விராடபர்வ ஏத்தப்பாட்டு contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை, விராடபர்வ ஏத்தப்பாட்டு. சென்னை சூளை பெரியநாயகியம்மன் அச்சுக்கூடுத்தில் பதிப்பிக்கப்பெற்றது 1923 34, ஆண்டியப்பநாயக்கன் தெரு, சூளை, மதராஸ்
Contents | Home

காப்பு வெண்பா. வையகத்திலுள்ள வளமுடையசென்னெலுக்குப் பையஜலமிறைத்துப் பாங்குடனே — உய்யவிந்த ஏற்றப்பாட்டைப்பாடி யென்குறைகள் தீருவதற்கு போற்றினேன் ஐங்கரன்றாட் போது. ——— பிள்ளையாரேவாரி யெண்ணும் பிள்ளையாரே எனக்கு தெய்வம்நீரே உனக்கடிமைநானே ராமர்துணைவேணும் வாரும்பெருமாளே காருமிந்தவேளை வந்துமழைபெய்ய வாடும்பயிருய்ய உன்தயவு செய்வாய் ஓடிவந்துமாலே யோர்மடுவில்யானை ஏங்கியழும்போது ஓடிவந்துகார்த்தாய் யோதுதிருமாலே பாண்டவர்கதையை பாங்குடனேசொல்வேன் (ஒருவதியாலொண்ணு) ——— யுன்னுந்துரியோனும் மன்னவருங்கூடி பன்னுபாண்டவர்க்கு சொன்னதோர்வருடம் இன்னிலங்தனிலே பன்னுமக்யா தவாசம் பாண்டவர்தொலைத்து வேண்டிவருவாரே காண்டீபன்முதலோர் (இருபதியாலொண்ணு) ——— இருந்ததோர்வனத்தில் பொருந்திடுமுனியை அரிந்துதுரியோனும் வருந்தியடிபணிந்து பெருந்தவமுனியே பேசும்பாண்டவர்க்கு மோசமாகயாகம் முடிக்கவேணுமென்றார் (முப்பதியாலொண்ணு) ——— முதல்வன் துரியோனும் முனிக்காளமுனியும் யினிமையுடன்வேதம் கனிவுடன்விரித்து காட்டினில்புகுந்து காஷ்டங்கள்பொறுக்கி கனதணலைமூட்டி முனிவாமந்தரம்நாட்டி வனந்தனிலேயோமம் வளர்த்தும்கையாலே வந்ததொருபூதம் தந்த புவிமேலே (நாற்பதியாலொண்ணு) ——— நாரணரறிந்து காரணமுனிசெய் காரியமாயாகம் தாரணியின்மீது சண்டனைநினைந்து, தான்வரவேசெய்தார் தருமருமறிந்து வருபிரமசாரி யொருவேடமெடுத்து வருமையுடவைந்தார (ஐம்பதியாலொண்ணு) ——— ஐவருமேகண்டு அழுதுவந்தபிள்ளை அழைத்துமேயெடுத்து அந்தணரேவாரும் சிந்தையில்விசனம் செப்பிடவேவேணும் யொப்பில்மறையோனே இப்புவிதனிலே எனக்கொருவிரதம் (அறுபதியாலொண்ணு) ——— அந்தமறையோனும் ஐவரைவணங்கி செய்யுபநயனம் செய்யவேணுமென்று ஐவரையடுத்தேன் அதற்கொருகலைமான் அரியகோலைகொண்டு பெருகிடும்வனத்தில் வருகும்வழி தன்னில் (எழுபதியா லொண்ணு) ——— என்கையிலிருந்த வின்பமாகுந்தோலை இவ்வனக்கலைமான் கவ்வியேபரித்து கடிகையில்மறந்து செடியினிலொளித்து சேர்ந்துபோன தென்றான் சிறுவன் பிரம்மசாரி சேதியையறிந்து (எண்பதியாலொண்ணு) ——— என்றுமொழிகேட்டு