﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="sidiyar.xsl"?>

<document>

<heading>
<author>திருத்துறையூர் அருணந்திதேவ நாயனார் அருளியது</author>
<title>
<line>சிவஞானசித்தியார்</line>
<line2>பரபக்கம்</line2>
</title>
<notes>
<line>[ இந்நூலுக்கு அடிப்படை: "மெய் கண்ட சாத்திரம்" தருமை ஆதீனம் பதிப்பு</line>
<line>தமிழ் அச்சு வடிவம் - தமிழ் ஆர்ட்ஸ் அகெடமி</line>
<line>சிறப்பு குறியீடுகள் ஆங்கில ரோமானிய அச்சு வடிவம் மோகன் நாகசாமி</line>
<line>மேற்பார்வை : டாக்டர் இரா. நாகசாமி ]</line>
</notes>
<notes-eng>
<line>Source : "Maikkanda Sāttitram" published by Dharmapuram Ādīnam</line>
<line>Tamil Typing : Tamil Arts Academy, Roman &amp; Diacritical marks :- Mohan Nagaswamy</line>
</notes-eng>
</heading>

<verse>
<p-title>கணபதி வணக்கம்</p-title>
<line>ஒரு கோட்ட னிருசெவியன் மும்மதத்த</line>
<line>	னால்வாயைங் கரத்த னாறு</line>
<line>தருகோட்டம் பிறையிதழித் தாழ் சடையான்</line>
<line>	தருமொருவா ரணத்தின் தாள்கள்</line>
<line>உருகோட்டன் பொடும்வணங்கி யோவாதே</line>
<line>	யிரவுபக லுணர்வோர் சிந்தைத்</line>
<line>திருக்கோட்டு மயன்றிருமால் செல்வமுமொன்</line>
<line>	றோவென்னச் செய்யுந் தேவே.</line>
</verse>



<verse>
<p-title>பாயிரம்</p-title>
<p-title>சிவவணக்கம்</p-title>
<line>ஆதிநடு வந்தமிலா வளவில் சோதி</line>
<line>	யருண்ஞான மூர்த்தியா யகில மீன்றா</line>
<line>மாதினையு மொருபாகத் தடக்கி வானோர்</line>
<line>	மகுடசூ ளாமணியாய் வையம் போற்றப்</line>
<line>பாதிமதி யணிபவளச் சடைகடாழப்</line>
<line>	படரொளியம் பலத்தாடும் பரனார் பாதத்</line>
<line>தாதுமலி தாமரைகள் சிரத்தே வைத்துத்</line>
<line>	தளராத பேரன்பு வளரா நிற்பாம்.</line>
</verse>



<verse>
<p-title>சக்திவணக்கம்</p-title>
<line>ஈசன்ரு ளிச்சையறி வியற்ற லின்ப</line>
<line>	மிலயமொடு போகமதி கார மாகித்</line>
<line>தேசருவ மருவுருவ முருவ மாகித்</line>
<line>	தேவியுமாய்த் தேசமொடு செல்வ மாகிப்</line>
<line>பேசரிய வுயிரையெலாம் பெற்று நோக்கிப்</line>
<line>	பெரும்போக மவையளித்துப் பிறப்பினையு மொழித்திட்</line>
<line>டாசகலு மடியருளத் தப்பனுட னிருக்கு</line>
<line>	மன்னையருட் பாதமலர் சென்னி வைப்பாம்.</line>
</verse>



<verse>
<p-title>விநாயகர் வணக்கம்</p-title>
<line>இயம்புநூ லிருந்தமிழின் செய்யு ளாற்றா</line>
<line>	லிடையூறு தீர்ந்தினிது முடிய வேண்டித்</line>
<line>தயங்குபே ரொளியாகி யெங்கும் நின்ற</line>
<line>	தலைவனார் மலைமாது தன்னோ டாடிப்</line>
<line>பயந்தவைங் கரநாறோண் முக்கணிரு பாதப்</line>
<line>	பரியவொரு நீள்கோட்டுப் பெரிய பண்டிக்</line>
<line>கயந்தனடிக் கமலங்க ணயந்து போற்றிக்</line>
<line>	கருத்திலுற விருத்திமிக்க காதல் செய்வாம்.</line>
</verse>



<verse>
<p-title>குமாரக்கடவுள் வணக்கம்</p-title>
<line>அருமறையா கமமங்க மருங்கலைநூ றெரிந்த</line>
<line>	வகத்தியனுக் கோத்துரைக்கு மருட்குருவாங் குருளை</line>
<line>திருமறைமா முனிவர்முனி தேவர்கள்தந் தேவன்</line>
<line>	சிவனருள்சேர் திருமதலை தவநிலையோர் தெய்வம்</line>
<line>பொருமறையார் கழல்வீரர் வீரன் கையிற்</line>
<line>	பூநீர்தோண் டோவாது போற்றுமடி யவர்கள்</line>
<line>கருமறையா வகையருளிக் கதிவழங்குங் கந்தன்</line>
<line>	கழலிணைக ளெஞ்சிரத்திற் கருத்தில் வைப்பாம்.</line>
</verse>



<verse>
<p-title>குருவணக்கம்</p-title>
<line>பண்டைமறை வண்டரற்றப் பசுந்தேன் ஞானம்</line>
<line>	பரிந்தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக்</line>
<line>கண்டவர்இ தயகமல முகைக ளெல்லாங்</line>
<line>	கண்டிறப்பக் காசினிமேல் வந்தவருட் கதிரோன்</line>
<line>விண்டமலர்ப் பொழில்புடைசூழ்  வெண்ணெய் மேவு</line>
<line>	மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன்</line>
<line>புண்டரிக மலர் தாழச் சிரத்தே வாழும்</line>
<line>	பொற்பாத மெப்போதும் போற்றல் செய்வாம்.</line>
</verse>



<verse>
<p-title>அவையடக்கம்</p-title>
<line>மாலயன்மா மறையறியா வாதி மார்க்கம்</line>
<line>	வையகத்தா கமவேத மற்று முள்ள</line>
<line>நூலையெலா முணர்ந்திறைவன் கழலே நோக்கு</line>
<line>	நோன்மையருந் தவர்முன்யா னுவலு மாறு</line>
<line>வேலையுலா வுந்திரைகள் வீசி யேறி</line>
<line>	வேறேழு மொன்றாகி நின்ற போது</line>
<line>சாலவுமான் குளப்படியிற் றங்கி நின்ற</line>
<line>	சலமதுதா னேரென்னுந் தன்மைத் தாலோ.</line>
</verse>



<verse>
<p-title>இதுவுமது</p-title>
<line>நீடுபுக ழுலகுதனின் மைந்தர் மாதர்</line>
<line>	நேயமொடு தாம்பயந்த புதல்வர் வாயிற்</line>
<line>கூடுமொழி மழலையொடு குழறி யொன்றுங்</line>
<line>	குறிப்பரிதா யிடினுமிகக் குலவிப் போற்றி</line>
<line>மாடுநமக் கிதுவென்று கொண்டு வாழ் வர்</line>
<line>	அதுபோல மன்னுதமிழ் ப் புலமை யோரென்</line>
<line>பாடுகவிக் குற்றங்கள் பாரா ரிந்நூல்</line>
<line>	பாராட்டா நிற்பர்அருட் பரிசி னாலே.</line>
</verse>


<verse>
<p-title>நூற்சிறப்பு</p-title>
<line>சுத்தவடி வியல்பாக வுடைய சோதி</line>
<line>	சொல்லியவா கமங்களெலாஞ் சூழப் போயு</line>
<line>மொத்துமுடி யுங்கூட வோரி டத்தே</line>
<line>	யொருபதிக்குப் பலநெறிக ளுளவா னாற்போற்</line>
<line>பித்தர்குண மதுபோல வொருகா லுண்டாய்ப்</line>
<line>	பின்னொருகா லறிவின்றிப் பேதை யோராய்க்</line>
<line>கத்திடுமான் மாக்களுரைக் கட்டிற் பட்டோர்</line>
<line>	கனகவரை குறித்துப் போய்க் கடற்கே வீழ் வார்.</line>
</verse>


<verse>
<p-title>நூற்கு அதிகாரியும் நூல்வழியும்-நூற்பெயரும்</p-title>

<line>போதமிகுத் தோர்தொகுத்த பேதை மைக்கே</line>
<line>	பொருந்தினோ ரிவர்க்கன்றிக் கதிப்பாற் செல்ல</line>
<line>வேநெறி யெனுமவர்கட் கறிய முன்னா</line>
<line>	ளிறைவனரு ணந்திதனக் கியம்ப நந்தி</line>
<line>கோதிலருட் சனற்குமா ரர்க்குக் கூறக்</line>
<line>	குவலயத்தி னவ்வழியெங் குருநாதன் கொண்டு</line>
<line>தீதகல வெமக்களித்த ஞான நூலைத்</line>
<line>	தேர்ந்துரைப்பன் சிவஞான சித்தி யென்றே.</line>
</verse>



<verse>
<line>இறைவனையு மிறைவனா லியம்பு நூலு</line>
<p-title>நூற்கருத்து</p-title>
<line>	மீண்டளவும் பொருளியல்பும் வேண்டுஞ் செய்தி</line>
<line>முறைமைகளும் பெத்தமொடு முத்தி யெல்லா</line>
<line>	மூதுலகி லெமக்கியன்ற முயற்சி யாலே</line>
<line>சிறையுலவும் புனல்நிலவத் தோன்றும் பேய்த்தேர்ச்</line>
<line>	செய்கைபோ லுண்டாய பொய்கொண் மார்க்கத்</line>
<line>துறைபலவுங் கடாவிடையாற் சொல்லிப் போக்கித்</line>
<line>	துகள்தீர இந்நூலிற் சொல்ல கிற்பாம்.</line>
</verse>



<verse>
<p-title>நூல்</p-title>
<p-title>உலகாயதன்மதம்</p-title>
<line>இந்திர புரோகித னியம்புமொரு நூலின்</line>
<line>றந்திர மெனாதறி வினோடரு ளிலாமற்</line>
<line>சந்தணை புயத்துமண மாலைக டயங்க</line>
<line>வுந்தியுல கத்திலுல காயத னுரைப்பான்.</line>
</verse>

<verse>
<line>ஈண்டளவை காட்சிமன மாதியிரு மூன்றாய்</line>
<line>வேண்டுமனு மானமுத லானபல வேண்டா</line>
<line>பூண்டபொருள் பூதமவை புகல்கடின சீதந்</line>
<line>தீண்டரிய வெம்மைசல னத்தினொடு சேர்வே.</line>
</verse>

<verse>
<line>சாற்றுபெய ரானவை தலம்புனல் கனற்பின்</line>
<line>காற்றுமென லாமிவை கலந்தகுண மோதி</line>
<line>னாற்றமிர தம்முருவ நற்பரிச மாகும்</line>
<line>போற்றுமிவை நித்தவியல் பாமிவை புணர்ப்பே.</line>
</verse>

<verse>
<line>ஒத்துறு புணர்ச்சியி னுருக்கள்பல வாகும்</line>
<line>வைத்துறு கடாதிபல மண்ணின்வரு மாபோற்</line>
<line>புத்திகுண நற்பொறி புலன்களிவை யெல்லா</line>
<line>மித்தில்வரு நீரினி லெழுங்குமிழி யொத்தே.</line>
</verse>

<verse>
<line>பூதமதி னொன்றுபிரி யப்புல னிறக்கு</line>
<line>நீதியினி னிற்பன நடப்பனவு முற்போ</line>
<line>லோதும்வகை யாகியுறு காரிய முலந்தா</line>
<line>லாதியவை யாமிதனை யறிவதறி வாமே.</line>
</verse>

<verse>
<line>இப்படி யன்றிக் கன்ம முயிரிறை வேறுண் டென்று</line>
<line>செப்பிடு மவர்க்கு மண்ணோர் செய்திடுங் குற்ற மென்னோ</line>
<line>வொப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித்</line>
<line>தப்பிலா காயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே.</line>
</verse>

<verse>
<line>செய்திடுங் கன்ம மெல்லாஞ் செய்தவர் தம்மைப் பற்றி</line>
<line>செய்திடு மென்னி னிங்கே மாய்ந்திடு மேய்வ தெங்ஙன்</line>
<line>மெய்தரு தூலங் கெட்டுச் சூக்கமாய் மேவு மென்னி</line>
<line>லையனே தீபம் போனா லதனொளி யாவ துண்டோ.</line>
</verse>

<verse>
<line>மாய்ந்துபின் வயலி லிட்ட வைதழை பலிக்கு மாபோ</line>
<line>லெய்திடுங் கன்ம மென்னி லிட்டிடத் திசையு மேனி</line>
<line>யோய்ந்துவந் தவரையுண்ணப்பண்ணுஞ்சோறுதரத்தற்றால்</line>
<line>வாய்ந்திடும் பலம் வயிற்றிற் கொண்டிடும் வழக்குவைத்தாய்</line>
</verse>

<verse>
<line>உருவமும் உணர்வுஞ் செய்தி யொத்திரா கன்மமென்னின்</line>
<line>மருவுகை விரல்க டம்மின் வளர்வுடன் குறைவுண் டாகி</line>
<line>வருவதிங் கென்ன கன்மஞ் செய்துமுன் மதியி லாதாய்</line>
<line>பெருகுபூ தங்க டம்மின் மிகுகுறைப் பெற்றியாமே.</line>
</verse>

<verse>
<line>இன்பொடு துன்ப மெல்லா மெய்துவ கன்மமென்னி</line>
<line>னன்புனல் சந்தனாதி நணுகவு வணுக வொண்ணா</line>
<line>மின்பொலி யழலி னோடு மேவவு நன்மை தீமை</line>
<line>யென்செய்த தியம்பி டாய்நீ யிவையெலா மியல்ப தாமே.</line>
</verse>

<verse>
<line>காயத்தின் குணமதன்றிக் கண்டதான் மாவுண் டாயின்</line>
<line>மாயத்திற் சொல்லிடாதே மனமுத லாறி னுக்கு</line>
<line>நேயத்ததாக வேண்டு மன்றியே நிகழ் த்து முண்மை</line>
<line>தேயத்தின் முயற்கொம் பெல்லை செப்புவோர் செய்தி யாமே.</line>
</verse>

<verse>
<line>அருவமே இறைவ னாகி லறிவின்றா காயமாகு</line>
<line>முருவமே யென்னிற் பூதக் கூட்டத்தி னொருவ னாகு</line>
<line>மருவிய விரண்டுங் கூடி நிற்பவ னென்னின் மண்மே</line>
<line>லிருவிசும் பொருகல் லேந்தி நிற்குமோ வியம்பிடாயே.</line>
</verse>

<verse>
<line>பூதத்தே யன்ன மாகி யன்னத்தா லுடம்பு புத்தி</line>
<line>பேதித்தே மனமு மாகிப் பிரிந்தமை திருந்த வின்று</line>
<line>வேதத்தே யுரைக்க வென்னோ மேதினி யோர்க ளெல்லாங்</line>
<line>கேதத்தே வீழ் ந்து வேறு நெறியல கேட்கு மாறே.</line>
</verse>

<verse>
<line>போகத்தை மண்ணிற் கண்டு விட்டுப்போய் விண்ணிற் கொ</line>
<line>மோகத்த ராகி யல்லன் முயனறுழன் மூட ரெல்லாந் [ள்ள</line>
<line>தாகத்திற் றண்ணீர் கண்டு விட்டுப்போய்த் தண்ணீர்கேட்டுச்</line>
<line>சோகித்தே யுண்ணவெண்ணித் துயருறு வார்க ளந்தோ</line>
</verse>

<verse>
<line>வாழவே வல்லை வாமி வலக்கைதா வென்னு யிர்க்குத்</line>
<line>தோழனீ யுன்னையொப்பார் சொல்லிடி னில்லைகண்டாய்</line>
<line>கோழைமா னுடர்தீ தென்னுங் கொலைகள வாதி கொண்டே</line>
<line>சூழும்வார் குழலார் மொய்ப்பச் சுடரெனத் தோன்றினாயே</line>
</verse>

<verse>
<line>ஈசனா ரயனார் மாலோ டிந்திரன் றெரிவை மார்பாற்</line>
<line>பேசொணா வகைக ளெல்லாஞ் செய்தன்றோ பெரியோ ராகு</line>
<line>ராசையா லவர்போ னாமு மாகவே வேண்டு மாயின்</line>
<line>வாசமார் குழலா ரோடும் வல்லவா கூடி வாழ் மின்.</line>
</verse>

<verse>
<line>தையலா ரூட லாடத் தாமவ ரோடுங் கூடிச்</line>
<line>செய்யதா மரையை வென்ற சீறடி செம்பஞ் சூட்டி</line>
<line>மெய்யெலாம் பாதஞ்சூடும் வேடத்தார் மெய்யிற் கூடா</line>
<line>மையன்மா னுடர்பொய்ம் மார்க்க வேடத்தே மாய்கின்றாரே.</line>
</verse>

<verse>
<line>வாசமார் குழலி னார்கண் மணியல்குற் றடத்தே மூழ் கி</line>
<line>நேசமார் குமுதச் செவ்வா யமுதினை நிறைய வுண்டு</line>
<line>தேசுலா மணிமென் றோண்மேற் சேர்ந்துவீற் றிருந்தி டாதே</line>
<line>மாசுலா மனத்தோ ரெல்லா மறுமைகொண் டழிவர் மன்னோ.</line>
</verse>

<verse>
<line>மதிநிலா நுதலாரோடு மணிநிலா முன்றி லேறி</line>
<line>முதிர்நிலா வெறிப்பச் செவ்வா யிளநிலாமுகிழ் ப்ப மொய்த்த</line>
<line>கதிர்நிலாவடங்கொள் கொங்கைக்கண்கண்மார்பகலமூழ் கும்</line>
<line>புதுநிலா வியநன் போகம் விடுவர்புன் சமயத் தோரே.</line>
</verse>

<verse>
<line>ஊடுவ துணர்வதுற்ற கல்விமங்கையரை யுள்கி</line>
<line>வாடுவ தடியில் வீழ் ந்து வருந்துவ தருந்த வம்பின்</line>
<line>கூடுவ துணர்வு கெட்டுக் குணமெலாம் வேட்கை யேயாய்</line>
<line>நீடுவ தின்ப முத்தி யித்தினின் றார்கண் முத்தர்.</line>
</verse>

<verse>
<line>வீட்டினை யுளதென் றோடி மெலிவதிங் கென்னை வீடு</line>
<line>காட்டுவோர்கண்டோர் கேட்டோர் கரியவையுண்டேற்காட்டீர்</line>
<line>நாட்டினி லரச னாணைக் கிசையவே நடந்து நாளு</line>
<line>மீட்டிய பொருள்கொண் டிங்கே யின்பத்து ளிசைந்தி டீரே.</line>
</verse>


<verse>
<p-title>உலகாயதன் மதமறுதலை</p-title>
<line>உள்ள தாவது கண்ட தென்றுரை</line>
<line>	கொண்ட தென்னுல கத்துநீ</line>
<line>பிள்ளை யாய்வளர் கின்ற நாளுனைப்</line>
<line>	பெற்ற தாயொடு தந்தையைக்</line>
<line>கள்ள மேபுரி கால னாருயி</line>
<line>	ருண்ண வின்றொரு காளை யாய்</line>
<line>மெள்ள வேயுள ரென்று கொண்டு</line>
<line>	விளம்பு மாறு விளம்பிடே.</line>
</verse>

<verse>
<line>இடித்து மின்னி யிருண்டு மேக</line>
<line>	மெழுந்த போதிது பெய்யுமென்</line>
<line>றடுத்த தும்மகில் சந்த முந்தி</line>
<line>	யலைத்து வார்புன லாறுகொண்</line>
<line>டெடுத்து வந்திட மால்வ ரைக்க</line>
<line>	ணிருந்து கொண்டல் சொரிந்த தென்று</line>
<line>முடித்த தும்மிவை காட்சி யன்றனு</line>
<line>	மான மென்று மொழிந்திடே.</line>
</verse>

<verse>
<line>காண்ட லேயனு மான மாவதுங்</line>
<line>	காட்சி முன்னதுங் காட்சியேற்</line>
<line>பூண்ட பூத வுடம்பி னுள்ளெழு</line>
<line>	போத மென்கொடு கண்டனை</line>
<line>மாண்ட வாயின் மனங்கொண் ஞான</line>
<line>	முணர்ந்த தும்மனு மானமென்</line>
<line>றீண்டு பூத மியைந்த திவ்வுட</line>
<line>	லென்ப தென்பிர மாணமே.</line>
</verse>

