நீதிநெறி contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் சிவமயம் நீதிநெறிவிளக்கக் கீர்த்தனம். சென்னை சூளை நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

நேரிசை-வெண்பா சீராருஞானச் செழுஞ்சுடரா யன்பர்களுக் காராவமுதமா யாரணமா — யேராரு மூ[மு]ச்சுடராய் முக்குணமாய் முப்பொருளாய்நின்றொளிரும் அச்சுதனார் பூங்கழற் காப்பாம். தரு-புன்னாகவராளி ராகம்-ஆதிதாளம், நல்லவருடன்கூடு மனதே நாரணன்புகழ்பாடு கல்லைப்பெண்ணாக்கிய காகுத்தன்பதங்களை அல்லும்பகலும்போற்றா அபலருறவைவிட்டு — நல் பெண்டாட்டிபேச்சைகேட்டு பெற்றவளை மொத்துகின்ற, சண்டாளருறவைத் தாரணிதனில்விட்டு — நல் வாத்தியார்கூலியை வாயிற்போட்டுக்கொண்டு கூத்தியாருக்குக்கொடுக்குங் கொடியருறவைவிட்டு — நல் சுத்தமான தாய் தந்தைக்கு சோருதண்ணீர்காட்டாமல் உற்றபெண்டுபிள்ளைகளோ டுண்ணும்பா தகரைவிட்டு — நல் பெண்டாட்டியுடன்சேர்ந்த பேச்செல்லாம்பிறருக்குக் கொண்டாட்டமாயுரைக்குங் கொடியருறவைவிட்டு — நல் கொண்டவள்கைசோற்றைவிட்டுக் கூத்தியார்கைசோ ற்றை, உண்டுகாலங்கழிப்போ ருறவையுலகில்விட்டு — நல் பத்துமாதந்தாங்கிபெற்றுப் பால்கொடுத்துவளர்த்த பெற்றதாய்க்குக்கஞ்சிவாராப் பெரும்பாவிகளை விட்டு — நல் ஊழ்வினை நீங்குங்கதைகண் மூதுலகிற்கேளாத கோள்களைக்கேட்கச்செவியைக் கொடுக்கும்பேர்களை விட்டு — நல் சந்திபதபஹோமம் சாஸ்திரங்கள்யாவும்விட்டு அந்திபகல்கடிதாசி யாடும்பாதகரைவிட்டு — நல் பெற்றவளை திட்டு தற்குப் பெண்டாட்டிக்குநன்றாகக் கற்றுக்கொடுக்குங்கொடிய கயவருறவைவிட்டு — நல் நீதிநெறிவிளக்கக் கீர்த்தனம். தாய் பெண்ணுக்கு புத்தி சொல்லுதல் சேரவேண்டாமயிலே யென்சொல்புத்தியை செவ்வையாய்க்கேள் தையலே. நாரணனாதிதெய்வம் நாயகனேயென்று நம்பும்பெண்களோடல்லால் நலமிலாப்பெண்களுடன் — சே விடியற்காலத்தெழுந்து வீட்டுவேலைபாராமல் தடிபோலத் தூங்குகின்ற தகையிலாபெண்களுடன் — சே காமனாரைப்போலேதன் கணவனைபற்றெடுத்த மாமனார்க்குக்கஞ்சிவாரா மாபாவிகளுடனே — சே எட்டுவீட்டுசண்டையைத் தானிருக்கும்வீட்டிலிருந்தே, சட்டமுடனிழுக்கின்ற தண்டுபஜாரிகளுடன் — சே மாப்பிள்ளைக்கொருவிதமு மச்சினர்க்கொருவிதமும் சாப்பாட்டில்வஞ்சனைசெய் சதிகாரப்பாவிகளுடன் — சே மாமியாற்கெதிரில்காலை மடக்காமல்நீட்டிக்கொண்டு சாமியாரைப்போலிருக்குஞ் சறுதார்பெண்களுடனே — சே ஓரகத்திநாத்தினாரை யோரவஞ்சகஞ்செய்து தீரமுடன்சிலுவாணஞ் சேர்க்கும்பெண்களுடனே — சே சாக்கெட்டுபோம்படி நாயையும்பூனையையும் சாக்கிட்டுவைவதில்முதற் றாம்பூலம்வாங்குவோரை — சே ஒருநாளுக்கொருவர்க்கன்பாய் உவந்திட்டசோற்றை பலநாளுமேச்சிக்காட்டும் பாவைமாருடனேநீ — சே கள்ளப்புருடருடன் கலந்ததினாற்கிடைத்தப் பிள்ளைகளைக்கரைக்கும் பெரும்பாவிகளுடனே — சே புருஷன் மடியிற்கையைப் போட்டுநடுத்தெருவில் வருவார்போவார்சிரிக்க வம்பாடும்பெண்களுடன் — சே வாயில்வருவதெல்லாம் வர்னாச்சாரமில்லாமல் நாய்போல்குலைக்கின்ற நயமிலாப்பெண்களுடன் — சே கொண்டவனடித்தாற் கூடையினாலடித்து அண்டையயலறிய அழுகின்றபெண்களுடன் — சே தன்னிடத்திலேகுற்றங்கள் ஜாஸ்தியாய் வைத்துகொண்டு, அந்நியர்குற்றம்எடுத்து அதிகம்பேசும்பெண்கள் — சே அண்டைவீட்டுக்காரிக்கவாளாண்புடையானகை செய் தால், கண்டுசகிக்காமலேதன் கணவனைக்காய்பவளை — சே மாத்தரையில் துன்மார்க்க வார்த்தைகளைப்பேசுகின்ற கூத்துகளைபோய்பார்க்கும் கொடியபெண்களுடனே — சே கணவன் சம்பாதனையைக் கண்டுசெலவுசெய்து கணவனை மீத்தாமல் கடன்காரராக்குவோரை — சே அண்டைவீடெதிர்வீடு எல்லாவீடும்நுழைந்து சுண்டுகறிபதம் பார்க்குஞ் சுறணைகெட்டவருடன் — சே பூர்த்தியாய்வீட்டில் திருடும் பொருள்களையண்டைவீட் டில், சேர்த்துவைத்து மோசம்பொருந்தியபெண்க ளுடனே — சே ஊற்றைப்பல்லைவிளக்காமல் உதையத்தெழுந்திருந்து சோற்றுப்பானைதொடுகின்ற சுறணைக்கெட்டவருடன் — சே அன்புடையகறிசோறு அமாவாசைக்காக்கிவைத்து பின்பு தலைமுழுகுமப் பீடைபிடித்தவளுடன் — சே வீட்டில்மாமியாரைத் தெருவிளக்குந் துடப்பத்தைக் காட்டிகாட்டிதிட்டுகின்ற கடைகெட்டவளுடனே — சே கனிவுள்ள புருஷனைக் கண்டபடி திட்டியூர்க்குத் தனிவழியோடுகின்ற சண்டாளப்பெண்களுடன் — சே தாய் தந்தைபேச்சை தள்ளி தன்பேச்சைகேட்பானெ ன்று வாய்சோற்றில் கணவற்கு மருந்திடும்பாவியுடன் — சே இதுவுமது. புன்னாகவராளிராகம் — ஆதிதாளம் நல்லமழை பெய்யுமம்மா — கருப்பு நீங்கி நாடு செழிக்குமம்மா. இல்லாதவனாயினு மிருப்பவனாயினும் கல்லாதவனாயினுங் கணவனைப்பூசித்தால் — நல்ல வேறொருத்தியைக்கணவன் விரும்பினபோதிலும் மறுவார்த்தைசொல்லாதே மனையாளிருந்தாக்கால் — நல்ல தன்னுடையநகைகளை சக்களத்திக்கியென்றாலும் நன்னயமாகக்கொடுக்கும் நாயகிகளிருந்தாக்கால் — நல்ல மாமனாரைமாமியாரை மாநிலத்தில்தெய்வமென்று பூமலர்க்கொண்டர்ச்சிக்கும் பூவைமார்களிருந்தால் — நல்ல காலையிலெழுந்திருந்து கணவனடிபணிந்து சீலமுடன் வீட்டுவேலை செய்யும்பெண்களிருந்தால் — நல்ல தன்குழந்தையைப்போலும் சக்களததிபெற்றதை இன்பமுடன் பார்க்கின்ற யேந்திழைமாரிருந்தாள் — நல்ல நாயகனடித்தாலும் நடுவொன்றும்பேசாமல் வாய்மூடிக்கொண்டிருக்கும் வனிதையரிருந்தால் — நல்ல வந்தவிருந்தினரை மகிழ்வோடுபசரித்து அந்தமுள்ள நற்புகழை யடையும்பெண்களினால் — நல்ல சத்தியந்தயாளதர்மம் சாந்தமுதலான உத்தமகுணங்களை யுடையபெண்களிருந்தால் — நல்ல மாமழிசை ஜெகநாதன் வழுத்துநீதியின்படி பூமியில்நடக்குமென்னைப் புரக்குந்தாய்மார்களாலே — நல்ல நீதிநெறிவிளக்கக் கீர்த்தனம் முற்றுப்பெற்றது.
Contents | Home