ராமாயணம் கொம்மைப்பாட்டு contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் இராமாயணக் கொம்மைப்பாட்டு.
Contents | Home

கொ — கற்பனையாய்ராமாயணக்கொப்பிப்பாட்டைப்பாடுதற்கு கொப்பியளோ கொ — சொற்பெரிய ஆஞ்சநேயர் அற்புதபாதங்கள் போற்றி — கொ கொ — பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பொற்புள்ளபேயாழ்வாருடன் — கொ கொ — சீதைலட்சுமணர்பரதற் செய்யசத்துருக்கனுடன் — கொ கொ — ஆதியனுமச்சமேதரான ராமர்பாதந் துணை — கொ கொ — சீருள்ள அயோத்தியாளும் தெசரதனார் செய்தவத்தால் — கொ கொ — பாரரியபாரதந்தனில் பரமபதநாதன்வந்து — கொ கொ — முன்பிறந்தராமனாக மூவர்கள் பிறந்தார்பின்பு — கொ கொ — வன்புள்ள தாடகைசெய்யும் வருத்தத்தினால் விஸ்வாமித்திரர் — கொ கொ — ராமனைக்கூட்டிக்கொண்டுபோய்ராட்சதியை கொல்லச்சொன்ன — கொ கொ — தீமையில்லாராமன் கையால் செத்தாளே தாடகைபாவி — கொ கொ — முந்தியாக்கிவிழவே முனிவர்யாகம் முடித்தார் — கொ கொ — அந்தவேளைமாரீசனும் வந்துசுவாகும் போர் செய்தார் — கொ கொ — முன்னோன் ராமனம்பால்மாண்டான் பின்னிட்டுபோனான்மா — கொ கொ — மன்னுமி துலாபுரிக்கு மாமுனிபின் ராமன்சென்று — கொ கொ — மிலைவழியிற்கல்லை மிதித்தகலிசாபந்தீர்த்தார் — கொ கொ — சதாநந்தருடன்ராமர்சமத்தைவிசுவாமித்திரர்சொன்னார் — கொ கொ — சனகனதிசயித்துத்தனுசைவளைத்திடச்சொன்னார் — கொ கொ — தொனிபெறுமந்தவில்லைத் துணித்தெறிந்தான்ராமமூர்த்தி — கொ கொ — துந்துபிமுழுகத் தேவர் சூழ்ந்து மலர்மாரிதூவ — கொ கொ — சுந்தரிசீதையைராமர் சுகமுடன்மணம்புரிந்தே — கொ கொ — தழுவிச்சானகியுடன் தாமயோத்திவரும்போது — கொ கொ — வழியிற்பரசுராமன் வந்து ஸ்ரீராமரைத் தடுத்து — கொ கொ — சொத்தைவில்லைக்கொடுக்க இத்தை நீவளைத்திடென்று — கொ கொ — வைத்ததன் வில்லைக்கொடுக்க வளைத்துராமர் தட்சணமே — கொ கொ — அந்தவில்லம்பு தொடுத் தங்கவன் தவமழித்தே — கொ கொ — வந்து நகரத்திற்சேர்த்து வாழ்ந்திருக்குங்காலத்தினில் — கொ கொ — தந்தை தசரதராசன் தனக்கு முடிசூட்டுதற்கு — கொ கொ — சிந்தனை செய்ததைக்கூனி செப்பினாள்கை கேசியுடன் — கொ கொ — வசையென்றெண்ணாமற்கைகை மன்னனுடன்யிணங்கினாள் — கொ கொ — தசரதனே தென்னமுன் தந்தவர்மிரண்டினால் — கொ கொ — என்மகன்பரதனுக்கு ராச்சியங்கொடுக்க வேணும் — கொ கொ — உன்மகன்ராமனைக்காட்டில் ஓட்டிவிடவேணுமென்றாள் — கொ கொ — ஐயன்வாய்திறந்து சொல்ல அஞ்சிமரம்போலிருந்தான் — கொ கொ — கைகைராமரையழைத்துக் காட்டுக்குநீபோவென்றாள் — கொ கொ — அன்னை மொழிதன்னைராமர் அன்புடன் சிரசிற்கொண்டார் — கொ கொ — முன்னைவனம்போகத்தான் துன்னுமரவுரிகைகை — கொ கொ — தந்தைமரவுரிருற்றித் தம்பிசீதையுடன்ராமர் — கொ கொ — தந்தையழத்தாயுமழத் தரணியோரெல்லாமழ — கொ கொ — மந்திரிசுமந்திரன்வந்து வழிவிடமனத்திற்சென்று — கொ கொ — விந்தைசேர்கங்கைகரையில் வேடனைக்கண்டுநேசித்தார் — கொ கொ — சித்திரகூடத்தில்வந்து நத்தியபரதனுக்கு — கொ கொ — வித்தகன்பாதுகை தந்து மேதினியாளென்றனுப்பி — கொ கொ — செல்லுமளவில்ராமன் சீதையைக் கொண்டேகக்கண்டே — கொ கொ — வல்லவன் தம்பியுந்தானு மெல்லையிலவனைக்கொன்று — கொ கொ — தீதிலாத்தண்டகாரண்யம் தேடிப்பஞ்சவடி சேர்ந்தார் — கொ கொ — சீதாராமன்வாசஞ்செய்யும் கோதாவரிதீரத்தினில் — கொ கொ — தோகை சூர்ப்பநகைராமர் சுந்தரங்கொண்டு மோகித்தாள் — கொ கொ — மோகங்கொண்டசூர்ப்பநகை மூக்கைலட்சுமணர்கொய்தார் — கொ கொ — தூண்டும் இது கேட்டுக்கரன் தூஷணன் முதலோர்வந்து — கொ கொ — மாண்டபின்புமாரீசன்பொன் மான்மடிவுகொண்டுவந்தான் — கொ கொ — மான்பின்ராமன் செல்ல மற்றவன் தம்பிபோனான் — கொ கொ — தீயவனிலங்கைமன்னன் மாயவேடங்கொண்டுவந்து — கொ கொ — சீதையையெடுத்துத்தேரின் மீதுவைத்துக்கொண்டு போனான் — கொ கொ — மாதவள் முறையிடவே வந்தெதிர்த்தானேசடாயு — கொ கொ — சத்திவேல்விடுத்தரக்கன் சடாயுவைக்கொன்றேஅமமையை — கொ கொ — அத்தருணத்திற்கொண்டுபோயசோகவனத்தில்வைத்தான் — கொ கொ — ஆதரிக்கத் திரிசடையாள் சீதையும் சிறையிருந்தாள் — கொ கொ — சீதையைக்காணமல்ராமர் திகைத்துவரும்வழி தன்னில் — கொ கொ — கண்டகன்கவந் தனைவாள் கொண்கைவிழித்துணிதந்தா — கொ கொ — கொண்டுசெய்சபரிவிருந் துண்டுபம்பையாறுசேர்ந்தார் — கொ கொ — ஆரியரைக்கண்டுபம்பை ஆற்றிலனுமார்வணங்கி — கொ கொ — சீரியசுக்ரீபன் போய்ச் செய்தி சொல்லக்கேட்டறிந்தே — கொ கொ — ஆதரவாய்ச்சுக்ரீபன்வந் தாரியவரைச்சேவித்தபின் — கொ கொ — சீதைபணியச்சுக்ரீப நாதனுக்குக்காட்டித்தந்தான் — கொ கொ — மைக்குழலாள் பூஷணங்கண் டக்கணந்துக்கித்தார்சுவாமி — கொ கொ — சுக்ரீபன்சந்தேகந்தீரத் துளைத்தார்மராமரமேழும் — கொ கொ — உக்கிரவாலியையோரம்பால் ஒளித்திருந்து கொன்றார்பின்பு — கொ கொ — கிஷ்கிந்தைக்குராசனாகச் சுக்ரீவர்க்குப்பட்டந்தரித்தார் — கொ கொ — மைக்கண்ணாளசீதையை தேட வானரவீரரைவிட்டார் — கொ கொ — தெற்கினிலனுமார் சென்று தேடினாரிலங்கைமுற்றும் — கொ கொ — அண்டியே அசோகவனத் தம்மையிருக்கக்கண்டார் — கொ கொ — கண்டுசீதைகையில் சுவாமி கணையாழியைத் தான் கொடுத்தார் — கொ கொ — அப்புறமனுமாரந்த அசோகவனத்தையழிக்க — கொ கொ — ஆயிரம்சாடிமதுவுண் டவன்மலை போல்வந் துநின்றான் — கொ கொ — மாயக்கும்பகர்ணன்பாதிவானரச் சேனையைக் கொன்றான் — கொ கொ — சானகிநாயகன் அவன் தன்தலையைக் கொய்தெறிந்தான் — கொ கொ — ஆயிரம் பேய்பூண்ட தேர்மேல் மாய இந்திரசித்து வந்தான் — கொ கொ — மேதத்தில் மறைந்துபாவி நாகபாசத்தை விடுத்தான் — கொ கொ — வேகமாய்க் கருடன்வர நாகாசந் தொலைந்தது — கொ கொ — இன்னுமந்தயிந்திரசித்து பின்னும் பிர்மாஸ்திரந் தொடுத்தான் — கொ கொ — வீமன்விட்ட பிர்மாஸ்திரத்தால் விழுந்திருந்தா ரனைவரும் — கொ கொ — சாம்புவந்தர்சொற்படியே சஞ்சீவிக் கனுமார் போனார் — கொ கொ — தாவியசஞ்சீவி காற்றால் யாவரும் பிழைத்தபோது — கொ கொ — சூதனிந்திரசித்து மாயா சீதையை வெட்டியெறிந்து — கொ கொ — போகிறே னயோத்தி க்கென்றே போக்குக்காட்டி போய்த்திரும் — கொ கொ — வாகுள்ள நிகும்பலையாம் யாகமது தொடுத்தான் — கொ கொ — அந்தயாகத்தை நொடிக்குள் முந்தியனுமா ரழித்தார் — கொ கொ — பின்பவன் போர்செய்த திளைய பெருமாள் பாணத்தால் விழுந்தான் — கொ கொ — பண்புடனெழுகடல் போல் வந்தது மூலபலந் தான் — கொ கொ — ஊக்கமுடனீசல் பெரும்போக்குப்ப புறப்பட்டாற் போலே — கொ கொ — மண்ணத்த விண்ணதிர நண்ணு மூலபலங் கண்டு — கொ கொ — கூகூவென்று வானரங்கள் குடல் குழம்பி ஓடையிலே — கொ கொ — மோகனாஸ்திரம் விட்டுராமர் மூலபலத்தை மயக்க — கொ கொ — துஷ்டனிந்திரசித்து வந்து விட்டனன் பிர்மபாசத்தை — கொ கொ — விட்டபிர்மபாசத்தாலே கட்டுபட்டார் வாயுபுத்திரர் — கொ கொ — கோரமான ராவணன்முன் கொண்டுபோ யனுமான்றன்னை — கொ கொ — பாவியிந்திரசித்தன்விடப் பார்த்து வாயுபுத்திரனை — கொ கொ — ராவணன் நீயாரென்ன நான்ராமன் தூதனென்றனுமான் — கொ கொ — இங்கிதமாய்ச் சொல்ல வாலில் வெங்கனல் கொளுத்தி விட்டா — கொ கொ — லங்கையையெரி த்தனுமார் ராமரிடம்வந்து சேர்ந்து — கொ கொ — தேன்மொழி லங்கையில் ராமா சிறையிருக்கக் கண்டேனென்றா — கொ கொ — ஆனை யெழுபது வெள்ளம் வானரப்படைகள் சேர்ந்தார் — கொ கொ — தென்சமுத்திர த்தண்டைவந்து சேர்ந்தது வானரப்படை — கொ கொ — தன்னிகாவிபீஷணரும் சரணம்ராமா வென்றுவந்தார் — கொ கொ — எழில்சேர் விபீஷணருக்கு ராகவர் பட்டங்கொடுத்தார் — கொ கொ — வழிவிடவேணு மென்று வருணசெபம் சுவாமிசெய்தார் — கொ கொ — நாட்டினில்மலை பிடுங்கிப் போட்டுக்கடலை அடைத்தார் — கொ கொ — தென்கடலைத் தாண்டிப்போய் அங்கதனை த்தூதுவிட்டார் — கொ கொ — கூட்டமாய் குரங்குலங்கைக் கோட்டையைப்போல் வளைத்தது — கொ கொ — ஆனது தெரிந்தரக்கன் சேனையுடன் போர்க்கு வந்தான் — கொ கொ — மாலரியராட்சதரும் வானரரும் சண்டை செய்தார் — கொ கொ — இகல் வாள்வலியும் தோள்வலியும் மாய்ந்தரக்கன் மீண்டுசென்று — கொ கொ — கும்பகர்ணனை எழுப்பித் தம்பி நீபோசண்டை