<verse>
<line>பழுதி லாமறை கண்ட நூல்பழு</line>
<line>	தின்றி யுண்டது பாரின்மேன்</line>
<line>மொழிவர் சோதிட முன்னி யின்னது</line>
<line>	முடியு மென்பது முன்னமே</line>
<line>யழிவி லாதது கண்ட னம்மவை</line>
<line>	யன்றி யுஞ்சில வாக மங்களி</line>
<line>னெழுதி யோர்படி யேன்று கொண்டிரு</line>
<line>	நிதியெ டுப்பது மெண்ணிடே.</line>
</verse>

<verse>
<line>பூத மானவை நித்த மென்று</line>
<line>	புகன்ற தென்னை யுருக்களா</line>
<line>யாத லோடழி வாகு மாதலி</line>
<line>	னாக்கு வோர்வர வேண்டிடுங்</line>
<line>காத லோடு கடாதி மண்கொ</line>
<line>	டியற்று வோருளர் கண்டனஞ்</line>
<line>சீத நீரி லெழுந்த கொப்பு</line>
<line>	ணிகழ் ந்த மாருதச் செய்கையே.</line>
</verse>

<verse>
<line>நீரின் வந்தெழு கொப்பு ணீரது</line>
<line>	வாயெ ழுந்நிகழ்  பூதமு</line>
<line>மோரின் வேறுணர் வாயெ ழாவவை</line>
<line>	பூத மாகி யுதித்திடுந்</line>
<line>தேரி னூறடை காய்செ றிந்தவை</line>
<line>	சேர வேறு சிவப்பெழும்</line>
<line>பாரி னிற்பிரி யாது புந்தி</line>
<line>	பழிப்பு டம்பு கிடக்கவே.</line>
</verse>

<verse>
<line>கூறு சேர்வையின் வந்த போது</line>
<line>	சிவப்பெ னுங்குண மொன்றுமே</line>
<line>வேறு வேறு புலன்கு ணங்க</line>
<line>	ளுடற்கண் வந்து விளைந்ததெ</line>
<line>னூறு காயடை கூடும் வேறொரு</line>
<line>	வன்ற னாலென னோக்கிநீ</line>
<line>தேறு பூத செயற்கும் வேண்டு</line>
<line>	மொருத்த னென்று தெளிந்திடே.</line>
</verse>

<verse>
<line>ஆன வைம்பொறி யுண்டி நித்திரை</line>
<line>	யச்ச மைதுன மாதியா</line>
<line>வூனின் வந்திடு முன்பி லாதவை</line>
<line>	யென்று ரைக்கி னுலூதைபோல்</line>
<line>வானின் வந்திடு மாத ராணலி</line>
<line>	யாகி மானுட ராதியா</line>
<line>யோனி பன்மையு மின்று பூத</line>
<line>	முறும்பு ணர்ச்சியொர் தன்மையே</line>
</verse>

<verse>
<line>ஐந்து நான்கொரு மூன்றி ரண்டுட</line>
<line>	னொன்ற தாயுட லங்களின்</line>
<line>வந்தி டாவுணர் விந்தி யங்களும்</line>
<line>	வன்ன பன்மையு மின்மையாம்</line>
<line>புந்தி யோடிய வன்ன போக</line>
<line>	குணங்கள் பூத புணர்ச்சிதான்</line>
<line>றந்தி டாதிவை பேத மாயிட</line>
<line>	வந்த வாவினை தந்தவா.</line>
</verse>

<verse>
<line>அறிவு பூதம தென்னின் வேறு</line>
<line>	புறத்த றிந்தமை கண்டிலஞ்</line>
<line>செறிவு தானுட லத்தெ னிற்சவ</line>
<line>	மான போதுட றேருமோ</line>
<line>குறிகொ ளாதுடல் வாயு வானது</line>
<line>	கூடி டாமையி னென்னினீ</line>
<line>பிறித ராதுயிர் நிற்க ஞான</line>
<line>	முறக்க மென்பிற வாததே.</line>
</verse>

<verse>
<line>அறிவு டற்குண மென்னி லானைய</line>
<line>	தாதி யந்த மெறும்பதா</line>
<line>முறுமு டற்பெரி தான வற்றி</line>
<line>	னுதித்தி டும்பெரி தாகவே</line>
<line>சிறுவு டற்செறி ஞான முஞ்சிறி</line>
<line>	தாயி டும்பரி ணாமமும்</line>
<line>பெறுமு டற்சிறி தாவ தென்பெரி</line>
<line>	தாவ தென்சில பேசிடே.</line>
</verse>

<verse>
<line>போத மும்மெலி வாகி யும்மலி</line>
<line>	பூத மானவை கூடலிற்</line>
<line>பேத மோடு பெருத்து டற்கள்</line>
<line>	சிறுத்த பெற்றிமை யென்றிடி</line>
<line>னோது டற்பெரி தான வுஞ்சிறி</line>
<line>	தாயி டாசிறி தானவு</line>
<line>நீதி யிற்பெரி தாயி டாமுன</line>
<line>	முள்ள தன்மையி னீடுமே.</line>
</verse>

<verse>
<line>இயல்பு காணிவை யென்னின் வேறிசை</line>
<line>	பெண்ணோ டாணிரு தன்மையாஞ்</line>
<line>செயல்கொ ளாவிவர் செய்தி காரண</line>
<line>	மாக வந்து செனிப்பதே</line>
<line>னியல்ப தாமுடல் பூத காரிய</line>
<line>	மாவ தும்மிலை யாகுமான்</line>
<line>மயல தாம்வினை யாலொ ருத்தன்</line>
<line>	வகுத்த தன்மையின் வந்ததே.</line>
</verse>

<verse>
<line>கார ணம்மவை யென்ற தென்னை</line>
<line>	கடாதி போனிகழ்  காரியம்</line>
<line>நேர ணைந்து சமைந்து நின்றிடு</line>
<line>	மென்ப தும்மது நேர்கிலோம்</line>
<line>போர ணைந்திடு மொன்றொ டொன்று</line>
<line>	பொருந்து மாயின் வருந்தியும்</line>
<line>நீர ணைந்தொரு தீயி னின்றது</line>
<line>	கண்ட தாயி னிகழ் த்திடே.</line>
</verse>

<verse>
<line>பூத மேவு புணர்ச்சி யேபுரி</line>
<line>	காய காரண மாகுமேற்</line>
<line>காத லாணொடு பெண்ணு மேவு</line>
<line>	புணர்ச்சி காரண மாவதெ</line>
<line>னாதி யேயுல கத்தி லாணொடு</line>
<line>	பெண்ணு மாயணை காரிய</line>
<line>நாத னாயகி யோடு கூடி</line>
<line>	நயந்த காரண மென்பரே.</line>
</verse>

<verse>
<line>கந்தம் வெம்மை கலந்தி டும்புனல்</line>
<line>	கன்ம மென்செய்த தென்றனை</line>
<line>சந்த நந்தழல் சார நீரிரு</line>
<line>	தன்மை யுற்றிடு மாறதோர்</line>
<line>தந்த கன்ம மிரண்ட ணைந்து</line>
<line>	தருஞ்சு கத்தொடு துக்கமுஞ்</line>
<line>சிந்தி யாவெழு சீவ னுற்றிடும்</line>
<line>	வேறு டற்கிலை தேறிடே.</line>
</verse>

<verse>
<line>இன்ப மெய்தி யிருந்து நீவினை</line>
<line>	யில்லை யிங்கியல் பென்றிடிற்</line>
<line>றுன்ப மெய்திடு வானென் மற்றிது</line>
<line>	சொல்லி டாய்சொல வில்லையேன்</line>
<line>முன்பு செய்திடு கன்ம மென்றறி</line>
<line>	கன்ம மும்முதல் வன்னறிந்</line>
<line>தன்பி னாலுறு விக்கு மப்பய</line>
<line>	னாங்க மைப்பொ டநாதியே.</line>
</verse>

<verse>
<line>அநாதி யேலமை வின்றெ னின்மல</line>
<line>	மாயை கன்ம மணுச்சிவ</line>
<line>னநாதி கன்ம மணுக்கள் செய்ய</line>
<line>	வறிந்து கன்ம முடற்செயா</line>
<line>வநாதி காரிய மாமு டல்க</line>
<line>	ளசேத னம்மணை யாவறிந்</line>
<line>தநாதி யாதி யமைக்க வேண்டு</line>
<line>	மமைப்பி னோடு மநாதியே.</line>
</verse>

<verse>
<line>காணொ ணாகர ணங்க ளுக்குயிர்</line>
<line>	கண்டி டாமையி னின்றெனிற்</line>
<line>காணு கோகடங் கண்ட கண்ணினைக்</line>
<line>	கண்டு நிற்பதுங் கண்ணதே</line>
<line>காணொ ணாதுயிர் தானு மிப்படி</line>
<line>	கண்டி டுங்கர ணங்களைக்</line>
<line>காணொ ணாகர ணங்க ளுக்குயி</line>
<line>	ருண்மை யாவதுங் கண்டிடே</line>
</verse>

<verse>
<line>அங்கி யானது தானு மொன்றை</line>
<line>	யணைந்து நின்று நிகழ் ந்திடும்</line>
<line>பங்கி யாதுயிர் தானு மிப்படி</line>
<line>	பற்றி யல்லது நின்றிடா</line>
<line>தெங்கு மார்தயி லத்தை யுண்டெழு</line>
<line>	தீப மாண தெரிந்திடு</line>
<line>மங்க தாமுட னின்று கன்ம</line>
<line>	மருந்தி யாருயி ராவதே.</line>
</verse>

<verse>
<line>அறிவு தானுட லத்தின் வேறது</line>
<line>	வாயி றந்து பிறந்திடி</line>
<line>னறிவு முன்புள திங்கு வந்து</line>
<line>	மறிந்தி டாமைய தென்னெனி</line>
<line>னறிவை யோகன வத்து நீநன</line>
<line>	வத்தை யன்றுத ரத்திருந்</line>
<line>தறியு மவ்வறி வோம யக்கறி</line>
<line>	வாத லாலறி யாதுகாண்.</line>
</verse>

<verse>
<line>இறந்தி டும்மறி வேபி றந்திடு</line>
<line>	மென்ப திங்கிசை யாதெனி</line>
<line>னுறங்கி டும்பொழு தின்றி நின்றுணர்</line>
<line>	விங்கு தித்திடு மாறதோர்</line>
<line>பிறந்த விவ்வுடல் போக வேறுடல்</line>
<line>	பின்பு வந்தமை பேசிடின்</line>
<line>மறந்தி டுங்கன வத்தில் வேறுடல்</line>
<line>	வந்த வாறு மதித்திடே.</line>
</verse>

<verse>
<line>காரணம் வாயு விடத்த டங்க</line>
<line>	வடங்கி வந்தெழு காரிய</line>
<line>மரண மான விடத்து மற்றிவை</line>
<line>	மாய்ந்து பின்பு வருஞ்செயல்</line>
<line>கிரண மார்கலை கெட்டு திப்ப</line>
<line>	விறப்பி னோடு பிறப்பையுந்</line>
<line>தரணி யோர்கண் மதிக்கு ரைப்ப</line>
<line>	ருயிர்க்கு மிப்படிச் சாற்றிடே.</line>
</verse>

<verse>
<line>பூத மானவை காரி யங்கள்</line>
<line>	பொலிந்து மன்னி யழிந்திடு</line>
<line>மாத லாலொரு நாத னிங்குள</line>
<line>	னென்ற றிந்துகொ ளையனே</line>
<line>பேத மான கடாதி மண்ணினில்</line>
<line>	வந்த வாறு பிடித்திடிற்</line>
<line>கோதி லாத குலால னால்வரு</line>
<line>	செய்கை யென்று குறிப்பரே.</line>
</verse>

<verse>
<line>வேத னாரண னார ணம்மறி</line>
<line>	யாவி ழுப்பொருள் பேதைபாற்</line>
<line>றூத னாயிரு கான டந்திடு</line>
<line>	தோழன் வன்மைசெய் தொண்டனுக்</line>
<line>காத லாலடி யார்க ளுக்கெளி</line>
<line>	யான டிக்கம லங்கணீ</line>
<line>காதலாலணை யீண்டன் வேண்டின</line>
<line>	விம்மை யேதருங் கண்டிடே.</line>
</verse>

<verse>
<line>பொன்கு லாவு மணிக்க லன்கண்</line>
<line>	மலம்பு கிற்கை பொருந்திடா</line>
<line>மின்கு லாமிடை யார்க டாமுல</line>
<line>	கத்தின் வேட்கை விடும்பொருள்</line>
<line>புன்பு லான்மல மூத்தி ராதி</line>
<line>	பொசிந்து நாறு புலைக்கல</line>
<line>மென்கொ லாமிவர் மேல்வி ழுந்த</line>
<line>	திவற்றி னென்பெற வெண்ணியே.</line>
</verse>

<verse>
<line>தோலி ரத்த மிறைச்சி மேதை</line>
<line>	யெலும்பு மச்சை சுவேதநீ</line>
<line>ராலெ டுத்த முடைக்கு ரம்பை</line>
<line>	யழுக்கி னோடு புழுக்குழா</line>
<line>நூலொ ழுக்கிடு கோழை யீர</line>
<line>	நுரைக்கு மூத்திர பாத்திரஞ்</line>
<line>சேல டர்த்தகண் ணார்க ளென்பது</line>
<line>	தேர்ம லத்திர டிண்ணமே.</line>
</verse>

<verse>
<line>ஆசை யுற்றுழல் சூக ரங்க</line>
<line>	ளசுத்த மேவி யளைந்துதின்</line>
<line>றேசு சித்தன வாயி டுஞ்சுக</line>
<line>	மேழை யோடுறு மின்பநீ</line>
<line>மாச தற்றொளிர் நித்த சுத்த</line>
<line>	வளந்த ருஞ்சுக வாரிகா</line>
<line>ணீச னுக்கடி மைத்தி றத்தி</line>
<line>	னியைந்து நாம்பெறு மின்பமே.</line>
</verse>

<verse>
<line>குரோத மேகுண மாயி ருந்தவர்</line>
<line>	சாந்தி நன்மை குறிக்கொளா</line>
<line>ரராக மேயணை வார்க ளாசை</line>
<line>	யறுத்த வின்ப மறிந்திடார்</line>
<line>பராவு தேவர் பராவு தூய</line>
<line>	பராப ரன்னடி பற்றிநீ</line>
<line>விராவு மெய்யில் விடாத வின்பம்</line>
<line>	விளைந்தி டும்மிது மெய்ம்மையே.</line>
</verse>

<verse>
<line>காம மாதி குணங்க ளைச்சுக</line>
<line>	மென்று கொண்டனை காதலாற்</line>
<line>றூம மாரழ லங்கி சீத</line>
<line>	மலிந்த போது சுகந்தரு</line>
<line>நாம மார்தரு சீதம் வெம்மை</line>
<line>	நலிந்த போது தருஞ்சுகஞ்</line>
<line>சேம மாகிய வின்ப மாமிகு</line>
<line>	தெய்வ நன்னெறி சேரவே.</line>
</verse>

<verse>
<line>படிக்கு நூல்கள் சிவாக மம்பசு</line>
<line>	பாச மோடு பதித்திற</line>
<line>மெடுத்தி யம்புவ தீசன் வார்கழ</line>
<line>	லேத்தி டுந்தொழி லென்றுமே</line>
<line>விடுத்தி டும்பொருள் காம மாதிகள்</line>
<line>	வேண்டி டும்பொரு ளீண்டருள்</line>
<line>முடித்து மும்மலம் விட்டு நின்மல</line>
<line>	னோடு நின்றிடன் முத்தியே.</line>
</verse>


<verse>
<p-title>2. பெளத்தரிற் செளத்திராந்திகன்மதம் I</p-title>
<line>நீதியார் வேத நூலி னெறியலா வறங்க ணாளு</line>
<line>மோதியோ ரைந்து சீல முடையரா யுடல மூடிப்</line>
<line>போதிநீண் மரத்தின் மேவு புத்தர்நால் வரினும் வைத்துச்</line>
<line>சாதிதா னிலாத கொள்கைச் செளத்திராந் திகன்முன் சாற்றும்.</line>
</verse>

<verse>
<line>முழுதுணர்ந் துலகிற் கோறன் முதற்செயன் முனிந்து மற்றும்</line>
<line>பழுதிலா வருளி னாலே பரதுக்க துக்க னாகித்</line>
<line>தொழுதுவா னவரும் போற்றத் தொல்பிட கங்க ளான</line>
<line>வழுவிலா கமங்கள் சொன்ன மாதவ னாத னாவான்.</line>
</verse>

<verse>
<line>மருவிய வளவை காட்சி மானமென் றிரண்டி வற்றாற்</line>
<line>கருதிய பொருள்கண் ஞான ஞேயமாய்க் கணத்திற் பங்கம்</line>
<line>வருமுரு வருவம் வீடு வழக்கென நான்க தாகித்</line>
<line>தருமவை யொன்றி ரண்டாய்த் தாம்விரிந் தெட்டி னாமே.</line>
</verse>

<verse>
<line>உருவியல் பூத மோடங் குபாதான ரூப மாகு</line>
<line>மருவியல் சித்தங் கன்ம மென்றிரண் டாகும் வீட்டின்</line>
<line>மருவியல் குற்றங் கந்த மெனவழங் கிடும்வ ழக்கி</line>
<line>னிருவிய லுள்ள தோடங் கில்லதா மியம்புங் காலே.</line>
</verse>

<verse>
<line>மண்புன லனல்கால் பூதம் வலிகந்தமிரத வன்ன</line>
<line>மெண்டரு முபாதா னந்தா னிவையிரு நான்குங் கூடி</line>
<line>யுண்டொரு பொருளு ரூப முருபுல னுபாங்க மோடக்</line>
<line>கண்டது சித்தங் கன்ம நன்றுதீ தென்றல் காணே.</line>
</verse>

<verse>
<line>குற்றவீ டராக மாதி குணங்களைக் குறைத்த லாகு</line>
<line>மற்றவீ டுருவ மாதி யைந்தையு மாய்த்த லாகுஞ்</line>
<line>சொற்றருந் தொகைதொ டர்ச்சி மிகுத்துரை யென்று மூன்றா</line>
<line>யுற்றிடும் வழக்கி ரண்டு மொன்றுமூன் றாகி யாறாம்.</line>
</verse>

<verse>
<line>ஒருவனென் றோதப் பட்டா னுருவாதி யைந்துங் கூடி</line>
<line>வருபவ னென்று ரைத்த றொகையுண்மை வழக்க தாகு</line>
<line>முருவமங் காதி யாய வைந்தையு மொருவ னின்று</line>
<line>தருவது தொகையி னின்மை வழக்கதாஞ் சாற்றுங் காலே</line>
</verse>

<verse>
<line>காரண காரி யத்தின் றொடர்ச்சியாய்க் கால மூன்றின்</line>
<line>சோர்வரத் தோன்றுங் கெட்டு வழியென்கை தொடர்ச்சி யுண்மை</line>
<line>யோர்தரி னொருவ னேயெக் காலத்து முள்ளா னென்று</line>
<line>தேர்வது தொடர்ச்சி யின்மை வழக்கதாஞ் செப்புங்காலே.</line>
</verse>

<verse>
<line>தோற்றிய பொருள்க ளெல்லா நாசமா மென்று சொல்லு</line>
<line>மாற்றமுன் னுரைத்தன் மற்றை மிகுத்துரை வழக்கினுண்மை</line>
<line>போற்றிய பொருள்கண் கட்குப் போனது போன்மு திர்ந்து</line>
<line>வேற்றுமைப் பட்ட தென்கை மிகுத்துரை யில்வ ழக்கே.</line>
</verse>

<verse>
<line>உள்வழக் கில்வ ழக்குள் ளதுசார்ந்த வுள்வ ழக்கோ</line>
<line>டுள்ளது சார்ந்த வின்மை வழக்குட னின்மை சார்ந்த</line>
<line>வுள்வழக் கின்மை சார்ந்த வில்வழக் கென்றோ ராறா</line>
<line>முள்வழக் குளதுண் டென்கை முயற்கோடின் றில்வ</line>
<line>								[ழக்கே.</line>
</verse>

<verse>
<line>உணர்வுசார்ந் துணர்வு திக்கை யுள்ளது சார்ந்த வுண்மை</line>
<line>யுணர்வுபி னின்றா மென்கை யுள்ளது சார்ந்த வின்மை</line>
<line>யுணர்வுமுன் பின்றித் தோன்ற லில்லது சார்ந்த வுண்மை</line>
<line>யுணரினில் லதுசா ரின்மை யுள்ளங்கை யுரோம நாணே.</line>
</verse>