எடுத்தபாணம் வில்லும் எழுந்துஐவர்தானும் ஏகுமான்வைழியே போகும் வழிதேடி எத்திசையும் பார்த்து இருந்தமானை நோக்கி இளைத்துமேதிரிந்தார் இந்தவகைபாலே (தொண்ணூருடலொண்ணு) ——— தொந்தமாகுங்காட்டில் தொடருமூழையாலே தொன்றும் வெய்யலாமே தூக்கமுடியக்கம் தாகவிடாயாலே தருமருந்தளர்ந்து தாகவிடாயாலே தண்ணீர்கொண்டுவர தம்பியரையேவ தக்கதோர்வனத்தில் புக்கிடுந்தடாகம் பொருந்துபுை பொருந்துபுனலள்ளி அருந்ஞ்சகாதேவன் அப்பவே மயங்கி மெப்புடன்விழுந்தான் அத்திநிகரான ஆறகும்வீமசேனன் அன்புடையநாலவர் அள்ளுபுனலள்ளி ௱ — பிள்ளையாரேவாரி ——— பெரியவனர்தன்னில் பேதமாயிருக்க ஆதியாநதருமர் அம்மொழியறிந்து அடவியில்புகுந்து அரியபொய்கை நீரே அன்புடன்யெடுக்க அந்தகன்மறுக்க அருவுருவங்காட்டி குருமொழியுணர்ந்தார் கொண்டுதம்பிமாரை அண்டருமகிழ்ந்தார் அனைவருமெழுந்தார் இக்கதையிருக்க முக்கியவிராடன் அக்கதையைச்சொல்வேன் அறிந்திருங்கள்தோழா (ஒருவதியாலொண்ணு) ——— ஓங்குபுகழாளர் பாங்குகுருநாடர் பாண்டவர்களைவர் ஆண்டபுவியெல்லாம் தாண்டியேசூதாடி தரணியெல்லாந்தோத்தர் தோர்த்துவிட்டுபோனார் துரியோதனராஜன் சொன்னபிரகாரம் பனிரண்வருஷம் பாரவனவாசம் திரமுடனே செய்தார் (இருபதியாலொண்ணு) ——— இரைவரைவர்தாமும் முறைமுறையாவேஷம் மறையவர்மடையன் மானமில்லாபேடி வாசித்துரையாளன் காலிதனைமேய்ப்போன் காரிழைபணிப்பெண் நேரிழையாளர்க விராடபுரஞ்சேர்ந்தார (முப்பதியாலொண்ணு) ——— முன்னவனைக்கண்டு மன்னவன்பணிந்தான் மறையவரேவாரும் வருடமிங்கேவாழும் வரிசையுடவென்றான் நகுலசகாதேவன் நலமுள்ள பாஞ்சாலி அனைவருமிருக்க (நாற்பதியாலொண்ணு) ——— நாள்பலகடந்து தோள்பலத்தவீமன் மடையனையழைத்து மல்லுகட்டச்சொன்னார் இப்படியிருக்க அப்புறமிருந்து ஆனதொருமல்லன் வென்றபலசாலி எனக்செதிரியுண்டோ யென்றுபலம்பேசி கெங்குபட்டாப்போ மடையனையழைத்து மல்லுசெய்யச்சொன்னார் மந்தமல்லனோட சுந்திரன் முனிந்தான் (ஐம்பதியாலொண்ணு) ——— அவனுமிவன்மேலே ஆர்த்துவந்தெதிர்த்தான் தோளோடேதோள்முட்டி துடைகளையறைந்து முடியில்முடிமுட்டி மூர்க்கமாயிடித்து முகத்தினிலறைந்து நகைத் துவிழமோதி துவைத்துவிட்டாநப்போ (அறுபதியாலொண்ண்ணு) ——— அரசனுமகிழ்ந்து மடையனையழைத்து மார்புறத்தழுவி ஆரமும்பதக்கம் ஆடை முதலெல்லாம் வேணதுங்கொடுத்தார் வீமனுமகிழ்ந்தான் காமுறையுநாளில் கீசகனும்வந்தான் (எழுபதியாலொண்ணு) ——— ஏந்திழையைக்கண்டு