﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<author>இரா.நாகசாமி</author>
<book>ஓவியப்பாவை</book>

<title><line>அணிந்துரை</line></title>

<para>
<text>
[ சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்களின் அணிந்துரை. ]
</text>
</para>

<para>
<text>
"கல்லும் கதை சொல்லும்" என்பது பழமொழி. எல்லா கல்லும் கதை சொல்லிவிடுமா? சிற்பியின் கைப்பட்ட கல்லெல்லாம் கதை சொல்லும். இந்த உண்மையை டாக்டர். இரா. நாகசாமி அவர்கள் "ஓவியப் பாவை" என்னும் தனது நூலில் விளக்குகிறார்.
</text>
</para>

<para>
<text>
டாக்டர். இரா. நாகசாமி அவர்கள் தமிழக அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை இயக்குனராக இருந்து வருகிறார். இத்துறையை தமிழக அரசு துவக்கிய காலத்திலிருந்தே அதன் இயக்குநர் பொறுப்பில் திரு. நாகசாமி இருந்து வருகிறார். இந்த நீண்ட காலத்தில் சிற்பம், சித்திரம் ஆகிய கலைகளில் தமக்கு ஏற்பட்டுள்ள அனுபவத்தைக் கொண்டு இந்த அரிய கலை நூலைப் படைத்துள்ளார்.
</text>
</para>

<para>
<text>
இவருடன் பல சந்தர்ப்பங்களிலே நான் பேசிப் பழகியிருக்கிறேன். அப்போதெல்லாம் இவர் கலைமயமாகவே எனக்குக் காட்ச்சியளித்திருக்கிறார். கலைகளின் நுட்பங்களைப் பற்றி கூறப் புகுந்தால், இவர் தம்மையே மறந்துவிடுவதைப் பல சமயங்களில் நான் கணடிருக்கிறேன்
</text>
</para>

<para>
<text>
பல்லவர் ஆட்சிக் காலத்தில் சித்திர, சிற்பக் கலைகள் வளர்க்கப்பட்டதை வரலாற்றுக் கண்கொண்டு ஆராய்ந்து விளக்குகிறார்.
</text>
</para>

<para>
<text>
சிற்பங்களையும் சித்திரங்களையும் இலக்கியக் கண்கொண்டு ஆராய்கிறார். தெய்வ பக்தியுடையவராதலால், தெய்வச் சிலைகளில் ஒவ்வொன்றுக்கும் உரிய தத்துவங்களைச் சுவைபட வருணிக்கிறார்
</text>
</para>

<para>
<text>
மகாபலிபுரத்தில்லுள்ள சிற்பச் சிலைகளும், கற்கோயில்களும், மகேந்திர பல்லவன் காலத்திலும், அவன் மகன் மாமல்லன் காலத்திலும் வடிக்கப்பட்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் கொண்டுள்ள முடிவை மறுத்து, அவை இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தவை என்று உறுதியாகச் சொல்லுகிறார். அதற்கான சான்றுகளையும் கல்வெட்டுகளிலிருந்து தந்திருக்கிறார். ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றிச் சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
</text>
</para>

<para>
<text>
மற்றும் சேர-சோழ-பாண்டிய மன்னர்கள் படைத்த கலைகளைப் பற்றியும் ஆசிரியர் நாகசாமி சுவைபட இந்நூலில் விவரிக்கிறார்.
</text>
</para>

<para>
<text>
இந்நூல் சிற்பம் ஓவியம் மற்றும் பிற கைவினைப் பொறுள்களைப் பற்றியதாகவிருப்பினும், படிப்பதற்கு அலுப்பு தட்டவில்லை. சரித்திர, இலக்கியப் பின்னணியுடன் விளக்கபடுவதால் நூலை படிக்கத் தொடங்கிய பின் முடிக்கும்வரை நம்மை மறந்துவிட முடிகிறது.
</text>
</para>

<para>
<text>
இந்நுலில் சிற்பம், ஓவியம் பற்றிய புகைப்படங்கள் ஏராளமாகத் தரப்பட்டுள்ளன. நூல் பல்லவர் காலத்திலிருந்துதான் தொடங்குகிறதென்றாலும், அதற்கு மற்பட்ட சங்க காலத்திலும் சிற்பத்திலும், ஓவியத்திலும் தமிழ்நாடு சிறந்து விளங்கியது என்பதற்குப் பழைய இலக்கியங்களிலிருந்து ஆசிரியர் நிறைய சான்றுகள் எடுத்துக் காட்டி உள்ளார்.
</text>
</para>

<para>
<text>
இவரது முயற்சிக்கு தமிழக அரசு பலவகையிலும் ஆக்கம் தந்து வருவதை நான் அறிவேன். இன்னும் தேவைப்படும் உதவிகளையெல்லாம் அரசு வழங்கவேண்டும். தமிழினம் தெய்வச் சாதி என்பதனை இந்நூலின் மூலமாகவும் ஆசிரியர் நாகசாமி அகில உலகுக்கும் அறிவிக்கிறார்.
</text>
</para>

<para>
<text>
வெல்க, இவருடைய முயற்சிகள்!
</text>
</para>

<para>
<text>
ம. பொ. சிவஞானம்
</text>
<text>
13-10-1979
</text>
</para>

</article>