<verse>
<line>	வான்முதல் ஐந்தும் அநித்தியம் எனல்</line>
<line>சொன்னநால் வகையு மன்றிச் சொல்லிடும் பொருள்க</line>
<line>								[ளெல்லா</line>
<line>மென்னையோ வறிகி லோம்பித் தெறியோ வான மான்மா</line>
<line>மன்னுகா லங்க டிக்கு மனமொடு வாக்கி றந்திட்</line>
<line>டுன்னுமோ ரிறையு முண்டென் றுரைப்ப்பது நித்த மன்றே.</line>
</verse>



<verse>
<p-title>1. வானம்</p-title>
<line>ஈங்குவான் செயர்கு வாரா தியம்பிய பொருள்க ளெல்லாந்</line>
<line>தாங்குவா னுளதே யென்னிற் றரித்திடா தருவ மாத</line>
<line>லோங்குவா னோசைக் காதி யெனிலதங்குருவின் கூட்ட </line>
<line>நீங்குவா னின்றி யெங்கு நின்றதே லெங்கு மின்றே.</line>
</verse>



<verse>
<p-title>2. ஆன்மா</p-title>
<line>போதமுண் டுயிர்கட் கென்னில் வாயிலும் புலனு நாலு</line>
<line>மாய்தலின் றொட்டுத் தீட்டுக் கலப்பினி லறியு மென்னி</line>
<line>லேதமுண் டிரவிற் பச்சை சிவப்புட னேய்ந்த போது</line>
<line>கேதநின் றென்னோ வென்னு மையமுன் கிடத்த லாலே.</line>
</verse>

<verse>
<line>அறிந்திடா வாயி லின்றே லறிவின்றா மைந்தும் பற்றி</line>
<line>யறிந்திடு மறிவுண் டென்னி லைந்தினு மறிவொன் றாக</line>
<line>வறிந்திட வேண்டுஞ் சார்பி னறிந்திடு மென்னி லுன்னை</line>
<line>யறிந்திலோம் புத்த னென்றிங் கழகிது சொன்ன வாறே.</line>
</verse>

<verse>
<line>ஞானஞே யங்க ளன்றி ஞாதுரு வென்று சொல்ல</line>
<line>வானதிங் கறிவோ வன்றோ வன்றெனி லவனி போலுந்</line>
<line>தானதிங் கறிவே யென்னிற் சமைத்திடு நன்ப ருப்புப்</line>
<line>போனகந் தனக்குத் தானே கறியெனப் புகன்ற தாமே.</line>
</verse>

<verse>
<line>உயிரினை யருவ தென்னி னுருவுட னுற்று நில்லா</line>
<line>துயிரினை யுருவ தென்னி லுடலினி லுடல டங்கா</line>
<line>துயிரினை யணுவ தென்னி லுடல்பல துவார மோடு</line>
<line>முயிரினை நித்த மென்னி லுணர்வுத யாந்த மின்றே.</line>
</verse>

<verse>
<line>எங்குமாய் நின்ற தான்மா வென்றிடி னெங்கு மின்றாந்</line>
<line>தங்கிடு நிறைவு தத்தஞ் சரீரங்க டோறு மென்னின்</line>
<line>மங்கிடு முடலத் தோடே வடிவினி லோரி டத்தே</line>
<line>யங்கது நின்ற தென்னி லடிமுடி யறிவின் றாமே.</line>
</verse>



<verse>
<p-title>3. காலம்</p-title>
<line>சாற்றிய கால மிங்குத் தங்கிய வாறி தென்னை</line>
<line>தோற்றுவித் தளித்துப் போக்குந் தொழிலிவை கால	</line>
<line>							[மென்னிற்</line>
<line>போற்றிய பொருளிற்புக்குப் பிணங்கிடும் பொருட்பினின்றாந்</line>
<line>தேற்றிய வில்வ ழக்குத் திரவியத் தியல்பி னாமே.</line>
</verse>



<verse>
<p-title>4. திக்கு</p-title>
<line>எனக்குநீ கிழக்கி ருந்தா யாகின்மேற் கென்றா யென்பா</line>
<line>லெனக்குமேற் கிருந்தா னென்பாற் கிழக்கென வியம்புந்</line>
<line>							[திக்குத்</line>
<line>தனக்குநாங் கொள்வ தெப்பாற் சாற்றிடா யில்வ ழக்குத்</line>
<line>தனக்குள தாகு முண்மை தானில தாகு மன்றே.</line>
</verse>



<verse>
<p-title>5. இறை</p-title>
<line>உலகினைப் படைத்தா னென்றா யொருவனிங் குள்ள தாகி</line>
<line>லுலகினைப் படைக்க வேண்டா வில்லையேற் படைக்க</line>
<line>							[வொண்ணா</line>
<line>வுலகினுக் குபாதா னந்தா னுள்ளதாய்க் காரி யத்தா</line>
<line>முலகினைப் படைக்கி லங்கு முளதில தாவ துண்டே.</line>
</verse>

<verse>
<line>உள்ளது கடாதி போல வுதிப்பித்தா னென்று ரைக்கின்</line>
<line>மெள்ளவே யெங்கு நின்று விதித்தன னுலகின் மீது</line>
<line>வள்ளறா னின்றா னென்னில் வந்ததா முலக முன்னே</line>
<line>தள்ளிடா தெங்கு நிற்கி லெங்குமுன் றந்த தாமே.</line>
</verse>

<verse>
<line>இல்லது கருணை யாலே யியற்றின னிறைவ னென்னிற்</line>
<line>கொல்லரி யுழுவை நாகங் கூற்றமுங் கொண்டு தோற்ற</line>
<line>வல்லவன் கருணை யென்னோ வலியினால் வேண்டிற்</line>
<line>								[றெல்லாம்</line>
<line>பல்கவே படைத்தா னாயிற் பித்தரைப் பணிந்தி டாயே.</line>
</verse>

<verse>
<line>பெறுவதிங் கென்ப டைத்துப் பெற்றது விளையாட் டென்னிற்</line>
<line>சிறுமழ விறைய தாகுஞ் செய்திடுங் கன்மத் தென்னி</line>
<line>னுறுபெருங் கன்மஞ் செய்வோர் முன்புள ராவ ருண்மை</line>
<line>யறிவுறின் ஞால மெல்லா மநாதியென் றறிந்தி டாயே.</line>
</verse>

<verse>
<line>உருவொடு நின்றா னென்னி லுருவமுன் படைத்தார் வேண்டு</line>
<line>முருவவ னிச்சை யென்னி லுலகெலா மிச்சை யாகு</line>
<line>முருவுல கத்து ளோர்கட் குறுவது கன்மா லென்னி</line>
<line>லுருவுடை யோர்கட் கெல்லா முற்றது கன்மத் தாமே.</line>
</verse>

<verse>
<line>அருவெனிற் பவத்தி னின்று மெடுத்திடா னாகா யம்போன்</line>
<line>மருவின னிழல்போ லென்னின் மருவினோர்க் காகு மாட்சி</line>
<line>பெருகிய வறிவுண் டென்று பேசிடி னேசத் தோடுங்</line>
<line>கருதிட வுருவம் வேண்டு மில்லையேற் கருத லின்றே.</line>
</verse>

<verse>
<line>எங்கணூ லநாதி யாக விறைவனுண் டென்னு மென்னி</line>
<line>னுங்கணூ லுரைப்பா ரின்றி யோதுவ தழகி தாகு</line>
<line>மங்கவன் றன்னை நூல்கொண்ட றிந்தன மவனைக் கொண்டே</line>
<line>யிங்குநூ லறிந்தோ மென்னி னீதொராச் சரிய மாமே.</line>
</verse>

<verse>
<line>உற்றெழு மரங்க ளாதி யுயிரின்றிப் பூத ரூபம்</line>
<line>பற்றியிப் பாரின் மீது பாங்கினாற் பலவு மாகிப்</line>
<line>புற்றொடு மயிர்கொம் பாதி போலவே தோன்றி மாயு</line>
<line>மற்றுள யோனி கட்குப் பயனென வழங்கு மன்றே.</line>
</verse>

<verse>
<line>கொன்றிட லாகா தென்றுங் கொன்றவை கொண்டு நாளுந்</line>
<line>தின்றிட லாகு மண்ணோ டொத்திடுஞ் செத்த வெல்லா</line>
<line>மொன்றிய வாச மூட்டி யுண்ணிநீர் வைத்த வர்க்கோ</line>
<line>சென்றுநின் றுண்ட வர்க்கோ புண்ணியஞ் செப்பி டாயே.</line>
</verse>

<verse>
<line>அழித்திடு மராகமாதி யகற்றிநல் லறங்கள் பூரித்</line>
<line>திழித்திடும் புலன்கள் போக்கி யின்பொடு துன்பம் வாட்டிப்</line>
<line>பழித்திடாப் பழுதில் வாழ் க்கை யெட்டையும் பாரித் தெல்லா</line>
<line>மொழித்திடு ஞான சீல சமாதியி னுறுதி யாமே.</line>
</verse>

<verse>
<line>ஓங்கிய வுருவ மோடும் வேதனை குறிப்பி னோடுந்</line>
<line>தாங்குபா வனைவிஞ் ஞானந் தாமிவை யைந்துங் கூடிப்</line>
<line>பாங்கினாற் சந்தா னத்திற் கெடுவது பந்த துக்க</line>
<line>மாங்கவை பொன்றக் கேடா யழிவது முத்தி யின்பம்.</line>
</verse>


<verse>
<p-title>செளத்திராந்திகன் மதமறுதலை</p-title>
<line>அனைத்தினையு முணர்ந்தானெம் மிறைவ னென்றிங்</line>
<line>	கறியாது புத்தநீ யறைந்தா யென்று</line>
<line>மனைத்தினையு மறிந்திடா னளவி லாமை</line>
<line>	யொன்றொன்றா வனைத்தினையு மறிந்தா னென்னி</line>
<line>னனைத்தினையு மளவிறந்த தென்ன வேண்டா</line>
<line>	வளவிலா ஞானத்தா லறியின் ஞான</line>
<line>மனைத்தினையு மறியாது கணத்திற் றோன்றி</line>
<line>	யழிதலா றறிந்தமையின் றாகு மன்றே.</line>
</verse>

<verse>
<line>சிலபொருளை யுணர்ந்தவற்றின் றிறத்தே யொட்டிச்</line>
<line>	சிந்திப்ப னெப்பொருளு மென்னிற் சென்று</line>
<line>பலபொருளா யொன்றுபல பேத மாகிப்</line>
<line>	பயின்றுவரு மாதலாற் பார்க்கு மாறென்</line>
<line>னுலகுதனி லொருபொருளங் குணரும் போதி</line>
<line>	லுற்றுணர்த லாராய்த றெளித லுண்டாய்</line>
<line>நிலவுமத னாலுணர்வு பன்மை முன்பி</line>
<line>	நின்றிடா தெறாபையெல்லா நினைப்பதெங்கே.</line>
</verse>

<verse>
<line>முத்திநலங் கண்டறங்கண் மொழிந்தா னாயின்</line>
<line>	முதன்முழுதும் பொன்றிப்பின் மொழிந்த வண்ண</line>
<line>மொத்திடுந்தே னெய்கூட்டி யுண்டிறந்தோ னொருவ</line>
<line>	னுலகினில்வந் திதுதீதென் றுரைத்தா லொக்குஞ்</line>
<line>செத்ததுபி னென்றுரைக்கிற் கதியிற் செல்லாத்</line>
<line>	தேரனுரை நீர்பெருகிச் சென்றாராகு</line>
<line>மத்தினள வறியாதிக் கரையோர் தம்மை</line>
<line>	யக்கரைக்கே செல்லவிடு மாசை யாமே.</line>
</verse>

<verse>
<line>நீர்போல நின்றுயிர்கட் களித்தி டாதே</line>
<line>	நெருப்பாய துயர்ப்பிறப்பி னிகழ் ந்து நின்று</line>
<line>பாரோர்கட் களித்தபடி வனையிற் பட்ட</line>
<line>	பலகலைமான் கண்டொருநீள் கலைபாய்ந் தோடி</line>
<line>நேரேசென் றவ்வலைக்கே நேர்ந்தா லொக்கு</line>
<line>	நீள்பாவக் குழியில்விழு நீர்மை யாகு</line>
<line>மாரோவிங் கவனொப்பா ரறத்தை யாக்கப்</line>
<line>	பிறந்தறமாக் கினனென்னி லடங்க வாமே.</line>
</verse>

<verse>
<line>அலகிறந்த யோனிகளிற் புகுந்த வெல்லா</line>
<line>	மறத்தையளித் திடவென்னி லவற்றி னெல்லா</line>
<line>நில்வுவது கன்மத்தா லாகு மன்றி</line>
<line>	நினைந்ததோ ரிச்சையினா னிகழ் ந்தா னாகி</line>
<line>னுலகுதனி லுள்ளோர்க்கு மதுவே யாகு</line>
<line>	மொருத்திவயிற் றினிலிருந்தங் குதரந் தள்ளித்</line>
<line>தலமதில் வந் தானென்னிற் றாயைக் கொன்றான்</line>
<line>	றறுமத்தை யுன்றெனக்குச் சாற்றி டேலே.</line>
</verse>

<verse>
<line>அரியினொடு நரியுழுவை யாதி யாக</line>
<line>	வானபோ தறந்திரிந்து கோற லாதி</line>
<line>பரிவினொடுஞ் செய்தனனா மில்லை யாகிற்</line>
<line>	பசிதனக்குத் தின்பத்வன் பழுதை யோதான்</line>
<line>கருதிலவன் பரதுக துக்க னாகிற்</line>
<line>	கணவனிழந் தோர்கட்குங் கண்ணி குத்தித்</line>
<line>திரியுமவர் துயரினுக்கு மிரங்கு வோன்றன்</line>
<line>	செயலறத்துக் கழகியதாஞ் செப்புங் காலே.</line>
</verse>

<verse>
<line>ஒருபொருளைத் தேடியதற் குரையுந் தேடி</line>
<line>	யுரைப்பதன்மு னுணர்விறக்கு முனக்கு நூலென்</line>
<line>மருவிவரும் சந்தான வழியி லென்னின்</line>
<line>	வாயுரைத்த தேயுரைத்து வழங்கு மாகும்</line>
<line>பெருகுவது கெட்டென்னி லதுபோ லாம் பின்</line>
<line>	பித்துரைத்த தறியாது பேதை சொல்லுந்</line>
<line>தருவது நூலெப்பரிசு முதனடுவோ டிறுதி</line>
<line>	தான்விருத்த மின்றியது சாற்றி டாயே.</line>
</verse>

<verse>
<line>முன்னாகப் பலவறங்கள் பூரித்தெம் மிறைவன்</line>
<line>	முழுதுணர்ந்திங் கருளினா லுயிர்கண்முத்தி யடையப்</line>
<line>பின்னாகப் பிடகநூலுரைத்தா னென்று</line>
<line>	பேசினா யிவன்முன்பு பேரறங்கள் புரிநூல்</line>
<line>சொன்னாரா ரிவனைப்போன் முன்னொருவ னென்னி</line>
<line>	லவனுக்குச் சொன்னாரா ரெனத்தொடர்ச்சி யாகி</line>
<line>யன்னாய்பி னநவத்தைப் படுமொருவ னின்றா</line>
<line>	மாரோவுன் பாழியிருப் பாரிதனை யறையே</line>
</verse>

<verse>
<line>இந்நூலைச் சொன்னவன்றா னிங்கிருந்தா னென்னி</line>
<line>	லிவனிருத்தி யேத்துமவ னெங்கிருந்தா னெவனோ</line>
<line>வந்நூலோ குருவந்த வடைவுமுனக் கில்லை</line>
<line>	யடைவுதரின் முடிவின்க ணாநாதி போதன்</line>
<line>சொன்னானா மவைவேதா கமங்க ளாகுஞ்</line>
<line>	சுருக்கியூண் டவம் புரியச் சொல்லுவதெல் லோரும்</line>
<line>உன்னூல்கண் கழுவாதே யுதிப்பதன்முன் புலாலோ</line>
<line>	டுண்பானோ ரூன்பிரிய னுரைத்ததொரு நூலே.</line>
</verse>

<verse>
<line>முன்னூலும் வழிநூலுஞ் சார்பு நூலு</line>
<line>	மூன்றாகு முலகத்து மொழிந்த நூல்கள்</line>
<line>ளிந்நூலி னுன்னூலிங் கெந்நூ லென்னி</line>
<line>	லிந்நூல்கா ணெந்நூலென் றியம்ப மாட்டா</line>
<line>யுன்நூலு மொருநூலா யுரைப்ப தென்னே</line>
<line>	யுலண்டுநூல் பருத்திநூல் சுலம்பி நூல்க</line>
<line>ளந்நூலு மல்லாத பொய்ந்நூல் கொண்டிங்</line>
<line>	கறநோற்றுத் திரிந்தவா றழகி தாமே.</line>
</verse>

<verse>
<line>புத்தனவன் பொன்றக்கெட் டுப்போனா னென்று</line>
<line>	போற்றுவதிங் காரைநீ பொய்த்தவஞ்செய் புத்தா</line>
<line>செத்தவர்க்குச் சிலகிரியை செய்ய விங்குச்</line>
<line>	செய்தவர்க்குப் புண்ணியமா மென்று செப்பி</line>
<line>னித்தமுயி ராதலாற் பலிக்குஞ் செய்தி</line>
<line>	நினைந்துதரு வானுமுள னுனக்கிவ்வா றில்லை</line>
<line>வைத்தசுடர்த் தீபமற மாய்ந்தக்கா லதற்கு</line>
<line>	மருவுதிரி நெய்கூட்டு மதிகேடுன் வழக்கே.</line>
</verse>

<verse>
<line>நாலுரைத்தா னொருவனுள னென்றனுமா னத்தா</line>
<line>	னூல்கொண்டிங் கறிந்தாற்போ னூலா நூலின்</line>
<line>பாலுரைத்த பொருள்களெல்லா மனுமான மென்னிற்</line>
<line>	பரலோக பாதாள லோகங்க லொருசொல்</line>
<line>லாலுரைத்த நூலின்றி யறையா யின்றே</line>
<line>	லவையறிந்த படியெனுன தனுமான மன்றான்</line>
<line>மேலுரைக்கும் பிரமாண முனக்கில்லை காட்சி</line>
<line>	யனுமானம் விட்டபொருள் விளக்குவதா கமமே.</line>
</verse>

<verse>
<line>எப்பொருளு மநித்தமென வியம்பிடுவை யநித்த</line>
<line>	மில்லதற்கோ வுள்ளதற்கோ வுளதிலதா னதற்கோ</line>
<line>செப்பிடினில் லதற்கில்ல தென்று மில்லை</line>
<line>	சென்றடைவ துள்ளதற்கே லுள்ளதென்று முண்டா</line>
<line>மப்படிதா னுளதிலதா மப்பொருளுக் கென்னி</line>
<line>	னுளதிலதா காதிலது முள்ள தாகா</line>
<line>திப்பொருளுக் கநித்தமிலை யென்றொன்றைக் காட்டா</line>
<line>	யெனிற்றோன்றும் பொருணின்றிங் கிறுதி யாமே.</line>
</verse>

<verse>
<line>அங்குரம்வித் தின்கேட்டிற் றோன்றுமது போல</line>
<line>	வனைத்துருவுங் கெட்டுவழி யாகு மென்னி</line>
<line>னங்கவற்றுக் காக்கக்கே டறைந்தா யெல்லா</line>
<line>	மநித்தமெனு முரைமறந்தா யருகனுமா னாய்நீ</line>
<line>யிங்குமுளை யிலைமரமா யெழுந்தீண்டிச் செல்லா</line>
<line>	திறந்ததே யெழுந்தபடி நில்லா தென்னின்</line>
<line>மங்கியிடா தேபால தருணவிருத் தையாய்</line>
<line>	வரும்வடிவு திரிந்துநின்று மாயுங் காணே.</line>
</verse>

<verse>
<line>உடல்பூத மெனினொன்றுக் கொண்றுபகை யொன்றா</line>
<line>	வுதிரசுக் கிலமென்னின் மரத்தினுளுக் கல்லி</line>
<line>னிடமாகத் தவளையுரு வந்தவா றியம்பா</line>
<line>	யிருவினைகா ணெனில்வினைக ளிரண்டுருவாய் நிற்குந்</line>
<line>திடமாக வன்னமுரு வெனிலுண்ண வுண்ணச்</line>
<line>	சென்றுவள ருங்காயந் தேயுமுணர் வென்னின்</line>
<line>மடவோனே யருவுணர்விங் கசேதனமா யுருவாய்</line>
<line>	வளராது வருமில்லா தெனின்மலர்வான் வருமே.</line>
</verse>