மோகமிகக்கொண்டான் தோகையும்பயந்து சதர்க்கனைக்கு சொன்னாள் அதற்குப்பின்னவனும் அனங்கன்சரத்தாலே மனங்கதைந்து நொந்து வண்ணமகள் தன்னை கண்ணவே தொடர்ந்தான் (எண்பதியாலொண்ணு) ——— ஏங்கிமனம்நொந்து மாங்குயிலைப்போலே மன்னன்சபைமுன்னே மண்மிசைவிழுந்தாள் அந்தகொடும்பாவி அந்தமடமானை கைப்பிடிக்கவென்று வெய்யநினைவானான் சூரியபகவான் தூதனையனுப்பி பாதகனைத்தள்ளி பட்சம்வைத்துக்கார்த்தா (தொண்ணூருடலொண்ணு) ——— தோறாதமடையன் நேராகமடக்கி ராத்திரியில்ஜாடி போற்றிரம்புரிந்து பூமியிற்புரட்டி குற்றிவிழமோதி தற்றிதலைசாய மோதினான்மடையன் கீசகன்பதைத்து கிலேசமுற்றுமாண்டான் பாதகனமடிய பாஞ்சாலியுங்கண்டு தீர்ந்தேபையமென்றாள் (௨௱ — பிள்ளையாரேவாரி) ——— பின்னுந்தம்பிமார்கள் சொன்னபடி செய்தார் கீசகன்மடிய கேட்டகுருநாடர் வாட்டமில்லாமாடு ஒட்டிவரவென்று மச்சைவளநாடவட அச்சமில்லாசாட்டில் ஆனிறையையோட்டி (ஒருவதியாலொண்ணு) ——— ஓங்குபுகழகர்ணன் துரியனுக்குச்சொன்னான் விராடனுடமாட்டை ஒட்டிவரச்சொன்னான் அந்தமாடுவந்தால் ஐவரங்குயில்லை இந்தபடிசெய்யும் துரியோதனாவென்றான் அப்படியேசெய்வோம் (இருபதியாலொண்ணு) ——— ஏகவெள்ளம்போலே வானிரையவிட்டார் மாடுபிடிசண்டை போடவேபொருந்தி பூபதிவிராடன் புத்திரருஞ்சூழ ஆனைபரிதேர்கள் சேனையோடுகூட தெற்குத்திசைவந்து திரிகர்த்தனைச்சாடி முரியஅடித்தாரே (முப்பதியாலொண்ணு) ——— விராடனைப்பிடித்து விந்தை தேரில்கட்டி தகைந்துகொண்டான்வீமன் தர்மருரையாலே தாக்கியமராடி வீக்கியவிராடன் நோக்குமகிழாக வந்தவனைக்கட்டி மன்னவனைமீட்டான் (நாற்பதியாலொண்ணு) ——— நால்வர்களும்வந்து நன்மைசெய்தீரென்று மன்னவன்மகிழ்ந்தான் பின்னுமந்தநாட்டை பெருமையுடன்மீட்டார் அருமையிதுவென்று அங்கவரிருக்க வடக்கு திசைவந்தார் மன்னன் முதலோர்கள் (ஐம்பதியாலொண்ணு) ——— அரவக்கொடிராஜன் இரவிசிறுபாலன் கங்கைதருசீலன் கனத்தமறையாளன மிகுந்தபடையோடே பெருந்தபசுக்கூட்டம் துரத்தியேமடக்கி சூழ்ந்துகொண்டுநின்றார் (அறுபதியாலொண்ணு) ——— அங்கிருத்திடையர் அரசன்மனைக்கோடி ஆரையுங்காணாமல் உத்திரனைக்கண்டு மெத்தவேயழுதார் அஸ்தினாபுரத்தில் அனைவர்களும்வந்து ஆவினத்தையெல்லாம் சாய்த்துகொண்டு போனா (எழுபதியா லொண்ணு) ——— இடையர்சொன்னவார்த்தை அடவெல்லாமறிந்து படையெடுப்பேனென்று பாலகனெழுந்தான் பருத்தரதமேறி பாகனந்தபேடி ஆகவரும்போதில் அண்டரண்டமெல்லாம் கொண்டபடைகண்டான் (எண்பதியாலொண்ணு) ——— எங்கெங்க்குங்குதிரைகள் சாரத்தியஞ்செய்தால் கண்கொளாரதங்கள் எண்ணிறந்தயானை மண்ணிறந்தசேனை பேரிகைமுழக்கம் பெருத்ததிருமேளம் நெருங்கியகொடிகள் பொருந்தியகொடைகள் நேர்ந்தபடைகண்டான் (தொண்ணூருட லொண்ணு) ——— சொல்லிமுடியாது வல்லபசேனை மன்னவரனேகர் எந்தரதமோ அம்மா இந்தமுனைகாண என்றுமனமவாடி துன்றுயனைசேர்வேன் யென்றெடுத்தாறோட்டம் இறைவன்மகனப்போ (௩௱ — பிள்ளையாரேவாரி) ——— பேடியதுகண்டு ஓடியேதுடர்ந்து ஓகெடுவாபிள்ளாய் வாகடுமையாக தேரினிலிருந்து சாரத்தியஞ்செய்தால் தனுவதைவளைத்து பனியெனப்படுப்பேன் இனிரதமேரென்றான் (ஒருவதியாலொண்ணு) ——— ஓடிவிட்டபாலன் வாடிரதம்விட்டான் வன்னியருகோடி சொன்னசிலையேந்தி மன்னவர்மயங்க அம்புமழைதூவி அம்பருமயங்க சம்மதிகளிக்க சாய்த்துக்கொண்டார் மாட்டை (இருபதியாலொண்ணு) ——— எதிர்த்துவந்தகர்ணன் அதிர்த்தரதமோட்டி அம்புகள்பொழிந்தான் அர்ச்சுனனுமப்போ காண்டீபம்வளைத்து கனமழைசொரிந்தான் யிணையிலாதகர்ணன் இளைத்தெடுத்தானோட்டம் (முப்பதியாலொண்ணு) ——— முன்னுரைந்த நீயே சொன்னதெல்லாம்விட்டு தொடைகளெல்லாம்நேர படைகளெல்லாம்போவ பார்த்தவர்சிறிக்க மாற்றவர்மதிக்க யோடுவதுநன்றே உங்கள்மனங்காண தங்கள்மனம்நோவ (நாற்பதியாலொண்ணு) ——— நலலமறையாளன செல்வனிந்தவாறு செப்பியேதிரும்ப ஒப்பிலாதுரோணர் உயித்தியங்குறித்து செயித்திருக்கும்பார்த்த தேர்முன்தேர்விட்டான் தேசிகன்வரவை தேர்விசையனகண்டான் (ஐம்பதியாலொண்ணு) ——— ஆசிரியனைக்கண்டு அர்ச்சுனன்வணங்கி யிச்சைபலபேசி யேது சமரென்றான் வேதமுனியப்போ வேந்தநெறியாகும் போந்திடுதியென்றான் பொரிக்கணைதொடுத்தா[ர்] மருக்கணையும்விட்டான் (அறுபதியாலொண்ணு) ——— அண்டத்தவர்க்காக சண்டைமெத்தசெய்தார் சதுரங்கபலமும் சிதறியோடிப்போக பெரியவர்துரோணர் பின்னுமமர்செய்தார் பெரியவில்லும்போக்கி துரோணருமிளைத்தார் துரியோதனன்கண்டான் (எழுபதியாலொண்ணு) ——— இனியவரெடுப்பார் தளராதசேனையெல்லாம் தக்கஅசுவத்தாமர் மிக்கபோர்விளைத்தார் நக்கனருளாளன் அர்ச்சுனனவில்னாரி அத்துவிழவெய்தான் வெற்றிவந்துதென்றான் வேந்தனுமகிழ்ந்தான் (எண்பதியாலொண்ணு) ——— ஏறுந்தேர்விசையன் இதற்குத்தோக்கமாட்டான் என்றுமனமெண்ணி சந்திரமவிலி தந்ததொருபாணம் அந்தம்பைதொடுத்து அந்தணனைசாடி தோர்க்கடிப்போமென்று துய்யனினைவாகி (தொண்ணூருடலொண்ணு) ——— தோறாதவிசையன் னாரியொன்றுபூட்டி