தென்னமரம் contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் தென்னமரக் கும்மி சென்னை சூளை பெரியநாயகியம்மன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

கலி விருத்தம். சொல்லுமாயனின் தோற்றும்பதாம்புயத் தல்லுமேபகல் தலையால் பலன்றரும் புல்லுந்தேங்கின் புகழுஞ்சரிதையை வெல்லுமாந்தற்கு விரும்பியுரைக்குவாம். கதையின் வாலாறு. சோபனமடி சோபனமே சிவசோபனந்தமிழ்ப்பாட அச்சோடிபெண்காசோபனமே அம்மாடிபெண்காசோபனமே தென்னமரமே தென்னமரமே யேன்வளர்ந்தாய்தென்னமரமே நான்வளர்ந்தகாரியத்தை நாட்டாரறியாரோ ஓங்கிவளர்ந்தகதை ஊராரறியாரோ அறியாட்டாச்சொல்லுகிறேன் அச்சோடி பெண்காசோபனமே தெரியாட்டாச்சொல்லுகிறேன் தேசமெங்குஞ்சோபனமே தென்னமரமானவகை தெரியப்படுத்துகிறேன் மரமாகநான்வளர்ந்து மண்டலத்திலுள்ளவர்க்கு ஏத்தமெறைப்பதற்கு யிசைந்தகயராவேன் வாத்தியாராக்கும் பிள்ளைகட்கும் வாய்த்தநிழலாவேன் அடிசல்சமைப்பதற்கு அடுப்புக்குவுதவிடுவேன் தென்னமட்டைவோலையாகி தேசத்திலுள்ளவர்க்கு புட்பமெடுப்பதற்கு பூக்குடலை நானாவேன் கோவில் தலங்களுக்கு குறித்தபந்தலாகிடுவேன் கலியாணவாசலுக்கு கனத்தபந்தலாயிருப்பேன் சீமந்தவாசலுக்கு சிறந்தபந்தலாகிடுவேன் சொற்பெரியாற்சபைக்கு சுழல்பந்தலாகிடுவேன் சகலஜெனகாரியத்துக்கு ஜாக்கிரதையாயிருப்பேன் மாளிகைக்குமறவாவேன் மாந்தருக்குநிழலாவேன் சன்னதிகள் சுத்திசெய்ய சார்விளக்கமாறாவேன் மழைநாளில்சம்மங்குடை மன்னர் தலைமேலிருப்பேன் குருத்தோலையெனையெடுத்து கூந்தலென்றுகட்டிடுவார் செத்து மடிவார்க்கு சிவலோகப்பாயாவேன் மாண்டுமடிவார்க்கு வைகுந்தப்பாயாவேன் கூடம்மறப்புகட்ட குறுத்துவிரிவோலையாவேன் பச்சோலை தன்னுடனே பன்னாடை நானாகி கள்ளுவடிகட்டி கசடெல்லாம் போக்கிடுவேன் மதுப்பானை வேடுகட்டி மன்னர் தலைமேலிருப்பேன் அடுப் பெரியாபெண்களுக்கு அடுப்பூதியத்தவைப்பேன் பாளையென்றே நான் பிறந்து பலதினுசுக்குதவியாக தென்னங்குருத்துடனே தெருபந்தலில் கட்டுவார் வாசலது பந்தலிலே வரிசையுடன்கட்டிவைப்பார் பதிவிளக்குஜோடிப்பார் பாற்றெளிக்கயெனையழைப்பார் நோன்புநோர்க்கும் கலசத்தண்டை நூ தனமாபோயிருப்பேன் பாளைவளந்தவுடன் பதப்படுத்தியேனைத் திருத்தி குடுவையிலே கள்ளெறக்கி கொண்டிவொர்வேணமட்டும் களைத்து வருவார்க்கு கள்ளுதண்ணிநானாவேன் தேடிவருவார்க்கு தித்தீப்புகள்ளாவேன் பாடிவருவார்க்கு பாட்டாவுந்தானாவேன் என்னைக்குடித்தவர்கள் யெனைப்புகழ்ந்து கொண்டாடி