<verse>
<line>என்றுமிலா தொன்றின்றாய் வருமுருவம் வித்தி</line>
<line>	னெழுமரம்போ லெனின்வித்தி னுண்டாய்நின்றெழுங்கா</line>
<line>ணின்றதேல் வித்தின்மரங் கண்டதில்லை யென்னி</line>
<line>	னெற்கமுகாய் நீளாது நெல்லாயே நீளு</line>
<line>மொன்றிலொன்றங் கிலாமையினா லுதியாகா ரணம்பெற்</line>
<line>	றுதிப்பதுகா ரியமதுவு முள்ள தாகு</line>
<line>மன்றமதிக் கலைபோலக் கந்த மைந்து</line>
<line>	மருவியுள தெனுமுரையு மறந்தனையோ வின்றே.</line>
</verse>

<verse>
<line>உருவமெலாம் பூதவுபா தாய சுத்தாட்</line>
<line>	டகவுருவ மென்னினீ யுலவத் துக்கு</line>
<line>மருவுமன லோடுநீர் மண்கந்த மிரதம்</line>
<line>	வன்னமிலை வன்னிக்கு வளிநீர்மண் வாசந்</line>
<line>தருமிரத மிலைநீர்க்குத் தழல்கான்மண் கந்தந்</line>
<line>	தானில்லை தலத்தினுக்குச் சலமனல்கால் கூடி</line>
<line>வருவதிலை யிந்திரிய விடய மான</line>
<line>	மாபூதங் களுமறியாய் மதிகெட் டாயே.</line>
</verse>

<verse>
<line>மருத்தெண்ணெய் தனின்மருந்து நின்றாற் போல</line>
<line>	மறைந்தெட்டுஞ் சூக்குமமாய் மருவு மென்னிற்</line>
<line>றிருத்துமவன் மருத்தெண்ணெய் சேர்த்தாற் போலச்</line>
<line>	சேர்பொருள்வே றுண்டெல்லா வுருவு மெட்டும்</line>
<line>பொருத்தியதே லொருதன்மை யாம்பொருள்க ளொன்றின்</line>
<line>	குணமொன்றிற் புகாதறைகை பொருளறியாய் பூத</line>
<line>வுருப்பொருள்வே றுபாதானப் பொருள்வேறு காட்டா</line>
<line>	யுபாதாயம் பூதகுணங் குணகுணியா முலகே.</line>
</verse>

<verse>
<line>அழிந்துணர்வை யுணர்வுதரு மெனினழிந்த தாக்கா</line>
<line>	தாமுணர்விற் பொருள்வினைக ளணையா வாகு</line>
<line>மழிந்திடுவ தாக்கியெனின் முன்னொருகா லத்தே</line>
<line>	யறிவிரண்டு நில்லாதங் கறக்கே டின்றி</line>
<line>யழிந்துணர்வை யுணர்வுதரு மெனினித்தா நித்த</line>
<line>	மடையுமுணர் வுனக்கநித்த மாயே செல்லா</line>
<line>தழிந்தெருவை யாக்குவது போலாக்கு மென்னி</line>
<line>	லாம்பொருள்வே றழிந்துசத்தி கிடந்தாக்கு மவையே.</line>
</verse>

<verse>
<line>கேடிலாச் சந்தானத் தேபலிக்கு மென்று</line>
<line>	கிளக்கினி சந்தான நித்த மாகு</line>
<line>மோடுநீர் போலழிந்தா முணர்வொழுக்க மென்னி</line>
<line>	லொழுகுநீ ரிட்டதெல்லா முடன்கழிதல் போலத்</line>
<line>தேடுபொருள் சீலம்பா வனைகுறிவிஞ் ஞானஞ்</line>
<line>	சென்றவுணர் வோடேகு நின்றுணர்வி னேயா</line>
<line>நீடுநீர் முன்னொழுகிக் கெடாதுநிறைந் தோடு</line>
<line>	நிகழுணர்வுங் கேடின்றி நினைந்துசெலுங் காணே.</line>
</verse>

<verse>
<line>சந்தானங் காரணமோ காரியமோ விரண்டின்</line>
<line>	றன்மையதோ காரணமுங் காரியமு நித்தம்</line>
<line>வந்தாருஞ் சந்தானந் தொடர்ச்சியெனி னதற்கும்</line>
<line>	வருநித்தந் தோற்றக்கே டடைதலின்மற் றொன்றே</line>
<line>லைந்தான கந்தங்க ளன்றாய் நித்த</line>
<line>	மடைபொருளா மறிவுமறி வடைவு மன்றிச்</line>
<line>சிந்தாமுன் பின்னாகிப் பின்முன் னாகித்</line>
<line>	திரிந்துவருந் திரிவறிந்து தேரா தேரே.</line>
</verse>

<verse>
<line>ஒரு காலத் துணர்வுகெட்டா மெனினுதிப்பீ றொன்றா</line>
<line>	மொருபொருளின் றிரிவுனக்குக் கால மானால்</line>
<line>வருகால நிகழ் காலங் கழிகால மென்று</line>
<line>	வழங்குவதென் பொருள்வரவு நிலைகழிவா லன்றேற்</line>
<line>றிரிகாலஞ் செப்பிடாய் பொருட்செயலு மொன்றாஞ்</line>
<line>	செயன்மூன்று மொருகணத்தே சேரு மென்னிற்</line>
<line>றருகால மூன்றாகுந் தாமரைநூ றிதழிற்</line>
<line>	றள்ளுசி யுங்கால மூன்றினையுந் தருமே.</line>
</verse>

<verse>
<line>உணர்வுகா ரணமுணர்வுக் கெனினித்த முணர்வுக்</line>
<line>	குண்டாகி நின்றுணர்வை யுதிப்பி யாதிங்</line>
<line>குணர்வுசந் தானவிடத் தொழிந்தாற் பின்னை</line>
<line>	யுண்டாகா துடலுணர்வுக் குபாதான மென்னி</line>
<line>னுணர்வுடலி னிடையறா துதிக்க வேண்டு</line>
<line>	முடலுணர்வின் வினையினா லுணர்வுதிக்கு மென்னி</line>
<line>னுணர்வுவினை யுளதொடுங்கா துணர்வுதருஞ் செய்தி</line>
<line>	யுணர்வைவினை தரினொருவன் செயல்வினையின் றாமே.</line>
</verse>

<verse>
<line>வினையுணர்வு தரும்வினையை யுணர்வுதரு மென்று</line>
<line>	விளம்பினீ யுணர்வுபோல் வினையி னுக்கு</line>
<line>நினைவுவரு மொன்றையொன்று நிகழ் த்தி டாபின்</line>
<line>	னிலையின்மை யானிகழ் த்திக் கெடுதல் செய்யா</line>
<line>கனல்விறகிற் பிறந்ததனைப் பொடிசெய் தாற்போற்</line>
<line>	கருத்தும்வினை யிற்றோன்றிக் கழிக்கும்வினை யென்னின்</line>
<line>முனமுணர்வு பிறந்தளவே வினைகெடுக்கு முன்பி</line>
<line>	னுதியாது முகிழ் நெருப்பின் விறகுதியா வாறே.</line>
</verse>

<verse>
<line>பேயுநர கருஞ்சுரரும் பிரமருமா யுலகிற்</line>
<line>	பிதாமாதா வாதார மொன்று மின்றிக்</line>
<line>காயமொடு தாம்வருவ ரென்றுரைப்பை காயங்</line>
<line>	காரியமாய் வருதலினாற் காரணமுண் டாகு</line>
<line>மாயுமுணர் வோசுத்த வட்டகமோ கன்மம்</line>
<line>	வடித்ததோ வடிவுசெய்து வைத்தாரு முண்டோ</line>
<line>வாயுமறி வுண்டாகி லறைந்திடா யுலகுக்</line>
<line>	காதிதுணை நிமித்தகா ரணமறிவ தறிவே.</line>
</verse>

<verse>
<line>உருவாதி கந்தங்க ளைந்துங் கூடி</line>
<line>	யொருவன்வே றொருவனிலை யென்றுரைக்கும் புத்தா</line>
<line>வுருவாதி யைந்தினையு முணர்பவர்யா ரென்ன</line>
<line>	வுணரும்விஞ் ஞானமென்றாய் ஞானமுணர்ந் தவரா</line>
<line>குருவாதி பொருள்காட்டித் தனைக்காட்டுஞ் சுடர்போ</line>
<line>	லுணர்வுபிறி தினையுணர்த்தித் தனையுணர்த்து மென்னி</line>
<line>னுருவாதி பொருளினையுஞ் சுடரினையுங் காணு</line>
<line>	முலோசனம்போ லுணர்வுபொரு ளுணர்பவன்வே றுண்டே.</line>
</verse>

<verse>
<line>காயமுட னிந்திரிய மனநா னென்று</line>
<line>	கதறுவாய் காயமுறக் கத்தறியா வாகும்</line>
<line>வாயில்களு மப்படியி னொன்றையொன்றங் கறியா</line>
<line>	மனங்கணத்திற் கெடுங்கால மூன்றின்வர வறியா</line>
<line>தாயுமுணர் வாகியுடல் பொறிமனமூன் றறிந்தங்</line>
<line>	கவைநானல் லேனென்று மறிந்துமனத் தாலே</line>
<line>யேயுமொரு பொருள்கருதி யிந்திரியப் பாலே</line>
<line>	யிசைவித்துக் காயத்தா லியற்றுவதான் மாவே.</line>
</verse>

<verse>
<line>கழிந்தவுணர் வேபின்னு மியானறிந்தே னென்று</line>
<line>	கருதலினவ் வுணர்வறிந்த தென்னின் முன்னே</line>
<line>மொழிந்தமொழி நான்மொழிந்தே னென்றால் வாய்தான்</line>
<line>	மொழிந்ததோ மொழிந்தவன்வே றானாற் போல</line>
<line>வெழுந்தவுணர் வெல்லாங்கொண் டியானறிந்தே னென்ற</line>
<line>	தெதுவதுதா னுயிருணர்வால் வாக்கான் மற்றை</line>
<line>யொழிந்தகா யந்தன்னா லுணர்ந்துரைத்துச் செய்திங்</line>
<line>	குணர்வினுக்கு மாதார மாய்நிற்கு முயிரே.</line>
</verse>

<verse>
<line>இந்திரிய வீதியெழுஞ் சித்த நெஞ்சத்</line>
<line>	தெழுஞ்சித்த மெனவிரண்டு மொன்றுகெட்டே யொன்று</line>
<line>வந்தெழுவ தெனிற்கனவிற் கண்டபடி நனவின்</line>
<line>	வாய்திறவார் நனவுகண்ட படிகனவிற் காணா</line>
<line>ரந்தனுரு வன்னங்க ளறிந்திடா னன்றே</line>
<line>	யறிகனவு மிறந்துணர்வு மழிந்துறக்க மடைந்தா</line>
<line>லுந்துவதோர் சந்தான மில்லையுணர் வுதிப்ப</line>
<line>	வுயிர்கனவு நனவினையு முணருங் காணே.</line>
</verse>

<verse>
<line>ஒருகாலத் தோரிடத்தி லோருணர்வேற் செவிதா</line>
<line>	னொன்றுணரா திருசெவியு முணரு மோசை</line>
<line>யொருகாலத் திருகண்ணு மிருசெவியு மனமு</line>
<line>	மொருவனைக்கண் டவனுரைகேட் டுணர்ந்திடுமைம்</line>
<line>மொருகாலு முணராவுள் ளுணர்வின்றிப் பொறிக [பொழியு</line>
<line>	ளொன்றொன்றா வுணர்வதுவுள் ளுணர்வைந்து முணரா</line>
<line>வொருகாலும் பொறிவிகற்பித் துணராவுள் ளுணர்வுக்</line>
<line>	குள்ளதுகாண் விகற்பமிரண் டும்முணர்வ துயிரே.</line>
</verse>

<verse>
<line>அருவுணர்வு மாயாறு மாறி மாறி</line>
<line>	யங்கங்கே தோன்றியிடி லகத்துநிலை யின்றி</line>
<line>யுருவினொடு பாலதரு ணவிருத்தா வத்தை</line>
<line>	யுண்டாகா துறக்கத்தி னுடல்தட்ட வழைப்ப</line>
<line>வருவதுணர் வெங்கிருந்து நெஞ்சிலிருந் தென்னின்</line>
<line>	வாயில்வினை யறிந்தெழுப்ப வாயுவறி யாதாந்</line>
<line>திரியொழிய விடிஞ்சில்தொடத் தீபமெழா தடக்கஞ்</line>
<line>	சென்றபொழு தாலுணர்வு நின்றநிலை செப்பே.</line>
</verse>

<verse>
<line>இச்சைவெறுப் பியற்றலின்ப துன்ப ஞான</line>
<line>	மிவையணுவின் குறியாத மிவற்றி லிச்சை</line>
<line>நச்சிநுகர்ந் தொருபழத்தை யினங்கண்டு முன்பு</line>
<line>	நானுகர்ந்த கனியினின மென்றுநச்சல் பின்பு</line>
<line>மெச்சவெறுப் பாதிகளு மிப்படியே யாகு</line>
<line>	மிவைமுன்பும் பின்புமுணர்ந் திடுத லாலே</line>
<line>நிச்சயகர்த் தாவொருவ னுளனென்று நல்லோர்</line>
<line>	நிறுத்திடுவர் வெறுத்திடுவர் நின்னுடைய பொருளே.</line>
</verse>

<verse>
<line>எப்பொருட்கு மிரந்தரமா யிடங்கொடுத்து நீங்கா</line>
<line>	திருள்வெளிதா னன்றியிரண் டினுக்குமிட வகையா</line>
<line>யொப்பில்குணஞ் சத்தமதாய் வாயு வாதி</line>
<line>	யுதித்தொடுங்க நிற்கும்வா னுயிர்முன்னே சொன்னோஞ்</line>
<line>செப்பிடுங்கா லம்பொழுது நாளாதி யாகித்</line>
<line>	திரிவிதமாய்த் தீமைநன்மை செய்யுந் திக்குத்</line>
<line>தப்பில்குணக் குக்குடக்குத் தெற்குவடக் காதி</line>
<line>	தானாகித் திரியாதே நின்றுபலந் தருமே.</line>
</verse>

<verse>
<line>காரியமா யுலகமெலா மிருத்த லாலே</line>
<line>	கடாதிகள்போற் காரியகர்த் தாவொருவன் வேண்டு</line>
<line>மாரியமா யறம்பொருளோ டின்பம்வீ டெல்லா</line>
<line>	மறைந்துயிர்கட் கறிவுசெய லளிப்பதுநூ லந்நூல்</line>
<line>கூரியரா யுள்ளவர்க ளோத வோதிக்</line>
<line>	கொண்டுவர லான்முன்னே குற்றமின்றிச்</line>
<line>சீரியபே ரறிவுடையோன் செப்ப வேண்டுஞ்</line>
<line>	செயலினுக்குங் கரிவேண்டுஞ் சிவனுளளென் றறியே.</line>
</verse>

<verse>
<line>மரங்களுயி ரல்லவென்று மறுத்துச் சொன்னாய்</line>
<line>	வாடுதல்பூ ரித்தலான் மரங்களுயி ராகுந்</line>
<line>திரங்குநீர் பெறாதொழியிற் பெறிற்சிரத்தை சேருஞ்</line>
<line>	சீவனல வெனிலுலகிற் சீவ னெல்லா</line>
<line>முரங்கொள்வ தூண்பெறிற் சோருமுண் பெறாவே</line>
<line>	லுலர்ந்தமர நீர்பெற்றா லுய்யாதுள் ளுயிர்கள்</line>
<line>கரந்தசினை முட்டைகட்கு வாயிலினின்று வாயில்</line>
<line>	கண்டிலதேற் பூத்துக்காய்த் தெழன்மரங்க</line>
<line>							[ளுயிரே.</line>
</verse>

<verse>
<line>ஒருமரத்தி னுயிரொன்றேற் கொம்பொசித்து நட்டா</line>
<line>	லுய்யுமுயி ரொன்றுபல வாமோ வென்னிற்</line>
<line>கருமரத்தின் வித்துவேர் கொம்புகொடி கிழங்கு</line>
<line>	கண்கலந்து கொள்ளுமுயி ரண்டம் வேர்ப்புத்</line>
<line>தருபிறப்புச் சராயுசங்கள் சனனமும்பெற் றாற்போற்</line>
<line>	றானடையு முற்பீசந் தலநடவா தென்னிற்</line>
<line>பெருநிலத்திற் காலிலார் நடப்பரோ பேதாய்</line>
<line>	பிறப்பின்வித மநேகங்காண் பேசுங் காலே.</line>
</verse>

<verse>
<line>தின்னுமது குற்றமிலை செத்ததெனும் புத்தா</line>
<line>	தின்பையெனக் கொன்றுனக்குத் தீற்றினர்க்குப் பாவ</line>
<line>மன்னுவதுன் காரணத்தாற் றின்னா தார்க்கு</line>
<line>	வதைத்தொன்றை யிடாமையினால் வதைத்தவர்க்கே</line>
<line>மென்னிலுனை யூட்டினர்க்குப் பாவஞ் சேர</line>
<line>	வென்னதவம் புரிகின்றாய் புலால்கடவுட் கிடாயோ</line>
<line>வுன்னுடல மசுகியென நாணி வேறா</line>
<line>	ருடலுண்ணி னசுசியென வுணர்ந்திலைகா ணீயே.</line>
</verse>

<verse>
<line>குடைநிழலுங் கண்ணாடிச் சாயையும்போற் பிறப்புக்</line>
<line>	கொள்ளுமுணர் வென்னிற்கா ரணமழிய வழியு</line>
<line>மடைநிழலுங் கந்தமைந்து மழியுமுனக் கிங்கே</line>
<line>	யவையழிந்தா லருங்கதியி னணையுமுணர் வின்றா</line>
<line>மிடைகனவி னெழுமுணர்வு நனவுணர்வா னாற்போ</line>
<line>	லெழுமுணர்வு கன்மத்தா னினைந்துகதி யென்னின்</line>
<line>மிடைசினையு மந்தனுமுட் டையுமுயிர்விட் டக்கான்</line>
<line>	மேவுவதேன் பிறப்பினுடல் விடாதுகன்ம வுணர்வே.</line>
</verse>

<verse>
<line>ஐந்துகந்தஞ் சந்தானத் தழிதல்பந்த துக்க</line>
<line>	மறக்கெடுகை முத்தியின்ப மென்றறைந்தாய் கந்த</line>
<line>மைந்துமழிந் தான்முத்தி யணைபவர்யா ரென்ன</line>
<line>	வணைபவர்வே றில்லையென்றா யார்க்குமுத்தி யின்ப</line>
<line>மைந்தினுணர் வினுக்கென்னி லழியாதவ் வுணர்வுண்</line>
<line>	டாகவே யெவ்விடத்து முருவாதி கந்த</line>
<line>மைந்துமுள வாமதுவும் பந்த மாகி</line>
<line>	யரந்தைதரு முத்தியின்ப மறிந்திலைகா ணீயே.</line>
</verse>

<verse>
<line>அநாதிமுத்த னாய்ப்பரனா யசலனா யெல்லா</line>
<line>	வறிவுதொழி லனுக்கிரக முடையவரன் கன்ம</line>
<line>நுனாதிகமற் றொத்தவிடத் தேசத்தி நிபாதம்</line>
<line>	நுழைவித்து மலங்களெலா நுங்க நோக்கி</line>
<line>மனாதிகர ணங்களெலா மடக்கித் தன்னை</line>
<line>	வழிபடு நா லறிவருளி மாக்கருணைக் கையா</line>
<line>லினாதபிறப் பினினின்று மெடுத்து மாறா</line>
<line>	வின்பமுத்திக் கேவைப்ப னெங்கண்முத்தி யிதுவே.</line>
</verse>



<verse>
<p-title>யோகாசாரன் மதம்</p-title>
<line>போதமே பொருளாய்த் தோன்றும் பொருளதா யெழலாற்</line>
<line>வாதனை யதனாற் கூடி வருதலால் வடிவி லாமை [போதம்</line>
<line>யாதலாற் கனவு போலுஞ் சகமுள தறிவே யாமென்</line>
<line>றோதினா னோதா னாய வுணர்வினால் யோகா சாரன்.</line>
</verse>