நாலுபணம்விட்டார் தேறுபொடிஆச்சு தேவர்கள்மகிழ்ந்தார் யாவருமகிழ்ந்தார் அர்ச்சுனனையப்பேர் சிறுவனும்எதிர்த்தான் கீர்த்தியேமிகுத்தான் (௪௱ — பிள்ளையாரேவாரி) ——— பேருள்ளபெரியோன் தீறுகளைதீர்த்தான் வீஷ்மருமெதிர்த்தார் தாஷ்டீசமுடனே தனஞ்செயனு மப்போது அனந்தஅம்புவிட்டான் அத்தனையும்வீழ் உத்தமனுரைத்தான் (ஒருவதியாலொண்ணு) ——— ஓச்சலிலாபாணம் பாச்சினான்கிழவன் பார்த்தனுமறுத்தான் தீர்த்தனன் மேலம்பு தேர்விசையன்விட்டான் சாரதிமடிந்து சலித்தவனிருந்தான் கெலித்தபடையெல்லாம் எலிக்கிநிகராச்சே (இருபதியாலொண்ணு) ——— எடுப்பர்றோட்டமென்பர் நடுக்கமெத்தவானர் ராசகூட்டமெல்லாம் யோசனையில்வீழ்ந்தார் ஓங்குவில்விசையன் மோகனகணையால் மூர்ச்சையாகசெய்தார் ஆச்சரியமாக அனைவரும் விழுந்தார் (முப்பதியாலொண்ணு) ——— மூர்ச்சையென்றராசர் முடிக்கினீயேசேலை எடுத்துதிரள்வந்தான் படுத்திருந்தோரெல்லாம் பாங்குடனெழுந்தார் தாங்குகுடிசேலை வாங்கினதரித்தார் எடுத்தார்களோட்டம் (நாற்பதியாலொண்ணு) ——— நாகக்கொடிமன்னன் வேகத்துடனேட விசையன்கணைவிட்டு பசையத்தவன்தானை பலபலவாயேசி இலகியகிரீடம் நிலமிசைவீழ்ந்தான் நீலகிரிபோலஓலமிட்டுதன்னை (ஐம்பதியாலொண்ணு) ——— அஞ்சினவர்மேலே அர்ச்சுனன்தயவாய் உத்திரனைப்பார்த்து ஊர்க்கு நீதிருப்பு தேரதனையென்றான் செப்பவே திருப்பி ஒப்பொருவரில்லார் மெய்ப்பொருளைபோலே விசையனிருந்தானே (அறுபதியாலொண்ணு) ——— ஆனவன்னிசேர்ந்து ஏங்கிமனம்நொந்தார் அங்கொருபூங்காவில் அலிவடுவுமாகி இங்கிதமாநின்றார் இந்தசிறுபாலன் வந்தவர்களையெல்லாம் தந்தைவந்துகேட்டு சிந்தைநொந்துவீழ்ந்தான் தேத்திக்கெங்குபட்டர் (எழுபதியாலொண்ணு) ——— இங்கிருந்தபேடி அங்குவருவோரை ம[ய]ங்கிவிழச்செய்து மாடுவருமென்று நாடியவிராடன் நலத்துடனிருந்தான் பலத்தவரையெல்லாம் துறத்திசுபவார்த்தை ஒருத்தன்வந்து சொன்னான் (எண்பதியாலொண்ணு) ——— ஏக்கமதுநீங்கி ஆக்கமதுவாகி அங்கவரும்வந்தார் பொங்கினான்விராடன் சங்கையெல்லாந்தீர உத்திரனுரைத்தான் மெத்ததருமராசன் வெளிப்படமகிழ்ந்தான் களித்தனன்விராடன் (தொண்ணூருடலொண்ணு) ——— துவாரகையிலுள்ள துரௌபதைதகப்பன் சோழமகாராசன் சுந்தரவழகி மைந்தனபிமன்னன் வந்தவர்மகிழ்ந்தார் உத்தரைதனக்கும் உத்ததம்பிமன்னவர்க்கும் நல்லமணஞ்செய்தார் நாராயணராமா ——— விராடபர்வ ஏத்தப்பாட்டு முற்றிற்று.
Contents | Home