மாசிலாமணீஸ்வரர் பதிகம் contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் சிவமயம். திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் பதிகம். சென்னை ஆதிமூலம்பிரஸில் பதிப்பிக்கப்பட்டது 1922
Contents | Home

கடவுள் வாழ்த்து. முக்கணனென்னு முதல்வனையேத்தப் பக்குவப்பதிக்கம் பத்தும்வகுமே. ஆசிரியவிருத்தம். ஆதியேபரனே யருட்பெருங்கடலே யப்பனே பிரமன்மாற்கறிய சோதியேசுடரே சுடர்மணிக்குன்றே சுத்தனே யென்னை யாண்டருள்கூர் நீதியேநிறைவே நின்மலவொளியே நித்தனே திருமுல்லைவாயல் தீதிலா துரையுஞ் சச்சிதானந்த தேசனே மாசிலாமணியே. — ௧ மாலொடுவிதியுந் தேடியுங்காணா மன்னனே மன்னவர்க்கரசே பாலொடுகலந்த தேனிநற்சுவையே பன்னகாபரணனே வடியேன் காலனுக்கஞ்சா துன்கழலடியை கருணைசெய் கருணைவாருதியே சீலமாதவர்சூழ் திருமுல்லைவாயல் தேசனே மாசிலாமணியே. — ௨ வானவர்போற்றும் வள்ளலேசோதி வரையுறுவாகியே முன்னம் ஏனமாலயனுஞ் செருக்கள[ற]நின்ற வெந்தையே தீவினைக்காட்டை ஞான நற்றீயால் கொளுத்தியுட்புடலத்தை நலம்பெறத்திருத்தி யேர்க்கருள்கூர் தேனலர்பொழில்சூழ் திருமுலைவாயல் தேசனே மாசிலாமணியே. — ௩ கடவுளர்காணாக் காரணவொளியே கவினுலாங் கபிலைநாயகனே கொடியிடைவல்லி யிடம்படர்பவளக் குன்றமே கோதிலாவமுதமே கடையனேற்றன்னை யாள்மதுன்பாரமே கற்பகப்பூந்துணர்க் காகவே திடமதிற்சிகரி திருமுல்ளை வாயல் தேசனே மாசிலாமணியே. — ௪ பிரமனுங்காணாத் திருமுடிவளைத்து பிராமணப்பிள்ளை முன்காண் அருளுநல்வழிக்குத் துணைவனென்றறிந்து மன்பிலே னெவ்வகையுய்வேன் திருவடிக்காட்டித் தீவினையோட்டிச் சிவானந்தத் தெள்ளமுதூட்டி தெருளினைக்கூட்டி யருணமுல்லைவாயல் தேசனே மாசிலாமணியே. — ௫ கதிர்மதியனன்முக் கண்ணனே விண்ணேர் கண்ணனென் கண்ணற்குமரிதாய் துதியடியவர்முன் னெளியதாய்வருமெய்ச் சோதியே யாதியம்பரனே ததியினென்கோப தாபமுந்தீர்த்து தன்னருள்புரி தயாபரனே ததியருக்கன்னந் தருமுல்லைவாயல் தேசனே மாசிலாமணியே. — ௬ மாயவன்சால வன்பினாலுருகி மலர்க்கணா லர்ச்சனைபுரிய நேயமாயுவந்தி நேமிமுன்னளித்த நித்தனே நிராமயச்சோதி தூயமேனியனே கொடியிடைத்துணைவி துணைவனே தோன்றிடாத்துணையே தீயனேற்கருளுந் திருமுல்லைவாயல் தேசனே மாசிலாமணியே. — ௭ கன்மியாமடியேன் கலவிநோய்தீகக் கருணை மாமருந்தினை ரளித்துன் தன்மயமாக்கி யென்மயநீக்கிச் சன்மவாதனை வலிபோக்கி நன்மயதாகு நின்மயந்தருவாய் நதிமதிமுடித்த வேணியணே சின்மயமான திருமுல்லைவாயல் தேசனே மாசிலாமணியே. — ௮ மன்னவர்மன்ன னாகியசோழன் மகிழ்வுறத் தடுத்துவந்தருள்கூர் அன்னையேயென்ற னப்பனேகுருவே ஆதறித்தாளுந் தெய்வமே வன்னிமாமலையாய் மாலயற்கரித்தாய் வளர்ந்தமெய்ப் பரஞ்சுடர்க்கொழுந்தே தெனனவன்முதலோர் தொழுமுல்லைவாயல் தேசனே மாசிலாமணியே. — ௯ அகமாயானந்த பேதமாமுயிரை யளித்ததினிறைந் தளித்தழிக்க நிகரிலாமூன்று வுருபமாய்நின்ற நித்தனே மெய்த்தனர்வாழ்வே பகரருமறையின் முடிவினிற்படர்ந்த பராபரநிராமய வொளியே சிகரகோபுரநீ திருமுல்லைவாயல் தேசனே மாசிலாமணியே. — ௰ மூவரும்வாழ்க மோன் மந்திர முதலாயுள்ள தேவரும்வாழ்க நல்ல சிவனடியார்கள் வாழ்க யாவரும்வாழ்க ஞான் வஞ்செழுத்தென்றும் வாழ்க மாவருந்தவத்தோர் வாழ்க மாசிலாமணியே வாழ்க. மாசிலாமணீஸ்வரர் பதிகம் முற்றிற்று.
Contents | Home