<verse>
<p-title>யோகாசாரன் மதமறுதலை</p-title>
<line>போதமுந் தவிர வோறோர் வாதனை புகன்றாய் போதம்</line>
<line>வாதனை யிரண்டுண் டென்னாய் போதம்வா தனையு மென்னிற்</line>
<line>காதலாற் பொருளி னோடு கலந்துபின் னெழுங்க ருத்தாம்</line>
<line>வாதனை கனவு கண்ட பொருளின்மேல் வருங்க ருத்தே.</line>
</verse>

<verse>
<line>அறிவதே பொருள தாகி லகஞ்சட மென்ன வேண்டும்</line>
<line>பிறிபொரு ளாகும் பேதித் திதம்பிர பஞ்ச மென்னி</line>
<line>லுறுபொரு ளுருவந் தோய்ந்தா லுணர்வுமவ் வுருவாய் நிற்குஞ்</line>
<line>செறிபொரு ளதுவாய் நிற்குந் தெளிபளிங் கதுவே போல.</line>
</verse>



<verse>
<p-title>மாத்தியமிகன் மதம்</p-title>
<line>அவயவம் பொருளாய்த் தோன்று மவயவ மழிந்தாற் பின்னை</line>
<line>யிவையொரு ளென்ன வேறொன் றிலாமையாற் பொருள்க ளின்றா</line>
<line>மவைபொரு ளிலாமை யாலே யறிவுமின் றாகு மென்று</line>
<line>நவைதரு மொழியி னாலே நவிலு மாத் திமிகன் றானே.</line>
</verse>


<verse>
<p-title>மாத்தியமிகன் மதமறுதலை</p-title>
<line>கடத்தினி லவய வங்கள் படத்தினிற் புகாமற் காத்தும்</line>
<line>படத்தினி லவய வங்கள் கடத்தினிற் புகாமற் கொண்டு</line>
<line>மிடத்தினி னிற்கு மாகு மவயவி யிரண்டுங் கூடி</line>
<line>யுடைத்தொரு பொருளுண் டாகப் பொருளுமுண் டுணர்வு முண்டே.</line>
</verse>

<verse>
<line>கருவியு மொளியும் வேறு கருதிடுங் கருத்து நிற்கப்</line>
<line>பொருள்புண ராமை யாலே போதம்வந் தெழுவ தின்றா</line>
<line>மருவிடும் பொருளுண் டாக வந்தெழும் புந்தி யானாற்</line>
<line>பொருளுள தாகு மாகப் போதமு முள்ள தாமே.</line>
</verse>



<verse>
<p-title>வைபாடிகன் மதம்</p-title>
<line>அரிசன நூறு கூட வருணம்வந் தெழுந்தாற் போல</line>
<line>விரிசகம் பொருள்கண் ஞானம் விரவிட மேவித் தோன்றுந்</line>
<line>தெரிசன மிதுவே யென்று தெளிந்திடுந் தேரர் வீடு</line>
<line>பரிவொடு மடைவ ரென்று பகரும்வை பாடி கன்றான்.</line>
</verse>



<verse>
<p-title>வைபாடிகன் மதமறுதலை</p-title>
<line>பொருளது புறம்ப தாகும் போதமந் தாம தாகுந்</line>
<line>தெருளிடி னிரண்டுஞ் சென்று சேர்ந்திடு மாற தின்றா</line>
<line>மருவுணர் வுருவ ஞேய மாதலி னாலுங் கூடா</line>
<line>மருளுணர் வுடைய வைபா டிகற்கினி மாற்ற மின்றே.</line>
</verse>


<verse>
<p-title>3. அமணரில் நிகண்டவாதி மதம் I</p-title>
<line>வாச மாமல ரசோகு பேணிமறை</line>
<line>	நீதி யோடுமலை யுந்தவத்</line>
<line>தாசை யாயுடை யகன்று மாசினை</line>
<line>	யடைந்தில் வாழ் தரு மறத்தினிற்</line>
<line>பாச மானது தவிர்ந்து பண்டிபட</line>
<line>	வுண்டு பாயினொடு பீலிமே</line>
<line>னேச மாயவை தரித்து ளோர்களி</line>
<line>	னிகண்ட வாதியை நிகழ் த்துவாம்.</line>
</verse>

<verse>
<line>ஈறி லாதன வநந்த ஞானமுத</line>
<line>	லெண்கு ணங்களெனு மொண்குண</line>
<line>மாறி லாதமதி மேவு சீதமென</line>
<line>	மன்னி வானவர் வணங்கவே</line>
<line>வேறு லாவுகுண ஞான வாவரணி</line>
<line>	யாதி யெட்டினையும் விட்டசீ</line>
<line>ரேறு பான்மையுட னீடு வாழருக</line>
<line>	னெங்க ளுக்கிறைவ னென்றனன்.</line>
</verse>

<verse>
<line>கருவி கண்படு துடக்கொ ழிந்துவரு</line>
<line>	கால மூன்றுநிகழ்  காரியம்</line>
<line>பெருக நின்றொகு கணத்தி லேயுணர்</line>
<line>	பெருந்த வக்கடவுள் பீடினான்</line>
<line>மருவி நின்றுவழி பட்ட வர்க்குமலை</line>
<line>	வுற்ற வர்க்குமன மொத்திடுங்</line>
<line>குருசி லெங்களிறை யென்று பின்னுநிகழ் </line>
<line>	குற்ற மின்மையது கூறுவான்.</line>
</verse>

<verse>
<line>பசித்த றாகபய செற்ற மோடுவகை</line>
<line>	மோக சிந்தனை பழித்தனோய்</line>
<line>நசித்தல் வேர்வினொடு கேத மோடுமதம்</line>
<line>	வேண்ட லீண்டதி சயித்தலும்</line>
<line>புசிப்பு வந்திடு பிறப்பு றக்கமவை</line>
<line>	வீட்டொ ரட்டகுண பூதனாய்</line>
<line>வசித்த வன்னுலகின் மேலி ருந்தொருசொ</line>
<line>	லிகல னுக்கருளு மென்றனன்.</line>
</verse>

<verse>
<line>அந்த வாய்மொழியி னால வன்சரண</line>
<line>	மாதி யோகமுத லானநூ</line>
<line>லிந்த மாநில மயங்கி டாதவரை</line>
<line>	யிங்கி யம்பின னிதன்பொருள்</line>
<line>வந்த காலமுயிர் தன்ம தன்மியற</line>
<line>	மற்றும் விண்மருவு புற்கலம்</line>
<line>பந்தம் வீட்டினொ டநாதி யாயிவை</line>
<line>	படைப்ப தின்றியுள பத்துமே</line>
</verse>

<verse>
<line>நிற்ற லோடுதலை போத லன்னுவய</line>
<line>	நிகழ் த்து நீடுவெதி ரேகமு</line>
<line>முற்ற தாமிவை கணத்தி லேமருவி</line>
<line>	யுள்ள வாபுரியு மாறுதான்</line>
<line>கற்ற காலமள வெய்தி வாழுமுயிர்</line>
<line>	காய மேவிநிறை வானதே</line>
<line>பெற்று வேறுவரு தன்மை நேரறிவு</line>
<line>	பெற்ற தாகியுள பேசிலே.</line>
</verse>

<verse>
<line>பரந்து மீதுதரு மாத்தி காயமழி</line>
<line>	வித்த நித்தமது பண்ணிடு</line>
<line>நிரந்து கீழதரு மாத்தி காயமது	</line>
<line>	நித்த மாய்கிக நிறுத்திடும்</line>
<line>புரந்த புண்ணிய மதற்கு நன்மைபுகல்</line>
<line>	பாவ மானவது தீமையே</line>
<line>தரும்பொ ருட்கிடம தாகும் வானமிகு</line>
<line>	புற்க லன்களவை சாற்றுவாம்.</line>
</verse>

<verse>
<line>ஏணு மொன்றுடைய வாகி யெங்குமணு</line>
<line>	வாயி ரும்புகன் மரங்களும்</line>
<line>பூணு மங்குரு வெலாமு மாகுமிவை</line>
<line>	புற்க லப்பொருள்க ளென்னலாங்</line>
<line>காணு மங்கறு வகைத்தொ ழில்களவை</line>
<line>	கட்டு விட்டநெறி கன்மமேன்</line>
<line>மான நின்றுவரு மாறி மாறிமுன்</line>
<line>	வகைந்த துண்டுவிட மாட்சியே.</line>
</verse>


<verse>
<p-title>நிகண்டவாதி மதமறுதலை</p-title>
<line>அருக னுக்க னந்த ஞான மாதி யாதி யாகவே</line>
<line>பெருக நிற்றல் சீதமா மதிக்க டைந்த பெற்றியே</line>
<line>லொருவு மிட்ட வொப்பவ னுயிர்த்தி றத்தி னுள்ளபின்</line>
<line>மருவு மிக்க குற்றமே லறத்தின் மன்னி னானெனில்.</line>
</verse>

<verse>
<line>அறத்தின் மன்னு வித்தவன் னொருத்த னாய வன்னறத்</line>
<line>திறத்தி னிற்றன் மற்றொ ருத்த னால்வி ளைந்த செய்தியா</line>
<line>மறத்தி னற்ற வர்க்கெலாம் வணக்க முன்னி றைக்குமேற்</line>
<line>பிறக்கு மிங்க வத்தை கொண்ட தாரை யின்று பேசிடே.</line>
</verse>

<verse>
<line>கருவி தன்று டக்கொ ழிந்து கண்டு வாழு மென்றியே</line>
<line>லுருவு கொண்டு நின்ற தென்னி லுண்டு தான்ம னாதிக</line>
<line>ளொருவி நின்ற தென்னி லத்த மொன்றையும் முணர்ந்திடான்</line>
<line>பொருடெ ரிந்து போகை கால மொன்றி லேபு ணர்ந்திடான்.</line>
</verse>

<verse>
<line>ஆர்வ கோப மானவை யடைந்தொ றுப்ப வர்க்கெலாஞ்</line>
<line>சேர்வ தின்மை செப்பி லின்று சீவ னேகு காயமா</line>
<line>மோரு மன்னர் போலவே யுயிர்க்க ளி?த லின்றியே</line>
<line>யேர்கொள் பொன்னே யிலிடத் திருத்தல் பெற்ற தென்கொலோ.</line>
</verse>

<verse>
<line>சொல்ல தொன்று கொண்டிகலி னாத னாட வேசொலி</line>
<line>னில்லை யாம னாதிதா னியம்பு மாற தெங்ஙனே</line>
<line>நல்ல வாம னாதிதா னவர்க்கு நாட வேயிலை</line>
<line>யொல்லை யூம ருமருக் குரைத்த வாற தொக்குமே.</line>
</verse>

<verse>
<line>இன்ப பூமி சேரி கலி னாத னிவ்வி ரிநிலத்</line>
<line>துன்ப மங்கு ணர்ந்தி டாமை யிங்க றிந்து சொல்லிடா</line>
<line>னின்ற பூமி யில்லிருந் திருந்தி யாவு மெய்திடிற்</line>
<line>றுன்ப பூமி யாமு ணர்ந்து சொல்ல வல்ல தில்லையே.</line>
</verse>

<verse>
<line>நிறைந்து காய மோடு சீவ னின்ற தா கிலிவ்வுடல்</line>
<line>குறைந்த போது தானு மித்தொ டொக்க வேகு றைந்திடு</line>
<line>மிறந்து போகு மிக்கட மிறந்த போது நீர்க்குடத்</line>
<line>துறைந்து டைந்தி டக்குட முலர்ந்த வாற தொக்குமே.</line>
</verse>

<verse>
<line>கண்ட நூற ருந்தன் மாத்தி காய மோட தன்மமு</line>
<line>முண்டு மீது கீழு லாவி யுற்று நின்றி டப்பொருள்</line>
<line>கொண்ட தென்னி லத்தமிவ் விரண்டு தன்மை கூடிடா</line>
<line>வண்டு புட்கள் போலெனின் வழங்கி டாக ணத்திலே.</line>
</verse>

<verse>
<line>நீடு பாவ புண்ணி யங்க ளானி ரய வானகங்</line>
<line>கூடு வார்க ளின்று நின்று கூட்டு வார்க ளின்மையி</line>
<line>னோடு மாக ணைத்தி றத்தி னுற்ற வாறு ரைத்தியேல்</line>
<line>வீடு மாக ணைக்கு நாடும் வில்லி போல வேண்டுமே.</line>
</verse>

<verse>
<line>ஏண தொன்று புற்க லத்தி னெய்து மென்னி னாசமே</line>
<line>காண லாகு மக்கடங் கழிந்த தன்மை யில்லவை</line>
<line>பூண வேண்டு மேலுறும் பொருத்த மின்மை யொன்றினின்</line>
<line>மாண வேய ணுப்பொரு ணிகண்ட வாதி வைத்ததே.</line>
</verse>

<verse>
<line>ஆறு காரி யங்கண் மாற வேத வங்க ளாமெனின்</line>
<line>மாறி வாணி கஞ்செயா திருக்க வந்தி டாதன</line>
<line>மீறி லாத வூழ தென்னி னெங்கு முள்ள தூழதே</line>
<line>பேறு காரி யம்விடப் பிறப்ப தில்லை பேசிலே.</line>
</verse>

<verse>
<line>உடல்வ ருந்தன் மாத வங்க ளுறுதி யென்று ரைத்திடிற்</line>
<line>படவ ருந்து நோயி னோர்கள் படர்வர் பொன்னெ யிலெனாய்</line>
<line>திடம்வ ருந்த லின்ப மிச்சை செய்தல் செய்தல் செய்தியேற்</line>
<line>கெடவ ரிந்தி டாயு னாசி கேடி லின்ப முன்னியே.</line>
</verse>

<verse>
<line>பூர்வ கன்ம மற்றிடப் புசித்த பின்பு பொன்னெயி</line>
<line>னேர்வ தென்னி னக்கன் மத்து நிச்ச யமி லாமையிற்</line>
<line>றீர்வ தின்மை தீரின் வாயில் சேர்வ தின்மை தெண்கட</line>
<line>னீர்வ றந்த போது பூஞை மீன ருந்த நின்றதே.</line>
</verse>

<verse>
<line>கூறு கூவன் மன்னுமக் குடங்கு றித்து நீள்கரை</line>
<line>யேற லுற்ற தன்மைநீ யொருத்த ரின்றி யேறுதல்</line>
<line>வேறொ ருத்த னக்க டத்தை மீது நின்றெ டுக்கவே</line>
<line>யேற லுற்ற தன்மையிற் சிவன்றி றத்தி னின்றிடே.</line>
</verse>



<verse>
<p-title>ஆசீவகன் மதம் 2</p-title>
<line>என்னுயி ரதற்குப் போல வெவர்க்குமொத் திருப்ப னென்று</line>
<line>தன்னுயிர் வருந்தத் தானுந் தலையினைப் பறித்துப் பார்மேன்</line>
<line>மன்னுயி ரெவற்றி னுக்கும் வருந்தவே யறங்கள் சொல்லு</line>
<line>மன்னதோர் வாய்மை யாசீ வகனம ணர்களிற் கூறும்.</line>
</verse>

<verse>
<line>வரம்பிலா வறிவ னாதி வைத்தநூற் பொருள்க டாமு</line>
<line>நிரம்பவே யணுக்க ளைந்து நிலம்புன லனல்கால் சீவன்</line>
<line>பரந்திவை நின்ற பான்மை பாரது கடினஞ் சீதந்</line>
<line>தரும்புனல் சுடுந்தீ வாயுச் சலித்திடு முயிர்போ தத்தாம்.</line>
</verse>

<verse>
<line>பார்புனல் பரக்குங் கீழ் மேற் படர்ந்திடுந் தேயு வாயுச்</line>
<line>சேர்வது விலங்கி னுள்ள மவற்றொடு சேரும் வேறு</line>
<line>சார்வது பெற்ற போது சார்ந்தவப் பொருளின் றன்மை</line>
<line>நேர்வது மாகி நிற்கு மிதுபொரு ணிகழ் ந்து மாறே.</line>
</verse>

<verse>
<line>உணர்தரா வணுக்க ணான்கு மொன்றுகெட் டொன்ற தாகா</line>
<line>புணர்தரா வொன்றிற் புக்கொண் றாயினும் பொருந்தி வாழு</line>
<line>மணைதரா புதிய வந்திங் கழிதரா பழைய வான</line>
<line>விணைதரா வொன்றொன் றாகி மாறுத லொன்று மின்றே.</line>
</verse>

<verse>
<line>கொண்டுமின் விரித்த னீட்டல் குறுக்குதல் குவித்த லூன்ற</line>
<line>லுண்டுதின் றுலத்தன் மீட்ட லுடைத்திட லொன்று 	</line>
<line>								[மொண்ணா</line>
<line>விண்டுபின் புறம்பும் போகும் வேறுநின் றுள்ளு மேவும்</line>
<line>பண்டுமின் றென்று மெங்கும் பரந்தொரு தன்மைப் பாலே.</line>
</verse>

<verse>
<line>கண்ணினிற் காண வொண்ணாச் சனித்தந்தக் கன்மத் தாலே</line>
<line>நண்ணிடு முருக்க ளாகி நின்றபின் னரரோ காண்பார்</line>
<line>விண்ணினிற் றேவர் காண்ப ரோரணு மிக்க நான்கா</line>
<line>யெண்ணிய பொருள்க ளெல்லா மிசைவதென் றியம்பு</line>
<line>							[மின்னே.</line>
</verse>

<verse>
<line>ஒன்றினை யொருவி மூன்றங் குற்றிடா விரண்டு விட்டு</line>
<line>நின்றிடா விரண்டுங் கூடு நெறிநில நான்கு நீர்முன்</line>
<line>றின்றிரண் டழல்கா லொன்றா யிசைந்திடும் பூமி யிவ்வா</line>
<line>றென்றுநீர் தீகா லாதி யீண்டுவ தென்றி யம்பும்.</line>
</verse>

<verse>
<line>வெண்மைநன் பொன்மை செம்மை கழிவெண்மை நீலம்</line>
<line>								[பச்சை</line>
<line>யுண்மையிவ் வாறி னுள்ளுங் கழிவெண்மை யோங்கு</line>
<line>வண்மைய தாகச் சேரு மற்றிவை யுருவம் பற்றி [வீட்டின்</line>
<line>யுண்மையிவ் வொட்டுத் தீட்டுக் கலப்பினி லுணரு	</line>
<line>							[மென்றான்.</line>
</verse>

<verse>
<line>பேரிழ விடையூ றின்பம் பிரிவிலா திருக்கை மற்றும்</line>
<line>வேறொரு நாட்டிற் சேறல் விளைந்திடு முப்புச் சாதல்</line>
<line>கூறிய வெட்டு முன்னே கருவினுட் கொண்ட தாகுந்</line>
<line>தேறிய வூழிற் பட்டுச் செல்வதிவ் வுலக மென்றான்.</line>
</verse>

<verse>
<line>புண்ணிய பாவ மென்னு மிரண்டணுப் பொருந்த வைத்தே</line>
<line>யெண்ணிய விவற்றி னோடு மேழென வெங்க ளோடே</line>
<line>நண்ணிய வொருவன் கூறு ஞானமிவ் வாற தென்று</line>
<line>கண்ணிய கருத்தி னோர்கள் கதியினைக் காண்ப</line>
<line>						[ரென்றான்.</line>
</verse>



<verse>
<p-title>ஆசீவகன் மதமறுதலை</p-title>
<line>வாராநெறி வீடானபின் மண்மேலவன் வந்து</line>
<line>தாராமையி னூலானது தானேவுள தின்றாஞ்</line>
<line>சேராமையி லணுவானவை யைந்தும்மொரு தேசத்</line>
<line>தோரானொரு காலத்தினி லொன்றாமுணர் வின்றாம்.</line>
</verse>

<verse>
<line>இருபான்மைய ரிவர்மண்டலர் செம்போதக ரென்றே</line>
<line>வருபாண்மைய ரிவர்மண்டலர் மண்மேல்வரு நூலுந்</line>
<line>தருபான்மைய ரெனினீதல மதில்வாழ் பவர் தம்போ</line>
<line>லொருபான்மையி னுளராகுவ ருணராதுரை செய்தாய்.</line>
</verse>

<verse>
<line>உயிரானவை யுடறீண்டிட லொட்டுக்கலப் பெய்தும்</line>
<line>பயில்வாலுணர் வெய்தும்மெனு மொழியானது பழுதாந்</line>
<line>துயிலார்தரு மலர்பாலகர் தொடராரறி வினைநீ</line>
<line>செயிலார்தரு முறையேதரு மிதுவோவுன செயலே.</line>
</verse>

