குவமையா ணவத்தொ டொன்றே.</line>
</verse>

<verse>
<line>அழிந்திடும் பாச மென்னி னித்தமென் றுரைத்தல் வேண்டா</line>
<line>வழிந்திடா தென்னின் ஞான மடைவது கருதல் வேண்டா</line>
<line>வழிந்திடுஞ் சத்தி நித்த மழிந்திடா வொளியின் முன்ன</line>
<line>ரழிந்திடு மிருளு நாச மடைந்திடா மிடைந்தி டாவே.</line>
</verse>

<verse>
<line>எல்லையில் பிறவி நல்கு மிருவினை யெரிசேர் வித்தி</line>
<line>னொல்லையி னகலு மேன்ற உடற்பழ வினைக ளுட்டுந்</line>
<line>தொல்லையின் வருதல் போலத் தோன்றிரு வினைய துண்டே</line>
<line>லல்லொளி புரையு ஞானத் தழலுற வழிந்து போமே.</line>
</verse>

<verse>
<p-title>7 புனித னாமம்</p-title>

<line>பந்தமா னவைய றுத்தும் பவுதிக முழலு மெல்லைச்</line>
<line>சந்தியா தொழியா திங்குத் தன்மைபோல் வினையுஞ் சாரு</line>
<line>மந்தமா திகளில் லாத வஞ்செழுத் தருளி னாலே</line>
<line>வந்தவா றுரைசெய் வாரை வாதியா பேதி யாவே.</line>
</verse>

<verse>
<line>திருவெழுத் தைந்தி லான்மாத் திரோதமா சருள்சி வஞ்சூழ் </line>
<line>தரநடு நின்ற தொன்றாந் தன்மையுந் தொன்மை யாகி</line>
<line>வருமந மிகுதி யாலே வாசியி லாசை யின்றிக்</line>
<line>கருவழிச் சுழலு மாறுங் காதலார்க் கோத லாமே.</line>
</verse>

<verse>
<line>ஆசுறு திரோத மேவா தகலுமா சிவமுன் னாக</line>
<line>வோசைகொ ளதனி னம்மே லொழித்தரு ளோங்கு மீள</line>
<line>வாசியை யருளு மாய மற்றது பற்றா வுற்றங்</line>
<line>கீசனி லேக மாகு மிதுதிரு வெழுத்தி னீடே.</line>
</verse>


<verse>
<p-title>பதொனொன்றாஞ் சூத்திரம்</p-title>
<p-title>8 அணைந்தோர் தன்மை</p-title>

<line>தீங்குறு மாயை சேரா வகைவினை திரிவி தத்தா</line>
<line>னீங்கிட நீங்கா மூல நிறையிரு ளிரிய நேயத்</line>
<line>தோங்குணர் வகத்த டங்கி யுளத்துளின் பொடுங்க நேரே</line>
<line>தூங்குவர் தாங்கி யேகத் தொன்மையிற் றுகளி லோரே.</line>
</verse>

<verse>
<line>குறிப்பிடங் காலந் திக்கா சனங்கொள்கை குலங்கு ணஞ்சீர்</line>
<line>சிறப்புறு விரதஞ் சீலந் தபஞ்செபந் தியான மெல்லா</line>
<line>மறுத்தற வொழிதல் செய்தன் மருவிடா மன்னு செய்தி</line>
<line>யுறக்குறு பவர்போல் வாய்மை யொழிந்தவை யொழிந்து [போமே.</line>
</verse>

<verse>
<line>அகம்புற மென்றி ரண்டா லருச்சனை புரியு மிந்தச்</line>
<line>சகந்தனி லிரண்டு மின்றித் தமோமய மாகி யெல்லா</line>
<line>நிகழ் ந்திட மகிழ் ந்து வாழு நீர்மையார் போல ஞானந்</line>
<line>திகழ் ந்தகம் புறமெ னாத செம்மையார் நன்மை யாரே.</line>
</verse>

<verse>
<line>அண்டமே விடவ னைத்து மணைத்தையு மண்ட மேவிக்</line>
<line>கொண்டல்போ லெவையு ஞானங் குறைவிலா நிறைத லாலே</line>
<line>கண்டதோர் பொருளை யந்தக் கருத்தினாற் காணிற் றானே.</line>
<line>யண்டநா யகனா மேனி யானதே லைய மின்றே.</line>
</verse>

<verse>
<line>மண்முதற் கரண மெல்லா மறுவசத் தாக்கி ஞானக்</line>
<line>கண்ணினி லூன்றி யந்தக் கருத்தினா லெவையு நோக்கி</line>
<line>யெண்ணியஞ் செழுத்து மாறி யிறைநிறை வுணர்ந்து</line>
<line>								[போற்றல்</line>
<line>புண்ணியன் றனக்கு ஞான பூசையாய்ப் புகலு மன்றே.</line>
</verse>

<verse>
<p-title>பன்னிரண்டாஞ் சூத்திரம்</p-title>

<line>தொண்டர்கள் தாமும் வானோர் தொழிந்திரு மேனி தானு</line>
<line>மண்டருங் கண்டி லாத வண்ணலே யெனவ ணங்கி</line>
<line>வெண்டர ளங்கள் சிந்த விழிமொழி குழற மெய்யே</line>
<line>கண்டுகொண் டிருப்பர் ஞானக் கடலமு தருந்தி னோரே.</line>
</verse>

<verse>
<p-title>நூற்கருத்து</p-title>

<line>நிலவுல காய தாதி நிகழ் சிவாத் துவிதாந் தத்துக்</line>
<line>குலவின ரளவ ளாவாக் கொள்கைய தாகி வேதத்</line>
<line>தலைதரு பொருளா யின்பாய்த் தாவில்சற் காரி யத்தாய்</line>
<line>மலைவறு முணர்வாற் பெத்த முத்திகண் மதித்தா மன்றே.</line>
</verse>

<verse>
<p-title>கேட்போன்</p-title>

<line>திருவருள் கொடுத்து மற்றிச் சிவப்பிர காச நன்னூல்</line>
<line>விரிவது தெளியு மாற்றால் விளம்பிய வேது நோக்கிப்</line>
<line>பெருகிய வுவமை நான்கின் பெற்றியி னிறுவிப் பின்முன்</line>
<line>றருமலை வொழியக் கொள்வோன் றன்வயிற் சாற்ற லாமே.</line>
</verse>

<verse>
<p-title>சிவப்பிரகாசம்</p-title>
<p-title>முற்றிற்று</p-title>
</verse>

</document>

