பார்த்தசாரதி-பஞ்சரத்தினம் contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் ஸ்ரீ ஸ்ரீரமஜெயம். பார்த்தசாரதி பெருமாள் பேரில் பஞ்சரத்தினம்
Contents | Home

கண்டபோதரைக் கணந்தரியா தெழுந்துமுன் கைகுவித்தெதிர் சென்றுடல், கம்பித்துரோமஞ் சிலிர்த்து விழிமலரருவி கரைபுரள முகமலர்ந்தே, தெண்டனிட்டுபசார மாவரவழைத்தவர்கள் சிந்தையில் நினைந்தபடியே, செப்புமுன்னடியவர்க் கொப்புளனடித்தவர்கள் செல்வமொரு குறைவுமுண்டோ, தண்டமொடு சங்குசக்கரம்வாளிலங்கு கோதண்ட மேந்திடும் ப்ரசண்ட, தகை கொண்ட பகவண்ட முழுதுண்ட தளமளவகண்டவண்டா, பண்டருமனந்தமறை கொண்டு முனிவோர்கடுதி பகர் திருவலிக்கேணியிற், பார்த்தபேரிடமாய மூர்த்தமாகிய தூயபார்த்தசாரதி மாயனே. — 1 உனதுபஞ்சாயுதத் தொருபடை நினைத்தவர் தொன்னலர் புடைக்குவருவார், ஓளிகவுத்துவ மணியினைக் கருதுமவர்களகடு வுலகநிந்தையுளழுந்தார், பனகத்திதிவயிரியைக் காணுமவர் தனகனமகிழ்பதியுமவர் நிதியுமன்பார், பங்கயப்பதமனந் தங்கவைத்த வர்பெருகை பகரவெளிதாகுமோதான், கனகனென வருமவுண னுடறடிந்திடுமதி கெம்பீரநரசிங்கா, கனபிங்க ளசுபங்க சுவிதங்க மதுரங்க சருதுமக ளங்கதுங்கா, பனசமா கதலிமுக்கனி நகவுபாய்கணைகள் பகர்திருவல்லிக்கேணியிற், பார்த்தபேரிடமாய மூர்த்தமாகியதூய பார்த்தசாரதிமாயனே. — 2 மது நீதிகொண்ட தசரதனறும்புதல்வனென வந்தறிஞர் மகமுடித்து, வடிவகலிநகக்கருளி யொடிய வில்வளைத்துமலர் மகளையுமணந் தடவியில், தனுவோடெதிர்த்தகர தூஷணர் மடிந்தபின் றகைமாய மான்கடிந்து, கனியரசியற்கை சுகரீவனுக்குதவிபின்ற டங்கடலடைத்திலங்கை, துணுமிராவணனாதி மடிய வீடணனு முடிசூட்டி மகிழ்கொண்டராமா, சோமவானந்தநாமா பன்னுநான்மறைத் தெளிவதாகுமாழ்வார் கடுதி பகர் திருவல்லிக்கேணியிற், பார்த்தபேரிடமாய மூர்த்தமாகியதூய பார்த்தசாரதிமாயனே. — 3 நல்லவசுதேவன் மாமனையுதித்தாயர்கோ நந்தனிடமாய்வளர்ந்து, நஞ்சுமுலை வழியினொரு பெண் பேயினுயிருண்டு நமனை நிகர்சகடுதைத்துக், கல்லுர லினொடுசென்றுமருதி றுத்தளைதின்று சனகுருகுவா ய்பிளந்து, காளியன் மேனடித் தானிரைபுரந்தண்டர் காணவெகுலீலைசெய்து, மல்லரையும் வஞ்சமுறு கஞ்சனையும் வென்றுலகம் வாழவருடந்தபோதா, மமநாதா நவநீதா சதுர்வேதா திருநாதா மகிதலமள ந்தபாதா, பல்லவமுயிர்த்த வைவருலகை நிகர்வளம் பகர்திருவலிக்கேணியிற், பார்த்தபேரிடமாய மூர்த்தமாகியதூய பார்த்தசாரதிமாயனே. — 4 தீங்கொன்றிலாத பஞ்சவராசிலேறவுஞ் சுயோதனாதியர் நீறவும், செருமுகத்தனில்விசைய னமர்பெருந்தேரிலொரு செங்கையிற் கோலொன் றுகொண் டேங்கிமவர்வாயாலு மாக்கடும் பரிகளை யுரப்பு கோலத்தையடியேன், உளமகிழ்ந்தன் போடுகாண விளங்கருளுவாய் உயர்தொண்டை மானினதுபோற், பூங்கழல்வணங்கியபினால் வேதமும்பரவு புனிதரகுராமசந்த்ர, புஜாந்த்ரா கஜவிந்த்ரா பஜமந்த்ரா போற்றுமடியார் சுதந்த்ரா, பாங்குமுத்திடுசங்க வெனவவன் வழித்திடப் பணிதிருவலிக்கேணியிற், பார்த்தபேரிடமாய மூர்த்தமாகியதூய பார்த்தசாரதி மாயனே. — 5 பார்த்தசாரதி பஞ்சரத்தினம் முற்றிற்று.
Contents | Home