<verse>
<line>அணுவானவை கீழ் மேலுள வானாலவ யவமு</line>
<line>நணுகாவென லாமேவரி னாசம்மவை பெய்து</line>
<line>மணுகாவெனி லிவைதொள்ளைகொ ளாகம்முள வாகுந்</line>
<line>துணிவாலிவை கலவாபல தொகையாம்வகை யிலவாம்.</line>
</verse>

<verse>
<line>மிகையாமணு வுளவாகையி னவையாமிக வென்னிற்</line>
<line>றொகைநாலிடை யறலாலவை தொகுமாறில வாகும்</line>
<line>பகையாகையின் மிழைதாழ் வினை நிலையாவகை பண்ணு</line>
<line>நகையாமுரை கழியாயிர மவைதூணென நண்ணா.</line>
</verse>

<verse>
<line>கூடாவணு வறியாமையின் வளிகூட்டுதல் கூறி</line>
<line>னாடாவளி யணுவானவை நணுகச்செயு மவரை</line>
<line>நீடாவினை தன்னாலேனி னினைவின்றது வின்றாந்</line>
<line>தேடாயொரு வனைநீயிவை செய்வானுள னென்றே.</line>
</verse>



<verse>
<p-title>4. பட்டாசாரியன் மதம் 1</p-title>
<line>வேதமே யோதி நாத னிலை யென்று விண்ணி லேறச்</line>
<line>தேசமாங் கன்மஞ் செய்யச் செயிமினி செப்பு நூலி</line>
<line>னீதியே கொண்டு பட்டா சாரிய னிகழ் ந்து நீர்மை</line>
<line>யோதநீர் ஞாலத் துள்ளே யுள்ளவா றுரைக்க லுற்றாம்.</line>
</verse>

<verse>
<line>உற்றிடுங் காம மாதி குணங்கடா முயிர்கட் குண்டா</line>
<line>மற்றிவை தருமே யாயின் மறைமொழி வாய்மை யின்றாங்</line>
<line>கற்றிடு நூலாற் போதங் கலப்பது கல்வி யின்றேற்</line>
<line>பெற்றிடு மழவு மூங்கு மென்னவே பேச லாமோ</line>
</verse>

<verse>
<line>உண்டொரு கடவுள் வேத முரைத்திட வுயிரின் றன்மை</line>
<line>கொண்டவ னல்ல வென்று கூறிடி னுருவங் கூடிற்</line>
<line>பண்டைய வுயிரே யாகும் படித்தநூ லளவு ஞானங்</line>
<line>கண்டிடு முருவ மின்றேற் கருதுவ தில்லை யென்றான்.</line>
</verse>

<verse>
<line>தேவரு முனிவர் தாமுஞ் சித்தரு நரரு மற்று</line>
<line>மியாவரு முரைப்பர் வேத மியற்றின ரின்ன ரென்னப்</line>
<line>போவதொன் றன்று நாளும் பரம்பரை புகவ தாகுங்</line>
<line>கூவனீ ரென்னிற் கொள்ளோ மறுமையைக் குறித்த லாலே.</line>
</verse>

<verse>
<line>உன்னிய வங்க மாறு முன்றுப வேதந் தானுந்</line>
<line>தன்னுளே யடக்கி வேறு தங்கிடா வகையைச் சார்ந்து</line>
<line>முன்னமோர் தோற்ற மின்றி முடிவின்றி நித்த மாகி</line>
<line>மன்னியோ ரியல்பே யாகி வழங்கிடு மறைய தென்றான்</line>
</verse>

<verse>
<line>செய்தியு நெறியு மேவுந் தேவரும் பொருளு மெல்லா</line>
<line>மெய்திய பன்மை யாலே யோரியல் பியம்பா தாகு</line>
<line>மையமில் கால மூன்று மறிந்தபின் னெஞ்ச கத்தாய்</line>
<line>மெய்யதாய் வந்து தோன்றும் விளம்பில் வேத நூலே.</line>
</verse>

<verse>
<line>தப்பிலா வாகுந் தாதுப் பிரத்தியந் தன்னினோடே</line>
<line>யொப்பிலா தாம்பி ராதி பதிகமா முறுப்புங் கொண்டு</line>
<line>செப்புமாம் வேதஞ் சொன்ன விதிப்படி செய்யச் சேம</line>
<line>வைப்பதாம் வீடு பாச மருவல மொருவ லாமே.</line>
</verse>

<verse>
<line>போக்கொடு வரவு கால மொன்றினிற் யுணர்வ தின்றி</line>
<line>யாக்கவே றொருவ ரின்றி யநாதியா யணுக்க ளாகி</line>
<line>நீக்கிடா வினையிற் கூடி நிலமுத லாக நீடு</line>
<line>யூக்கமா ருலக மென்று முள்ளதென் றுரைக்க லாமே.</line>
</verse>

<verse>
<line>நித்தமா யெங்கு முண்டாய் நீடுயி ரறிவு தானாய்ப்</line>
<line>புத்திதா னாதி யாய கருவியின் புறத்த தாகிச்</line>
<line>சுத்தமா யருவ மாகித் தொல்லைவல் வினையின் றன்மைக்</line>
<line>கொத்ததோ ருருவம் பற்றிப் புலன்வழி யுணர்ந்து நிற்கும்.</line>
</verse>

<verse>
<line>செயறரும் வினைகண் மாய்ந்து சிந்தையிற் சேர்ந்து நின்று</line>
<line>பயனொடு பலியா நிற்கும் பலாலமுந் தழையு மெல்லாம்</line>
<line>வயறனின் மருவி நாசம் வந்தபின் பலத்தை வந்திங்</line>
<line>கியல்பொடுந் தந்தாற் போல வென்றும்பி னியம்பு கின்றான்</line>
</verse>

<verse>
<line>நீதியா னித்த கன்ம நிகழ் த்திடச் சுபத்தை நீங்கார்</line>
<line>தீதிலா விச்சா கன்மஞ் செந்தழ லோம்பிச் செய்ய</line>
<line>வேதுதான் வேண்டிற் றெல்லா மெய்தலாஞ் சோம யாக</line>
<line>மாதிதா னாசை வீசி யமைத்திட வீட தாமே.</line>
</verse>

<verse>
<line>கருதிய கன்ம ஞான மிரண்டுங்கா லாகக் கொண்டு</line>
<line>மருவிட லாகும் வீடு மதியினை மதித்துச் செய்தி</line>
<line>யொருவிடிற் பதித னாகும் பதிதனைக் கதியி லுய்க்கத்</line>
<line>தருவதோர் நெறிதா னில்லை யென்னவுஞ் சாற்றி னானே.</line>
</verse>

<verse>
<line>பசுப்படுத் தியாகம் பண்ணப் புண்ணிய மாவ தென்று</line>
<line>வசிப்பினான் மறைகள் சொன்ன வழக்கினால் வாய்மை யாக</line>
<line>நசிப்பிலா மந்தி ரங்க ணவிற்றலி னின்ப மாகும்</line>
<line>பசிப்புளா னொருவ னுண்ணப் பசியது தீர்ந்த பண்பே.</line>
</verse>



<verse>
<p-title>பட்டாசாரியரின் மதமறுதலை</p-title>
<line>வேதஞ் சுயம்புவென வேதந்த வாய்மொழியில்</line>
<line>	வேறும்பர மாண முளதே</line>
<line>னீதந்து காணிங்கு மாதுங்க பாரதமு</line>
<line>	நேர்கண்ட தாகு மதுபோ</line>
<line>லோதுஞ் சொலாய்வருதலானுங் கடாதிபட</line>
<line>மோவந்தி டாவொ ருவரா</line>
<line>லேதந்த தாமறைக ளாய்வந்த வாய்மொழியும்</line>
<line>	வேறிந்து சேக ரனதே.</line>
</verse>

<verse>
<line>உரைதந்தி டானொருவ நெனிலிந்த வானினிடை</line>
<line>	யொலிகொண்டு மேவி யுளதாம்</line>
<line>புரைதந்த மாமறைக ளபிவெஞ்ச மாயொளிர்கை</line>
<line>	பொருடந்த தீப மதுவேல்</line>
<line>வரைதந்த தாலிவுரை கபிலன்சொ லாகுமது</line>
<line>	மறைகின்ற வாறும் வரவும்</line>
<line>விரைவின் சொலாயிதனை யெதுகொண்டு மெவுவது</line>
<line>	விடைகொண்ட தாலு னுரையே.</line>
</verse>

<verse>
<line>உருவின் கணேமருவி வரிலின்று தேரருரை</line>
<line>	யுளதுங்க ணூலின் மறையுந்</line>
<line>தருகின்ற நாதரவ ரிவரென்று நாமமது</line>
<line>	தாவந் திடாமை யதனால்</line>
<line>வருமென்று நீடியெனில் வளர்கின்ற தீபதனில்</line>
<line>	வருகின்ற வாடை பலவா</line>
<line>லொருதந்து வாயனவ னிவனென்ற போதிலிவை</line>
<line>	யுளவென்று நீடி யவையே.</line>
</verse>

<verse>
<line>மறைநின்று நாலுதிசை யவரொன்ற தாகவரு</line>
<line>	முரைதந்த வாய்மை யதனா</line>
<line>னிறைவென்று நீடுமெனில் வனையுங் கடாதிபல</line>
<line>	சொலவொன்றி நீடி யுளதாங்</line>
<line>குறைவின்றி நாடுமொழி யவைசென்று கூடுவதொர்</line>
<line>	குணமுண்ட தாகு மலர்தா</line>
<line>னுறைகின்ற மாலைதனை லுளதென்ற தாகுமெனி</line>
<line>	லுணர்வின்ற தாழி யொலியே.</line>
</verse>

<verse>
<line>உடனின்று நாமுணரு மதுகண்ட வாறொருவ</line>
<line>	னுலகங்க ளேயு ருவமா</line>
<line>யிடநின்று மாமறைக ளவையன்று வாய்மொழிய</line>
<line>	விவைகொண்டு லோக நெறியின்</line>
<line>கடனின்று வாழுமது கருதும்பி னாணைவழி</line>
<line>	கருமஞ்செய் காசினி யுளோர்</line>
<line>திடமென்று சீரரச னுரைதங்கு மோலைதிரு</line>
<line>	முகமென்று சூடு செயலே</line>
</verse>

<verse>
<line>முடிவின்றி வேதியர்கண் முதல்வந்த மூவர்களு</line>
<line>	மொழியுஞ்சொ லாரிய மெனிற்</line>
<line>கடிவின்றி யேகணித ரவர்கண்ட வாறதுவெண்</line>
<line>	வடகண்ட சாதி கடியா</line>
<line>தொடிவின்றி யோடுவதே னுரைதங்கு வேதமொழி</line>
<line>	யுளதென்று கூறு மவர்தா</line>
<line>மடியின்று தானெனும தறிவின்றி யீனுமவ</line>
<line>	ரிலையென்ற வாதர வதே.</line>
</verse>

<verse>
<line>அறிகின்ற பான்மையவ யவநின்ற தாகினணு</line>
<line>	வழியுங் கடாதி யெனவே</line>
<line>செறிகின்ற வாறதிலை யெனின்வந்து செருமது</line>
<line>	திடமன்று கூட வொருவன்</line>
<line>குறிகொண்டு காரின்முளை வருகின்ற பீசமவை</line>
<line>	குலையொன்றி வேனி லழியு</line>
<line>முறுகின்ற காலமவை யுடனின்று போயழியு</line>
<line>	முலகென்று நீடியிலதே.</line>
</verse>

<verse>
<line>நிறைவெங்கு மாகிலுயிர் நெறிநின்று போய்வருத</line>
<line>	லணைவின்ற தாமு டலிலே</line>
<line>குறைவின் றெலாமுமுள குடகந்த மாகிலவை</line>
<line>	விடநின்ற வாறு குறியா</line>
<line>வுறைகின்ற மாதவர்க ளுடனின்று போய்வறிதோ</line>
<line>	ருடல்கொண்டு மீள்வ துணராய்</line>
<line>மறைதந்த வாய்மையதி னிறைவின்றி யேயுலகின்</line>
<line>	மலைகின்ற தாலு னுரையே.</line>
</verse>

<verse>
<line>அழிகின்ற தால்வினைக ளாகின்ற வாறெனொரு</line>
<line>	வதுமங்கி யான பரிசே</line>
<line>லொழிவின்றி யோதனமு மறவுண்ண நாம்வினைக</line>
<line>	ளுறுகின்ற வாற தெனலாங்</line>
<line>கழிகின்ற தாலறிவு வினைதந் திடாவினைஞர்</line>
<line>	கருமங்க ணாடி யுறுவோர்</line>
<line>பழுதின்றி யேயுதவு மதுபண்ப தாவருள்</line>
<line>	பரமன்க ணாகும் வினையே.</line>
</verse>

<verse>
<line>கருமங்கண் ஞானமது வுடனின்ற லான்மருவு</line>
<line>	கதிதங்க லாவ தெனினீ</line>
<line>தருமங்க ராகமுத லவைதங்கு மேலறிவு</line>
<line>	தவிரும்பின் வீடுமணையா</line>
<line>பொருணின்று தேடிவரு பயனுண்டு போகவினை</line>
<line>	புரிகின்ற வாறா தெனவே</line>
<line>திருநின்ற போகம்வள ரவிசென்று மேவியது</line>
<line>	செலவுண்டு சூழ் வ செயலே</line>
</verse>



<verse>
<p-title>பிரபாகரன் மதம் 2</p-title>
<line>அருந்தவனாஞ் சைமினிபண் டாரணநூ லாய்ந்தானாய்த்</line>
<line>திருந்துமுல கினின்கொண்டு செப்பியநூற் றிறமதனைப்</line>
<line>பரிந்துபிர பாகரன்பட் டாசானில் வேறாகிப்</line>
<line>புரிந்துரைசெய் நெறியதனைப் புவனிமிசைப் புகன்றிடுவாம்.</line>
</verse>

<verse>
<line>அருஞ்செயலி னபாவத்தே யபூர்வமெனு மதுதோன்றித்</line>
<line>தருஞ்செயனின் றழியிற்பின் பலிப்பிப்ப தாகுமது</line>
<line>வருஞ்செயலொன் றின்றியே மண்சிலைபோ லாமுத்தி</line>
<line>தருஞ்செயலீ தெனவுணர்ந்து தாரணிமே லவன்சாற்றும்.</line>
</verse>



<verse>
<p-title>பிரபாகரன் மதமறுதலை</p-title>
<line>வேறுபலன் றருவதுதான் வினையென்று வேதங்கள்</line>
<line>கூறவோ ரபூர்வந்தான் கொடுக்குமெனக் கொண்டவுரை</line>
<line>மாறுதரு மறையோடு முன்பின்றி வந்ததாற்</line>
<line>றேறியவிண் பூமுடிமேற் சேர்ந்துமணந் திகழ் ந்ததுவாம்.</line>
</verse>

<verse>
<line>ஆனந்தங் கதியென்ன வறிவழிகை வீடென்கை</line>
<line>யூனம்பி னுணர்வழிந்தோர்க் குளதாகு முயர்முத்தி</line>
<line>தானிங்குச் சிவப்பொழியத் தழனிற்கு மாறில்லை</line>
<line>ஞானங்கெட் டுயிர்நிற்கு மெனுமுரைதா னண்ணாதால்.</line>
</verse>



<verse>
<p-title>5 சத்தப்பிரமவாதி மதம் I</p-title>
<p-title>சிந்தடிவிருத்தம்</p-title>
<line>உரையானது மையலி னாலுலகாம்</line>
<line>புரையோருண ரும்பொருள் பொய்யிதனை</line>
<line>விரையாதுண ரும்மது வீடெனவே</line>
<line>வரையாதுரை வாதி வகுத்தனனே.</line>
</verse>

<verse>
<line>பரிணாம விவர்த்தன மாயமதிற்</line>
<line>றருமாமுல குள்ளது சத்தமதே</line>
<line>பொருளானது சொன்னல மல்லவெனின்</line>
<line>மருவாது பொருட்டிற மற்றிலையே.</line>
</verse>

<verse>
<line>பூமாவென வேயுரை யும்பொருளு</line>
<line>மாமாம் வடி வொன்றி லணைந்திலதா</line>
<line>னாமாதர வெய்துசொ னன்கருவாய்த்</line>
<line>தாமாம்பொரு ணெற்பொரி தானெனவே.</line>
</verse>

<verse>
<line>சொல்வந்தெழ லும்பொரு டோன்றுதலாற்</line>
<line>சொல்லேபொரு ளென்று துணிந்திடுநீ</line>
<line>சொல்லும்பொரு ளும்முட னின்றதெனிற்</line>
<line>சொல்லும்பொரு ளின்று சொனின்றதுவே.</line>
</verse>



<verse>
<p-title>சத்தப்பிரமவாதி மதமறுதலை</p-title>
<line>உரையானது மையலி னாலுலகே</line>
<line>லுரையாயொரு மையலு முள்ளதென</line>
<line>வரையாதுண ரும்மது வண்கதியேல்</line>
<line>வரையாமறை யோடு மலைந்தனையே.</line>
</verse>

<verse>
<line>அருவம்முரை யாதலி னவ்வுருவாய்</line>
<line>மருவும்பரி ணாம மறந்திடுமாம்</line>
<line>பருகுந்ததி யானது பாலதெனி</line>
<line>லுருவம்மது வாயழி யும்முரையே.</line>
</verse>

<verse>
<line>ஆயம்முட னந் த விவர்த்தனமு</line>
<line>மாயவ்வுள தென்றுசொ லெவ்விடமு</line>
<line>மாய்நின்றமை யின்னுரை யின்னலமு</line>
<line>மாயும்பொரு ளுக்கறி நாமமதே.</line>
</verse>

<verse>
<line>உரைபோற்பொரு ளுக்குரு வின்மையினா</line>
<line>லுரையே யுள தென்றனை யின்றரியென்</line>
<line>றுரையேகவி மாலவ னுக்குளதா</line>
<line>முரையாய்கவி யா கவொர் மாலினையே.</line>
</verse>

<verse>
<line>நெல்லிற்பொரி யாவது நீடழலிற்</line>
<line>சொல்லிற்பொரு ளொன்றொடு தொக்கிடலாற்</line>
<line>கல்வித்திற மாமுரை காட்சியினான்</line>
<line>மல்லற்பொருள் சால வளந்தருமே.</line>
</verse>

<verse>
<line>முன்கண்ட பொருட்பெய ராதலினாற்</line>
<line>பின்கண்ட பிழம்புண ரும்பெயரா</line>
<line>னன்கண்ட பொருட்கொரு நாசமதின்</line>
<line>றென்கண்டனை காரிய மின்றழிவே.</line>
</verse>

<verse>
<line>பொருளிந்திரி யம்முணர் வோடுபுமா</line>
<line>னிருளின்றி யிடும்மொளி யித்தனையு</line>
<line>மருவும்பொழு தில்வரு ஞானமதி</line>
<line>லொருவும்பெய ரத்த முதித்திடுமே.</line>
</verse>

<verse>
<line>அத்தந்தெளி தற்கொளி யானதுபோற்</line>
<line>சத்தம்பொரு டானறி தற்குளதா</line>
<line>நித்தம்மது வன்றுரை நின்றழியுஞ்</line>
<line>சித்தன்னொ ருவன்னுரை செய்தனனே</line>
</verse>



<verse>
<p-title>மாயாவதி மதம் 2</p-title>
<line>நானே பிரம மென்றுரைத்து ஞாலம் பேய்த்தே ரென</line>
<line>							வெண்ணி</line>
<line>யூனே புகுந்து நின்றுயிர்கட் குபதே சங்க ளுரைத்துவரு</line>
<line>மானா மதிகே டனுமாய மாயா வாதி பேயாகித்</line>
<line>தானே யுரைக்கு மந்நூலு னுண்மை தன்னைச் சாற்றுறுவாம்</line>
</verse>

<verse>
<line>அறிவா யகில காரணமா யனந்தா னந்த மாயருவாய்ச்</line>
<line>செறிவா யெங்கு நித்தமாய்த் திகழ் ந்த சத்தாய்ச் சுத்த</line>
<line>								மதாய்க்</line>
<line>குறிதான் குணங்க ளொன்றின்றிக் கூறும் வேதந் தனக்</line>
<line>								களவாய்ப்</line>
<line>பிறியா வனுபூ திகந்தனக்காய் நின்ற தந்தப் பிரமந்தான்.</line>
</verse>

