author chapter36.html about_the_author.html contents.html செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி
பொருளடக்கம் | அத்தியாயம்-36 | அகெடமி

இரா. நாகசாமி 1930ஆம் ஆண்டு பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்தார். புனே பல்கலைக்கழகத்தில் இந்தியக் கலை வரலாறு குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் பயிற்சி பெற்றபின் சென்னை அருங்காட்சியகத்தின் பாதுகாவலராகப் (1959-1963) பணியாற்றியுள்ளார். பிரிட்டிஷ் கவுன்சில் அழைப்பை ஏற்று தொல்லியல் ஆய்வுகளுக்காகப் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். தொல்லியல் துறை தமிழகத்தில் தொடங்கப்பட்டபோது அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். தொல்லியல் துறையைப் பொது மக்களிடம் கொண்டு சென்று சேர்த்ததிலும் பழங்காலக் கலைக் கட்டுமானங்கள் குறித்த விழிப்புணர்வை அவர்களிடையே ஏற்படுத்தியதிலும் இவர் பங்களிப்பு முதன்மையானது. திருமலை நாயக்கர் அரண்மனை, கங்கைகொண்ட சோழபுரம், எட்டயபுரம் பாரதி பிறந்த வீடு என்று தொடங்கி பல முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுக் கட்டுமானங்களைப் பாதுகாத்தும் மீட்டெடுத்தும் உள்ளார். தமிழகச் சிற்பங்கள், கோயில்கள், கட்டுமானங்கள் குறித்து இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களும் உலகளவில் புகழ்பெற்றவை. 2018ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார்.
பொருளடக்கம் | அத்தியாயம்-36 | அகெடமி