ஏற்றப்பாட்டு contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ண விலாசத்தில் புன்னைமரச்சேவை கீர்த்தனம் சென்னை பாரதி அச்சுக்கூடுத்திற் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

பல்லவி. மாதேயசோதையே கேளம்மா — உன்மகன் செய்த சூதே நான் சொல்லுகிறேன் கேள் — தாயே அநுபல்லவி. போதும்போதுமொரு சூதும்வாதுந்தெரி யாதகிருஷ்ணன் வெகு சாதனமென்றான். — மா சரணங்கள. ப(பூ)ட்டிக்ச(க)தவைத்திறந்துவிட்டான் பாலூட்டுதென்று திட்டி புருஷரைக்கூப்பிட்டான் அவரங்கேபோனார் கட்டியெங்களை விட்டான் எட்டியவுறிதனில் கட்டிய தயிர்வெண்ணை சட்டியெல்லாங் கொள்ளை இட்டாண்டியம்மா. — மா பெருகி நீரோடும்வேளைக் கண்டான் சேலையைவாரி மரமீதிலேறி ஒளித்துக்கொண்டான் துறையேசேலை தரவேண்டுமென்று நாங்கள் கேட்டோம் நீங்களெல்லோரும் கரைமீதில் வந்தால்தாறே னென்றான் நீர் எங்கள் மானத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டோம் — மாதே மற்று மொருகன்னியிடத்தில் தானும் படுத்திருந்தால் மெத்தை மீதினில் வந்திருந்து சண்டாளப்பாவி விந்தைக ளென்னசெய்தானே நாங்களென்ன செய்வோம் நித்தியம் தங்களை தொடுத்தானே சுற்றிலும் மாதர்கள் இத்தனை பேரிலே பத்தினியொருத்தி இல்லையே. — மா புன்னை மரச்சேவை கீர்த்தனம், முற்றிற்று.
Contents | Home