<verse>
<line>ஒன்றா மிரவி பலபாண்டத் துண்டா முதகத் தங்கங்கே</line>
<line>நின்றாற் போல வுடறோறு நிகழ் ந்து நிற்கும் பொருண்</line>
<line>							மேற்கண்</line>
<line>சென்றாற் போலப் புலன்களுக்குஞ் சிந்தை தனக்குந்</line>
<line>							தெரிவரிதா</line>
<line>மென்றாற் காட்சி முதலாய விருமுன் றளவைக் கெட்டாதால்</line>
</verse>

<verse>
<line>இருளிற் பழுதை யரவெனவே யிசையு மிரவி யிருங்கதிர்க</line>
<line>ளருளப் பழுதை மெய்யாகி யாவும் பொய்யா மதுபோல</line>
<line>மருளிற் சகமுஞ் சத்தாகி மருவித் தோன்று மாசில்லாத்</line>
<line>தெருளிற் சித்தே சத்தாகும் பித்தாஞ் சகத்தின் செய</line>
<line>							லெல்லாம்.</line>
</verse>

<verse>
<line>உலகந் தானு நிருவசனத் துண்டா மின்றே லுதியாது</line>
<line>நிலவி யுண்டே லழியாது நிற்பதாகு மித்தையா</line>
<line>மிலகு சுத்தி கனல்சேர வின்றாம் வெள்ளி நின்றதாங்</line>
<line>குலவு சகமும் விவகாரம் பரமார்த் தத்திற் கொள்ளாதால்.</line>
</verse>

<verse>
<line>தாங்கு முலகுக் குபாதானஞ் சத்தாஞ் சிலம்பி நூறன்பால்</line>
<line>வாங்கி வைத்துக் காப்பதுபோல் வைய மெல்லாந் தன்பக்க</line>
<line>லோங்க வுதிப்பித் துளதாக்கி நிறுத்தி யொடுக்கத் திலதாக்கு</line>
<line>மாங்கு வந்த வாறதனாற் சத்தாற் சகத்தி னமைவெல்லாம்</line>
</verse>

<verse>
<line>மன்னும் பிரமந் தனில்வானாய் வானில் வளியா யந்தவளி</line>
<line>தன்னி லழலாயழலின்பாற் சலமாய்ச் சலத்திற் றாரணியாய்ச்</line>
<line>சொன்ன விதனின் மருந்தாகித் தோற்று மருந்தி லன்னமா</line>
<line>யன்ன மதனிற் றுவக்காதி யாறு தாது வாயினவால்.</line>
</verse>

<verse>
<line>ஆறு தாதுக் களுங்கூடி வந்த கோச மன்னமய</line>
<line>மாறில் பிராண கோசமய மன்னு மதனின் மனோமயந்தான்</line>
<line>வேறு வரும்விஞ் ஞானமய மேவு மதனி னதுதன்னிற்</line>
<line>கூறி வருமா னந்தமயங் கோச மயம்பின் கூடியதால்</line>
</verse>

<verse>
<line>கோச வுருவிற் பிரமந்தான் கூடித் தோன்று நீடுமொரு</line>
<line>காச மருவுங் கடந்தோறு நின்றாற் போலக் கதிரவன்றன்</line>
<line>வீசு கிரண மருவின்கண் வெளிப்பட் டிடுவ ததிற்பற்றும்</line>
<line>பாச மதனுக் கின்றாகு மென்றாற் பரத்திற் பற்றுண்டோ.</line>
</verse>

<verse>
<line>அலகின் மணிக ளவைகோவை யடைந்த பொழுதினங்கங்கே</line>
<line>நிலவு மொருநூல் பலநிறமாய் நின்றார் போல நீடுருவம்</line>
<line>பலவு மருவும் பேதத்தாற் பன்மை யாகும் பிரமந்தான்</line>
<line>குலவு போக போக்கியங்கள் கொள்ளும் போன்று</line>
<line>							கொள்ளாதால்.</line>
</verse>

<verse>
<line>போற்றுஞ் செயலாற்பலநாமம் புனைந்துபோக போக்கியத்திற்</line>
<line>றோற்று நனவு கனவினுடன் சுழத்தி துரிய மெய்துமிதற்</line>
<line>கேற்ற கரண நிரனிரையே யீரேழ்  நாலொன் றெல்லாமு</line>
<line>மாற்றி நிற்குங் கேடின்றி வந்த போக மாய்ந்திடவே.</line>
</verse>

<verse>
<line>கருவி யெல்லா நானெனவே கருதல் பந்த மக்கருத்தை</line>
<line>யொருவ முத்தி யுண்டாகு முள்ளம் வித்தாஞ் செய்தியினான்</line>
<line>மருவ மாயா காரியங்க ளவித்தை மாய வேமாயை</line>
<line>பிரியும் பிரிய ஞானமது பிறக்கும் பிறவா பேதமே.</line>
</verse>

<verse>
<line>ஆன கன்ம வனுட்டயங்க ளந்தக் கரண சுத்திதரு</line>
<line>மூன மின்றி யச்சுத்தி ஞான மதனை யுண்டாக்கு</line>
<line>ஞான மதுதான் பிரமத்தை நானென் றுணர்த்து</line>
<line>						நான்பிறந்தால்</line>
<line>வான மதிநீர்த் துளக்கமெனக் காணுந் தன்னை மாயையிலே.</line>
</verse>

<verse>
<line>தானே தானா யனுபோகந் தன்னிற் றன்னை யனுபவித்திட்</line>
<line>டூனே யுயிரே யுணர்வேயென் றொன்று மின்றி யுரைபிறந்து</line>
<line>வானே முதலாம் பூதங்கண் மாய மாயா தேநின்று</line>
<line>நானே பிரம மெனத் தெளியு ஞானம் பிரம ஞானமே.</line>
</verse>

<verse>
<line>சாற்று மறைதத் துவமசிமா வாக்கி யங்க டமையுணர்ந்தாற்</line>
<line>போற்றி யதுநீ யானாயென் றவைவ தல்லாற் பொருளின்றே</line>
<line>தேற்று மிதனைத் தெளியாதார் தெளியப் பஞ்ச சாதனமே</line>
<line>லேற்ற லியம நியமாதி யோக மிருநான் கியற்றுவரால்.</line>
</verse>



<verse>
<p-title>மாயாவதி மதமறுதலை</p-title>
<line>ஏக நானென வியம்பி யிப்படி</line>
<line>	யறிந்து முத்தியடை மின்னெனு</line>
<line>மோக மானவுரை கொம்பு மூன்றொடு</line>
<line>	முடிந்தி டாதுமல டாகிய</line>
<line>காக மானது கருங்க லின்றசை</line>
<line>	பறித்த ழுங்கரிய குஞ்சியின்</line>
<line>றாக மார்பசி தவிர்க்க வாயிடை</line>
<line>	கொடுத்த தென்றுரைசெய் தன்மையே.</line>
</verse>

<verse>
<line>நீடு வேதமள வாக வேகமெனு</line>
<line>	நீதி தானிகழ் வ தாகுமே</line>
<line>னாடி ஞாதுருவு ஞான ஞேயமொடு</line>
<line>	நாலு நான்மறையு மோதலா</line>
<line>லோடு மாகுமின தேக மோதுமிவை</line>
<line>	யூன மாகியுரை மாறுகோள்</line>
<line>கூடு மாகுமனு பூதி தானுமது</line>
<line>	கூடி டாதறிவி லாமையே.</line>
</verse>

<verse>
<line>நீதி யாலொளிகொள் பானு வானதக</line>
<line>	னீரி லேநிகழு மாறுபோ</line>
<line>லாதி தானுருவ மாய காயமதின்</line>
<line>	மேவி யாவதிலை யாகுமாந்</line>
<line>தீதி லாவுருவ மாக லானிழல்கள்</line>
<line>	சேர வேறிட மிலாமையா</line>
<line>லோதி லோரகலி னீரி லேயொருவர்</line>
<line>	காண லாலிலது னேகமே.</line>
</verse>

<verse>
<line>வேறு வாயில்புல னோடு மேன்மனமு</line>
<line>	மேவி டாதுபிர மாணமுங்</line>
<line>கூறி டா துளது தானெ னாவுணர்தல்</line>
<line>	கோடு நீமுயலி னாடினா</line>
<line>யீறி லாதபர மேக மேயென</line>
<line>	வியம்பு நீயிசையு ஞானமும்</line>
<line>பேற தாவதிலை பேத மானவிது</line>
<line>	பேண வேயுளது பேசிலே.</line>
</verse>

<verse>
<line>இலகு சோதிமணி யெனவு மேகமனி</line>
<line>	னிதனி லேகமது விலகினாய்</line>
<line>குலவு காசுமொளி யதுவு நீடிவளர்</line>
<line>	குணமு நாடுவதொர் குணியுமாம்</line>
<line>பலவு மானகுண மொருவு மேகமது</line>
<line>	வெனவு நீபகரி னிகரிலா</line>
<line>வுலக மானதனை யுதவு மாறதிலை</line>
<line>	யுணர்வு தானுமிலை யுணரிலே.</line>
</verse>

<verse>
<line>புற்றி னேர்பழுதை தொக்க போதுமயிர்</line>
<line>	புளக மாகவர விரவிலே</line>
<line>யுற்ற தாமதனை யொக்க வேயுல</line>
<line>	குதிக்கு மாறுமொரு சத்திலே</line>
<line>பெற்ற தாகுமெனி னப்பி ராந்தியுடை</line>
<line>	யோரு மப்பிரம பேதமாய்</line>
<line>நிற்பர் நீபகரின் முற்று மையநிலை</line>
<line>	பெற்று நின்மல மிலாததாம்.</line>
</verse>

<verse>
<line>ஓதி யேயுலக மதனை நீயநிரு</line>
<line>	வசன மாகவுரை செய்வதென்</line>
<line>பேதை யோவுளது மிலது மல்லபொருள்</line>
<line>	பேசு வாருமுள ரோசொலா</line>
<line>யாதி யேயுளது வருத லாலிலதி</line>
<line>	லாவ தின்மைய தழிந்துபோம்</line>
<line>நீதி யாலுளதி லாமை நேர்வதெனி</line>
<line>	னேர்மை யாகியது நின்றதே.</line>
</verse>

<verse>
<line>வேற தாகியது போலி ருந்தமையில்</line>
<line>	வெள்ளி சுத்தியெனி லையமே</line>
<line>கூற லாமொரு பரத்தொ டொத்தபொருள்</line>
<line>	கொண்டு வைத்தபடி கண்டன</line>
<line>மாறி டாதுநில நீர தாகியனல்</line>
<line>	வாயு வாகியவை மாறியுஞ்</line>
<line>சேறி டாதுவிவ கார மன்றுபர மார்த்த</line>
<line>	மாயவை செறிந்ததே.</line>
</verse>

<verse>
<line>மாய நூலது சிலம்பி வாயினிடை</line>
<line>	வந்த வாறதனை மானவே</line>
<line>யாய தேயுலக மான தும்பிரம</line>
<line>	மதனி லேயெனி னடங்கிநின்</line>
<line>றேயு மாகுமொரு சித்து மத்துட</line>
<line>	னிலாத தென்றுபி னியம்பினீ</line>
<line>பேய னேகட மிருத்தில் வந்தது</line>
<line>	பிறப்ப தாவதிலை பேசிலே.</line>
</verse>

<verse>
<line>வேற தாகுமுரு வத்தி லேபரம்</line>
<line>	வெளிப்ப டும்மென விளம்பினீ</line>
<line>யூறி லா வொரு சவத்தி லேபிரம</line>
<line>	முண்டு கானுணர்வ தின்றுதான்</line>
<line>மாறி வாயுவு மனாதி யானவையும்</line>
<line>	வந்தி டாமையினி னின்றெனி</line>
<line>னீறு தானுடைய தாய தோபிரம</line>
<line>	மென்கொ லோவிவை யிறப்பதே</line>
</verse>

<verse>
<line>பற்ற தின்றியுட னின்றி டும்பர</line>
<line>	மெனப்ப கர்ந்தனை பரிந்துட</line>
<line>னுற்று டம்பு திரை நோய்ந ரைச்சிறை</line>
<line>	யுறுப்ப ழிந்திவையு முள்ளபின்</line>
<line>குற்ற மென்றிதனை விட்டி டாதுவிட</line>
<line>	வென்ற லுங்குலைவு கொண்டிடும்</line>
<line>பெற்றி கண்டுமொரு பற்ற றும்பரிசு</line>
<line>	பேச வேயுளது னாசையே.</line>
</verse>

<verse>
<line>சோதி மாமணிக ளூடு போனதொரு</line>
<line>	நூலு மானநிலை சொல்லிடும்</line>
<line>நீதி யான்மணிகள் பேத மாகியொரு</line>
<line>	நூலி னின்றமை நிகழ் த்தினா</line>
<line>யாதி தானொருவ னாகி யேபல</line>
<line>	வநந்த யோனியி லமர்ந்தவன்</line>
<line>பேதி யாதநிலை பேசி னாயுலகு</line>
<line>	பேத மேயில தபேதமே</line>
</verse>

<verse>
<line>ஒத்து நின்றுடலி னின்ப துன்பமவை</line>
<line>	யுற்று முற்றிடுவ தின்றெனும்</line>
<line>பித்த வுன்னுரையி லுற்ற தேதிலது</line>
<line>	பெற்ற தின்றிலது பெற்றதேற்</line>
<line>றுய்த்த லின்றுறுதல் சீவ பாவமது</line>
<line>	சொல்லி னொன்றினுந்தோய் விலாமைநீ</line>
<line>வைத்து நித்தமன வாக்கி றந்தபர</line>
<line>	மென்ன மானமிலை யின்னமே.</line>
</verse>

<verse>
<line>எங்கும் நின்றிடி லவத்தை யின்றிடு</line>
<line>	மிசைந்தி டுங்கரண மென்னில்நீ</line>
<line>யங்கு நின்றபர மெங்கொ ளித்ததது</line>
<line>	நின்ற தேலவை யடங்கிடா</line>
<line>விங்கு நின்றதொரு காந்த மானக</line>
<line>	லிரும்பு சன்னிதி யியங்குநேர்</line>
<line>தங்கி நின்றதெனி லிங்கு மீளும்வகை</line>
<line>	தந்தி டாதுனுரை தப்பதே.</line>
</verse>

<verse>
<line>இருள்பொ திந்ததொரு பருதி யிவ்வுலகி</line>
<line>	லிசையி லின்றுடல நானெனு</line>
<line>மருள்பொ திந்ததொரு பிரம மிங்குளது</line>
<line>	மருவி நின்றவுரு வொருவியே</line>
<line>தெருள்பொ திந்துபர னானே னுந்தெளிவு</line>
<line>	சென்ற போதுகதி யென்றிடும்</line>
<line>பொருள்பொ திந்ததெனி மைல னுக்குமலம்</line>
<line>	வருத லாலுளது புன்மையே.</line>
</verse>

<verse>
<line>சுத்த மானது பரத்தி னுக்கணைவ</line>
<line>	தின்று சுத்தம தநாதிநீ</line>
<line>வைத்த மாயமுறு சித்த சுத்தமுற</line>
<line>	மற்ற தற்குமலம் வைத்தனை</line>
<line>யொத்த சீவன்மல கன்ம மாயையுறு</line>
<line>	கின்ற காரண முணர்ந்திடாய்</line>
<line>பித்த னேவிறகி னிற்பி றப்பதெரி</line>
<line>	யென்னின் வேறுபொருள் பெற்றதே.</line>
</verse>

<verse>
<line>உன்னி னீயுமனு போக மென்றபொழு</line>
<line>	துற்றி டுந்துவித மற்றதிங்</line>
<line>கென்னி லில்லையெனி லில்லை நீயுமறி</line>
<line>	வின்மை கண்டவிட முண்மையேன்</line>
<line>மன்னு மோருணர்வு வந்தி டும்முணர்</line>
<line>	வெலாமு மாயையெனின் மாயையே</line>
<line>சொன்ன தோர்பிரம மாயி டும்பிரம</line>
<line>	மாயை யாயறிவு சோருமே.</line>
</verse>

<verse>
<line>ஆர ணங்கடரு தத்து வம்மசி</line>
<line>	பதங்க ளின்பொரு ளறிந்திடாய்</line>
<line>கார ணம்மதுவு நீயு மென்றிருமை</line>
<line>	கண்டு வேறதின்மை கருதலா</line>
<line>னார ணன்பிரம னாலு நாடரிய</line>
<line>	நாய கன்கழல்க ணண்ணிநீ</line>
<line>யேர ணைந்துபொலி சாத னங்கள்கொடு</line>
<line>	யோக ஞானமு மியற்றிடே.</line>
</verse>


<verse>
<p-title>6 பாற்கரியன் மதம்</p-title>
<line>மன்னு மறையின் முடிவென்று மாயாவதி யுடன்மலைந்து</line>
<line>பின்ன மாகிப் பிரமத்தைப் பேதாபேதஞ் சாதித்துப்</line>
<line>பன்னு மொருநூ லதுவாகப் பாரின் மீது பாற்கரியன்</line>
<line>சொன்ன விதனை யிந்நூலி னகத்தே தோன்றச் சொல்லுவாம்</line>
</verse>

<verse>
<line>சித்தே யுலகாய்ப் பரிணமித்துச் சீவனாகித் திகழ் ந்தமையாற்</line>
<line>சத்தே யெல்லா முத்தியினைச் சாரக் கண்ட ஞானங்கள்</line>
<line>வைத்தே மொழியு மாமறைகள் சொன்ன மரபே வந்தக்கா</line>
<line>லொத்தே கெட்டுப் பிரமத்தோ டொன்றாய்ப் போமென்</line>
<line>								றுரைத்தனனே.</line>
</verse>



<verse>
<p-title>பாற்கரியன் மதமறுதலை</p-title>
<line>இயம்பு கின்றதுல காயி டாதுசட</line>
<line>	மின்றி நின்றுசட மாகியே</line>
<line>முயங்கு கின்றமையி லிலவ ணத்திரத</line>
<line>	முழுது மேகனதை முயல்கைபோற்</line>
<line>பயந்த தென்னிலறி யப்ப டும்பொருளு</line>
<line>	மறிவு மென்றுபல வாகுமோ</line>
<line>தியங்கு கின்றதெ னுரைத்தி டாய்கடின</line>
<line>	மாதி யாகிவரு சித்தனே.</line>
</verse>

<verse>
<line>உன்னு கின்றபிர மத்தி லேசிறிதிவ்</line>
<line>	வுலக மானதென வோதினீ</line>
<line>மன்னு கின்றசில கால மோடழியு</line>
<line>	மழிய வந்துதவு மாயையாற்</line>
<line>றன்னி லொன்றுமெனில் வருத லோடிறுதி</line>
<line>	தருத லாலது சடத்ததா</line>
<line>முன்னொ டச்சகமு முண்மை யன்றுசட</line>
<line>	மென்ன வேயுறுதி மன்னுமே.</line>
</verse>

<verse>
<line>வித்தெ ழுந்துமர மாய்வி ளைந்தமை</line>
<line>	விளம்பி னாயுவமை வேறுநீ</line>
<line>நித்த மென்றவுரை பொய்த்து நீடுசக</line>
<line>	மாயெ ழுந்தழியு நின்பர</line>
<line>மொத்தெ ழும்பொழுது வித்தி னுக்கவனி</line>
<line>	யுண்டு தாரக முனக்கெனோ</line>
<line>பித்த னென்றுல குரைத்தி டும்பிரம</line>
<line>	மாயி னாயிவை பிதற்றியே.</line>
</verse>

<verse>
<line>சூட கங்கடக மோதி ரஞ்சவடி</line>
<line>	தொடரொ டாரமுடி தோடுநா</line>
<line>ணாட கந்தருவ தாகு மிப்படி</line>
<line>	யனைத்து மப்பிரம மாகுமே</line>
<line>னீடி டும்பணிகள் செய்து ளோரவை</line>
<line>	புனைந்து ளோர்களை நிகழ் த்திடு</line>
<line>நாடி டுஞ்சக மியற்று வோர்கொடு</line>
<line>	நடத்து வோருளர் நவிற்றிலே.</line>
</verse>

<verse>
<line>அறிவி னோடுசெயன் மாறா வீடதனை</line>
<line>	யணுகொ ணாதவை யிரண்டினா</line>
<line>லுறுதி யானபிர மத்தி னோடழிய</line>
<line>	வொன்ற லாமென வுரைத்திகா</line>
<line>ணிறுதி யேலதனொ டிசைவ தின்றிசைவ</line>
<line>	துள்ல தாயிடினவ் வின்பமெ</line>
<line>பெறுதி நீயுடலோ டுயிர்க ளாயறிவு</line>
<line>	பிரியு மாறுசெயல் பெறுவதென்</line>
</verse>