க்கென்றன் — கொ கொ — இங்கும்ராம னங்கும்ராம் னெங்குராமனாக க்கண்டு — கொ கொ — தந்தை தலைமைந்தன் பொய்யமைந்தன் தலைதந்தை கொய்ய — கொ கொ — இந்தவிதமா யெல்லோருந் தொந்தயுத்தம்தான் புரிந்து — கொ கொ — முடிந்த முகூர்த்தரொன்றில் மடிந்ததந்த மூலபலம் — கொ கொ — தந்திரமகோதரன் முதல் மந்திரிமாரெல்லாமாண்டார் — கொ கொ — தேர்தனில் ராவணனேறிப் போர் செய்தான் ராகவனுடன் — கொ கொ — பூதலந்தன்னிற்சாமிக்கு மாதலி தேர்கொண்டு வந்தான் — கொ கொ — மூதண்டம்நடுங்க வுக்ரகோதண்டம் வளைத்தான் ராமன் — கொ கொ — நாயும்நரியுங்கொட்டிய பேயும்பசி தணியவே — கொ கொ — நிருகர்குலத்தை யெல்லாம் நீறுசெய்தபின்பு ராமன் — கொ கொ — பெருமலைபோலரக்கன் இருபத்தையுந்தரித்து — கொ கொ — தத்திப்பனங்குலை போலப் பத்துத்தலையும் துணித்து — கொ கொ — ராவணனைக்கொன்று ராமன் தேவர்களிடுக்கண் தீர்த்தான் — கொ கொ — ராமர்லட்சுமணரை வாழ்த்திப் பூமழை பொழிந்தார் தேவர் — கொ கொ — அம்மைதயவிபீஷணர்போய் ரம்மியமா யழைத்துவந்தார் — கொ கொ — அய்யன் சந்தேகிக்கச்சீதை வெய்ய தணல் மூழ்கிவந்தாள் — கொ கொ — பிர்மருத்திதாதி தேவரும் உம்மை சேர்ந்ததை யுணர்ந்து — கொ கொ — ராகவாவுனக்கேனிந்தத் தோகைமீதில் ஐயமென்றார் — கொ கொ — தன்னைப்பெற்றவனிடத்தில் சாமிவரமது பெற்றார் — கொ கொ — அன்னை சொற்படிபதினா லாண்டு கழித்தானே ராமன் — கொ கொ — புஷ்பரதத்தில் எல்லோரும் ஒப்புடனப்பொழுதேறி — கொ கொ — காதலுடனே திரும்பிச் சேதுதரிசனஞ்செய்து — கொ கொ — மாசில்லா ப்பரத்துவாசர் ஆசீர்மத்தருகு வந்தார் — கொ கொ — அய்யனுக்கு ப்பரத்துவாசர் துய்யவிருந்து செய்தார் — கொ கொ — க்ஷேமம்பரதற்குச் சொல்ல ராமன் அனுமானைவிட்டான் — கொ கொ — சேதியனுமார் சீக்கிரத்தில் ஓதியன்பாய்வந்து சேர்ந்தான் — கொ கொ — சேர்ந்த அனுமாருடனே சார்ந்துவிருந்துண்டான் ராமன் — கொ கொ — அந்தவிடம்விட்டெல்லோரும் சொந்தமாயயோத்தி சேர்ந்தார் — கொ கொ — தேவர்கள் முனிவர்களும் மேவுசெகராசர்களும் — கொ கொ — கூடியே முடி தரிக்க நாடிநல் முகூர்த்தம் வைத்தார் — கொ கொ — பொங்கமுடன் ராமனுக்கு மங்களஸ்நானஞ் செய்தார் — கொ கொ — விதிப்படியே ராமர்க்கு வதிட்டர்மகுடந் தரித்தார் — கொ கொ — சம்பன்னதேசத்தரசர் கப்பணங்கட்டிப் பணிய — கொ கொ — மாதமும்மாரி பெய்ய மாநிலந் தழைக்க ராமன் — கொ கொ — சீதாசமேதனாகவே சிங்காசனமேலிருந்து — கொ கொ — சுமந்திரன் முதலோர்சூழ அமர்ந்தேயரசு செய்தான் — கொ கொ — ராமாயணக் கொம்மைப்பாட்டு ஆமெனப்படித்தபேரும் — கொ கொ — நாடியிதைக்கேட்ட பேரும்கோடிகாலம் வாழ்ந்திருப்பார். முற்றிற்று.
Contents | Home