பித்தம் பிடித்தவர் போல் பேசாதும்பேசிடுவார் மானிடர்க்குள்ளான்புகுந்து மாராட்டஞ்செய் துவைப்பேன் சண்டைகளுமென்னாலே சவுரியமுமென்னாலே ஆண்மைகளுமென்னாலே அடிதடிகளென்னாலே சுத்துகெட்டுமென்னாலே குடிகெடுவது மென்னாலே கீழ்விழுந்து மேல் புரண்டு கெலிப்பதுமென்னாலே கச்சேரிகோர்ட்டுகளை கண்டறிவதுமென்னாலே பெண்டு பிள்ளை தாலிவிற்று பேர்கெடுவதுமென்னாலே அழியாத செல்வங்களை அழிப்பதுவுமென்னாலே குறையாத செல்வங்களைக் குறைப்பதவுமென்னாலே காணிவிற்பதுவுமென்னாலே கடன்படுவது மென்னாலே பூமிவிற்பதுமென்னாலே புண்படுவதுமென்னாலே சபையிலுள்ள பேர்களெல்லாக் தலைகுனிவது மென்னாலே கொற்றவருமாதர்களும் குணல்கெடுவது மென்னாலே மன்னர்களுமாதர்களு மனமழிவதுமென்னாலே சீச்சீயென்பது மென்னாலே சீரழிவதுமன்னாலே போபோவென்பதுமென்னாலே பொல்லாங்காவதுமென்னாலே ஆப்பஞ்சுடவுதவிடுவேன் அழகுசொட்டிக்காகிடுவேன் குவலயத்தில் கொழந்தைகளை கூசாமல்வளர்த்திடுவேன் சத்திமதுரை பூசையிலே சந்தோஷமா நானிருப்பேன் மற்றுமொருபாளையது மாராமலேவெடித்து தென்னங்குரும்பியாகி தேசத்திலுள்ளவர்க்கு சீதக்கழிச்சலுக்கு சீக்குபெரும்பாடுக்கும் உற்றவுதகியாகி உடனே நான்போக்கடிப்பேன் பாரஉருவாகி பாலேடுபோல்படிந்து ஆலயங்கள் பூசையிலே அபிஷேகமாயிடுவேன் நீரடைப்புகண்டதற்கு நேர்மையுடன் தீர்த்திடுவேன் தேங்காயாகான்வளர்ந்து தேசத்திலுள்ளவர்க்கு விக்கினவிநாயகற்கு விருப்பமுடனெனையுடைப்பார் தேவர்கட்குபூசையென்றால் தேடியெனையழைத்திடுவார் எந்தெந்தபிரார்த்தினைக்கு யெநதனையேகூப்பிடுவார் அம்புவியில் கழிப்புசுற்ற அவ்விடத்தில்போயிருப்பேன் கூட்டுக்கரிக்காயிடுவேன் கொழம்புகளுக்குகந்திடுவேன் தொகைய லுக்குநானாவேன் தொவட்டலுக்குநானாவேன் பச்சடிக்குநானாவேன் பால் பிழியநானாவேன் விருந்துக்குகந்திடுவேன் வேசியிடுமருக்தெடுப்பேன் தேங்காய்ப்பாலாகிடுவேன் திருவிளக்குயெண்ணையாவேன் வால்செட்டுகுலோப்புகளும் வகைலஸ்டர்குள்ளிருப்பேன் கொட்டாங்கச்சிநானாகி குவலயத்திலுள்ளவர்க்கு சாதக்கறிவகைகள் சமைப்பதுவுமென்னாலே திருஷணத்து குடுக்கையாவேன் தேங்காநார்நானாவேன் அறுசுவைகள் சமைப்பதற்கு அகப்பையதுநானாவேன் தென்னமாக்கும்மிதனை கீர்திருத் பாடினோரும் அச்சிலடித்தவரும் அழகுசென்னையாள்பவரும் ஆதிசிவன் தன்னருளால் அவனிதனில்வாழ்ந்திடுவார் பட்டாளம்கண்ணுசாமி பரமனருள்பெற்றுவாழி திருச்சினாப்பள்ளிஇரங்கசாமி செல்வன்மிகவாழி தென்னமரக்கும்மி முற்றிற்று.
Contents | Home