<verse>
<p-title>7 நிரீசுரசாங்கியன் மதம்</p-title>
<line>மூலம் புரியட் டகம்விகிர்தியாகி மூன்றாய்ப் பிரகிருதி</line>
<line>தூலஞ் சூக்கு மம்பரமாய்ச் சுத்த புருடன் சன்னிதியிற்</line>
<line>பாலன் சேட்டை புரிந்துலகமி யோனி பலவாய்ப்</line>
<line>							பரந்தொடுங்குஞ்</line>
<line>சால வென்று நிரீசுவர சாங்கி யன்றான் சாற்றிடுமே.</line>
</verse>

<verse>
<p-title>நிரீசுரசாங்கியன் மதமறுதலை</p-title>
<line>சுத்த னறிவன் புருடனெனிற் சூழா தாகும் பிரகிருதி</line>
<line>பெத்த நீங்கி னாலும்பின் பெத்த னாவன் பேரறிவாற்</line>
<line>கத்த மேவும் பிரகிருதி கண்டு கழிக்க மாட்டானேன்</line>
<line>முத்த னாகான் சுத்தனுக்கு மூலப் பிரகி ருதியிலையாம்.</line>
</verse>

<verse>
<line>புருடன் பிரகி ருதிபெற்றாற் போதஞ் சிறிதங் குண்டாகிக்</line>
<line>குருடன் முதுகின் முடவனிருந் தூர்ந்தாற் போலப் </line>
<line>								பிரகிருதி</line>
<line>யிருடன் னிடத்தே யிருந்தியங்குங் கன்மா லிறையன்</line>
<line>							றிரண்டினையு</line>
<line>மருட னுருவாய்ச் சேட்டிப்பித் தறியு மமல னரனேயாம்.</line>
</verse>

<verse>
<line>அறியான் புருடன் பிரகிருதி யசேத னங்கா ரியத்தினுக்குக்</line>
<line>குறியாய் நாத னுளனென்று கூறு முத்தி விவேகமெனிற்</line>
<line>செறிவாந் தளைபோ காதறியிற் சேர்த்தோன் வேண்டுஞ்</line>
<line>							செயலிற்போம்</line>
<line>நெறியாற் பணிசெய் துடற்பாச நீக்கிக் கொண்ணீ</line>
<line>							நின்மலனால்</line>
</verse>



<verse>
<p-title>8 பாஞ்சராத்திரி மதம்</p-title>
<line>ஆதியா யருவ மாகி யகண்டபூ ரணனாய் ஞானச்</line>
<line>சோதியய் நின்ற மாயன் சுவேச்சையா லுருவு கொண்டு</line>
<line>நீதியார் கருணை யாலே நீள்கடற் றுயின்று நூலு</line>
<line>மோதினா னென்று பாஞ்ச ராத்திரி யுரைப்ப னுற்றே.</line>
</verse>

<verse>
<line>உந்தியி லயனை யீன்று மவனைக்கொண் டுலகுண் டாக்கி</line>
<line>யந்தநல் லுலக ழிக்க வரனையு மாக்கு வித்துத்</line>
<line>தந்திடுஞ் சகத்தி னுக்குத் திதிகர்த்தா தானே யாகி</line>
<line>வந்திடுந் தோற்ற மீறு நிலைமையும் பண்ணு மாயன்.</line>
</verse>

<verse>
<line>மீனாமை கேழ னார சிங்கம்வா மனனாய் வென்றி</line>
<line>யானாத விராமர் மூவ ராயனா யளித்தான் கற்கி</line>
<line>தானாயும் வருவ னின்ன மென்றவன் சாற்றித் தேவர்</line>
<line>கோனாயு நிற்ப னென்று கூறுவன் குறிப்பி னோடே.</line>
</verse>

<verse>
<line>ஏழ் கடல் செலுவி லேற்று மிருங்கிரி முதுகி லேற்றுந்</line>
<line>தாழ் தல முழுதுங் கண்டுந் தமனிய னுடல்பி ளந்தும்</line>
<line>வாழுல களந்து மன்னாய் மன்னர்க்கு மன்னராயும்</line>
<line>பாழ் பட வுழறிப் பாரு நோக்கும்பின் பரியு மாயே.</line>
</verse>

<verse>
<line>பொய்கைவாய் முதலை வாயிற் போதகம் போத மாட்டா</line>
<line>தயனே நாதா வாதி மூலமே யென்ற ழைப்ப</line>
<line>வுய்யயாம் பணிமா லோல மோலமென் றோடிச் சென்று</line>
<line>வெய்யவாய் முதலை வீட்டிக் கரிக்கும்வீ டருளி னானே.</line>
</verse>

<verse>
<line>அலைகடல் கடைந்து வானோர்க் கமுதினை யளித்துந் தீய</line>
<line>கொலைபுரி யசுரர் தம்மைக் கொன்றுல கங்கள் காத்துங்</line>
<line>கலைமலி பொருளன் பர்க்குக் கருணையா லுரைத்து மிக்க</line>
<line>தலைமையி னிற்பன் மாய னென்றும்பின் சாற்றி னானே.</line>
</verse>

<verse>
<line>மாயையா யுயிராய் மாயா காரிய மாகி மன்னி</line>
<line>மாயையாற் பந்தஞ் செய்து வாங்கிடு மவனா லன்றி</line>
<line>மாயைபோ காதென் றெண்ணி மாயனை வணங்கப் பின்னை</line>
<line>மாயைபோம் போனான் மாயன் வைகுண்டம் வைப்ப னென்றான்.</line>
</verse>

<verse>
<line>ஆதிதா னாகி லாதிக் கந்தமுண் டாகு மந்தக்</line>
<line>கோதிலா னிறைவ னென்று கூறிடும் வேத ஞானச்</line>
<line>சோதியாய் நின்றா னாகிற் றோய்ந்திடான் மாயை ஞானத்</line>
<line>தீதிலா வுருவ மென்னிற் சேர்ந்திடா தாதுச் சென்றே.</line>
</verse>

<verse>
<line>தாதுவா னதுவே தென்னிற் சங்கரன் பலிக்குச் செல்லத்</line>
<line>தீதிலாக் கோதண் டத்தைத் திறந்தவன் விட்டபோது</line>
<line>போதுவ துதிர மன்றோ போந்துமூர்ச் சித்து வீழ் ந்தா</line>
<line>னாதனா ரெழுப்பப் பின்னே நடந்தனன் கிடந்த வன்றான்.</line>
</verse>

<verse>
<line>இச்சையா லுருவங் கொள்வ னரியெனி லிகழ் வேள் விக்க</line>
<line>ணெச்சனா யுண்ணப் புக்கங் கிருந்தவன் றீச னாலே</line>
<line>யச்சமார் தலைய றுப்புண் டான்றலை யாக்கிக் கொள்ளா</line>
<line>னச்சினார் போற்ற நாத னாரணன் றலைகொ டுத்தான்.</line>
</verse>

<verse>
<line>நூலினை யுரைத்து வேத நூலினை நுவலும் வண்ண</line>
<line>மாலருள் செய்தா னென்றாய் மறைநீதி யுலகி யற்கை</line>
<line>சாலவே தெரியா தாகிக் கிடந்தநாட் சகத்தி யார்க்கு</line>
<line>மாலின்கீ ழிருந்து வேத மருளினா னறைந்தா னூலே.</line>
</verse>

<verse>
<line>அயன்றனைப் பயந்தா னென்றா யரியயன் சிரஞ்சே திப்பப்</line>
<line>பயந்திடான் றலைமா றானும் படைத்திடான் சிரத்தைக்</line>
<line>							கிள்ளுஞ்</line>
<line>சயந்தரு மரனைத் தந்தா னயனென்கை தப்பே யன்றோ</line>
<line>தியங்கிடா துணரா யெல்லாஞ் சிவன்செயலென்று தேர்ந்தே.</line>
</verse>

<verse>
<line>சீவர்கள் சனனம் போலச் சிலர்வயிற் றுதித்த மாலைத்</line>
<line>தேவென்றே வையங் காக்கச் சுவேச்சையாற் செனித்தா</line>
<line>								னென்பாய்</line>
<line>பூவன்பின் படைக்க மாட்டா தரனடி போற்ற வேதக்</line>
<line>கோவந்து முகத்திற் றோன்றிச் சிருட்டியைக் கொடுத்தல்</line>
<line>								கூறும்.</line>
</verse>

<verse>
<line>நாரண னயனை யீன்று மயனுநா ரணனை யீன்றுங்</line>
<line>காரண மொருவ ருக்கங் கொருவர்தா மிருவ ருக்கும்</line>
<line>வாரண முரித்த வள்ளல் காரண னென்று மன்ற</line>
<line>வாரண முரைக்கும் பக்கத் தவர்களு மறைந்தா ரன்றே.</line>
</verse>

<verse>
<line>அழிப்பரி யேவ லென்றா யரிதனை யழிக்கு மன்றங்</line>
<line>கழிப்பது தவிர்க்க மாட்டா னங்கமு மழித்தே பூண்டா</line>
<line>னழிப்பரி யேவ லென்றங் கறைந்தது மழிந்த தன்றோ</line>
<line>அழித்திடு மரனே யாக்க நோக்கமு மாக்கு வானே.</line>
</verse>

<verse>
<line>வானங்கீழ்  மண்ணு மெல்லா மாயனே காப்பா னென்றாய்</line>
<line>தானஞ்சுஞ் சலந்த ரன்றன் னுடல்கீண்ட சக்க ரத்தை</line>
<line>யானஞ்சு மாடு வான்பாற் பெற்றுல களித்த வார்த்தை</line>
<line>தானெங்கு மாகு மெல்லாஞ் சங்கரன் காப்பே யாமே.</line>
</verse>

<verse>
<line>மாலினார் சேலி னாராய் வாரிக ளடக்கிக் கொண்டன்</line>
<line>றலியா வுலக மெல்லா மழிப்பவ னானே யென்னச்</line>
<line>சேலினார் தமைப்பி டித்துச் செலுவினை யிடந்து கண்ணைச்</line>
<line>சூலியார் மேல ணிந்தான் சூலிதா னாகு மன்றே.</line>
</verse>

<verse>
<line>ஆமையாய் மேருத் தாங்கி யடைகலாய்க் கிடந்த போது</line>
<line>நாமெனா வுலகா தார நாதனென் றகந்தை பண்ண</line>
<line>ஆமெனா ரன்று மென்னா ரமரரு மரனார் பார்த்துத்</line>
<line>தாமநா ளாமை யாரைத் தகர்த்தோடு தரித்தா ரன்றே.</line>
</verse>

<verse>
<line>எழுதல மிடந்து பன்றி யாயிருங் கொம்பி லேற்றுத்</line>
<line>தொழுதுல கிறைஞ்ச நின்ற சோதிநா னென்ற போதன்</line>
<line>றழுதலம் வந்து வீழ வருங்கோடு பறித்த ணிந்தான்</line>
<line>கழுதலம் வந்த காட்டி லாடிடுங் கடவு ளன்றே.</line>
</verse>

<verse>
<line>இங்கடா வுளனோ மாலென் றிரணியன் றூணை யெற்ற</line>
<line>உங்கடா மோத ரன்றா னுருநர சிங்க மாகி</line>
<line>யெங்கடா போவதென்னா வுடல்பிளந் திறையா னென்ன</line>
<line>அங்கடா சிம்பு ளாகி யெடுத்தடர்த் தான ரன்றான்.</line>
</verse>

<verse>
<line>தானமென் றிரந்து செல்லத் தனக்குமூ வடிகொ டுப்ப</line>
<line>வானமு மளந்து கொண்டு மாவலி தன்னைப் பின்னை</line>
<line>யீனமாஞ் சிறையி லிட்டா னிறையன் றொன் றீந்தோர் தங்கட்</line>
<line>கூனஞ்செய் திடுவோர் தாங்கள் உத்தம ரல்ல ராகும்.</line>
</verse>

<verse>
<line>மாயமான் றன்னைப் பொயம்மா னெனவறி யாத ரக்கன்</line>
<line>மாயையி லகப்பட் டுத்தன் மனைவியைக் கெடுத்தான் றன்னை</line>
<line>மாயைக்குக்கர்த்தாவென்பை மதி கெட்டங்கவனைக் கொன்று</line>
<line>நாயனார் தமைப்பூ சித்தான் கொலைப்பாவ நணுகி டாமே.</line>
</verse>

<verse>
<line>பரசுடன் பிறந்தான் றானும் பத்தனாய்ப் பரசி னாலே</line>
<line>யரசறுத் தரனை நோக்கி யருந்தவம் புரிந்தா னன்று</line>
<line>பரசிய பரசு ராமன் பலதேவ னுலக மெல்லா</line>
<line>முரைசெயு முமையாள் கோனை யுண்ணினைந்தி யோகி</line>
<line>								னின்றார்.</line>
</verse>

<verse>
<line>ஓதிய வாசு தேவர் தமையுப மனியு தேவர்</line>
<line>தீதிலா நோக்கஞ் செய்து சிவகரஞ் சிரத்திற் சேர்த்தி</line>
<line>யாதிபா லடிமை யாக்க வரியுடல் பிராண னத்த</line>
<line>மீதெலாங் கொண்ணீ யென்றங் கிறைஞ்சினா ரறிந்தி டாயே.</line>
</verse>

<verse>
<line>பின்வரும் பரிதா னாகி யரியென்றாய் பின்பு வந்தா</line>
<line>லென்வரு மீச னாலென் றறிகிலோ மிவுளி யார்க்கு</line>
<line>முன்வரு மவதா ரங்கண் முடிந்தமை யறிந்தா யன்றே</line>
<line>பொன்வருஞ் சடையி னான்றன் புகழெங்கும் புக்க தன்றே.</line>
</verse>

<verse>
<line>கைவரை மூல மேயோ வெனக்கரிக் குதவுங் காட்டின்</line>
<line>மொய்வரை யெடுத்தான் மூல மாயிட வேண்டு மோதா</line>
<line>னையனே முறையோ வென்றா லரசனோ வங்குச் செல்வான்</line>
<line>வையகங் காப்பான் செல்கை வழக்கன்றோ வூர்காப்</line>
<line>								பான்போல்.</line>
</verse>

<verse>
<line>அன்றியுமி யானை மாலுக் கடிமையாய் மூல மேயோ</line>
<line>வென்றிடு மதனான் மாற னிறைவனென் றியம்ப வேண்டா</line>
<line>வுன்றனக் கடிமை யானா ருன்னையெம் பெருமா னென்றா</line>
<line>லின்றுநீ வணங்கு முன்ற னெம்பெரு மானோ நீயே.</line>
</verse>

<verse>
<line>ஞாலமுண் டவனா லுண்டார் நல்லமு தமர ரென்றாய்</line>
<line>வேலைநஞ் செழமா லாதி விண்ணவர் வெந்து சென்ற</line>
<line>காலமின் றெமக்குக் காவாய் கடவுளே யென்ன நாத</line>
<line>னாலுமுண் டிலனேற் றேவ ரமுதமுண்டிடுவ தெங்கே.</line>
</verse>

<verse>
<line>அஞ்சியன் றரிதா னோட வசுரனைக் குமர னாலே</line>
<line>துஞ்சுவித் தொருபெண் ணாலே தாருக னுடறு ணிப்பித்</line>
<line>தஞ்சிடப் புரந்தீ யூட்டிச் சலந்தர னுடல்கீண் டோத</line>
<line>நஞ்சினை யுண்டு மன்றோ நாயக னுலகங் காத்தான்.</line>
</verse>

<verse>
<line>பார்த்தனா ரிரத மேறிப் படைதனைப் பார்த்துச் சார்பைக்</line>
<line>கூர்த்தவம் பாலே யெய்து கொன்றரசாளே னென்னத்</line>
<line>தேர்த்தனி லிருந்து மாயை செய்துமால் கொல்லச் செப்பும்</line>
<line>வார்த்தைநூ லாக்கிக் கொண்டாய் புரங்கொனூன் மதித்தி</line>
<line>									டாயே.</line>
</verse>

<verse>
<line>மாயைதா னுயிர்க ளாகா வுயிர்கடா மாயை யாகா</line>
<line>மாயவ னிவைதா னாகா னிவைதானு மாய னாகா</line>
<line>ஏயுமா மநாதி யாக விறைபசு பாசு மென்றே</line>
<line>தூயவன் கலப்பி னாலே யெல்லாமாய்த் தோன்று வான்காண்</line>
</verse>

<verse>
<line>பாசத்தைப் பசுக்கள் விட்டுப் பதியினை யடைய முத்தி</line>
<line>யாசற்ற வாக மங்க ளறைந்திட வறிவின் றிங்கே</line>
<line>மாசற்ற மான்மா சாகி மாயையு முறுவ னென்னிற்</line>
<line>கூசிப்பின் கொள்ளார் நல்லோ ருனக்காமிக் குழப்பு நூலே.</line>
</verse>

<verse>
<line>பிரமநா னென்ற போது பிரமனோ டரியுங் கூடிப்</line>
<line>பரமனா ரிகலி டாமற் பார்த்திடர் பண்ணி நின்ற</line>
<line>உரமனா ரழலு ரூபந் தன்னையு முணர மாட்டான்</line>
<line>கரமநா டிகிரி யேற்றான் கடவுளென் றறைவ தென்னே.</line>
</verse>

<verse>
<line>தேரரி யிறையன் றென்றே சிவமுனி ததீசி யோடே</line>
<line>போர்புரிந் திலக மாலைப் புக்கவன் பிடித்த டித்து</line>
<line>மார்பினி லுதைத்து மாறன் சக்கிரம் வயிற்றில் வைத்திட்</line>
<line>டேர்மலி படைய டைத்திட் டரிபட வெறிந்தா னன்றே.</line>
</verse>

<verse>
<line>சூலிகா ணிறைமா லல்லன் சூலியைத் தொழுந்துர் வாசன்</line>
<line>மாலினார் மார்மி திப்பத் திருமறு மார்ப னாகி</line>
<line>நூலினார் மார்ப னோன்றாள் பட்டிடஞ் சுத்த மென்று</line>
<line>பாலினார் கடலா னாங்கே பரிவொடுந் திருவை வைத்தான்.</line>
</verse>

<verse>
<line>தவகுண னாய்மால் சென்று தீவியைச் சக்கி ரத்தா</line>
<line>லவகுணஞ் செய்தன் றோடப் பிருகுவந் தவளைப் பார்த்துச்</line>
<line>சிவனல தறியே னாகி லிதுசெய்தோன் செறிக பத்துப்</line>
<line>பவமென மொழிய மாலும் பயப்பட்டுப் பதறி வீழ் ந்தான்</line>
</verse>

<verse>
<line>பயப்பட்டுப் பரனை நோக்கித் தவம்பண்ணப் பரனுந்</line>
<line>நயத்தஞ்ச லென்று வேண்டிற் றென்னென நார ணன்றான்</line>
<line>பெயர்த்தருள் பிருகு சாப மெனவன்பன் பிருகு வென்ன</line>
<line>உயக்கொணீ பவந்தோ றென்ன வோமென்றா னுலக</line>
<line>									நாதன்</line>
</verse>

<verse>
<line>இப்படிப் பிருகு சாபத் தீரைந்து பிறப்பில் வீழ் ந்து</line>
<line>மெய்ப்படு துயர முற்று வருபவன் விமல னல்ல</line>
<line>னெப்படி யானுஞ் சொன்னே னிறையரி யல்ல னென்றே</line>
<line>மைப்படி கண்ட னண்டன் மலரடி வணங்கி டாயே.</line>
</verse>



<verse>
<p-title>சிவஞான சித்தியார் பாடல்தொகை</p-title>
<p-title>பரபக்கம்</p-title>
<line>முகவுரையிற் றசமெழுமூன் றதன்முப்பா னொன்று</line>
<line>	மூதுலகன் முப்பானொன் றெண்ணைந்தாம் புத்தன்</line>
<line>திகழ் மூவர்க் கோரெட்டாம் நிகண்டனுக்கெட் டீரேழ் </line>
<line>	சீவகனுக் கீரைந்தோ டிருமூன்றாம் பாட்டன்</line>
<line>பகர்பதின்மூன் றீரைந்தே பாகரனீ ரிரண்டாம்</line>
<line>	பரிணாமன் நான்கிருநான் கேமாயா வாதன்</line>
<line>நிகழைம்மூன் றறுமூன்றும் பாற்கரியற் கேழாம்</line>
<line>	நிரீசுரற்குச் சதுராத்திரி யெழுமுப்பா னொன்றே.</line>
</verse>

</document>
