கேசவப்பெருமாள் கீர்த்தனம் contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் ஸ்ரீ ஸ்ரீராமஜெயம். கேசவப்பெருமாள் பேரில் கீர்த்தனம். சென்னை சூளை நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

இ-ம் நாதநாமக்கிரியை தாளம் ரூபகம். பல்லவி இதுநல்லசமையம் அருள்ரிஷிகேசவா இதுநல்லசமையம் அநுபல்லவி, பதியினிற்சிறந்தகான் பரியூரிலெந்நாளும் பாசமுடனமருங் கேசவனே நீவர — இது சரணங்கள் தொண்டர்கட்குட்சிறு தொண்டநென்றெண்ணிஎன் பண்டைவினையகற்றிப் பாலகனைக்காக்கவே — இது தாயிலாப்பிள்ளைபோற் றளர்ந்தழுதேங்குமிச் சேயின் குறையகற்றி திருவருள் செய்யவே — இது அருடருதெய்வமென றருமறைதுதிப்போனே இருளையகற்றியிவ் வேழையைக்காக்கவே — இது மாதர்வலையிற்சிக்கி யயக்கிவீழாமலுன் பாதத்தைநாடோறும் பணிந்திடவரந்தர — இது சுற்றிவந்துன்றனை நித்தந்துதிசெய்யும் பத்தனாம்ராஜகோ பாலனுக்கருள்செய்ய — இது கீர்த்தனம் முற்றிற்று.
Contents | Home