காளீயநிர்த்தனம் contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை. ஸ்ரீபாண்டவது தவிலாசம். காளீயநிர்த்தனம். சென்னை சூளை நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

நம்மாழ்வார் காப்பு. கேரிசை வெண்பா மருவாய்ப்பொழில்குருகூர் மாநகரிற்றொன்றித் திருவால்[ய்]மொழியெனனுந் திவ்யப் பிரபந்தம் பூதலத்தோருய்யப் புகன்றானடிபரவும் மாதவர்தாள்நெஞ்சே வழுத்து. திபதை காலபாதிராகம் அடதாளம் கண்ணிகள். எமுனாநதி தனக்கருகிலோர் மடுவினில் இருக்கின்ற தொருபாம்பே அதற்கு சுயமில்லை முன்னாவே கடலில் மந்திரகிரி தனைப்பிணித்திடும் யாம்பே. — ௧ அந்தம்பாம்பின் விஷச்சுவாலை சுற்றுப்பக்த் தடவிரனிலே யிருக்கும் நல்ல விந்தையானகொடி செடிமுதலாம்பெரிய விருக்ஷங்கனையுங் கருக்கும் — ௨ அந்தமடுவிற்குநேரே யாகாசத்தில் அழகுடனே பறக்கும் பட்சிகளும் வெந்துகரிந்து பொரிந்தேயந்தப்பாம்பின் விஷவேகத்தா லிறக்கும். — ௩ ஆயிரங்குண மொருலோப குணத்தினாலே அழிகின்ற வகைபோலே நித்தியம் துய்வனுஷ்டானஞ் செபமிதில் தொடங்காமல் தொலைகின்ற திவனாலே. — ௪ இப்படியிருக்கின்ற நாளையிலொருதினம் எந்தை யெம்பெருமானே அந்த மைப்படிநாசத்தை மடுவையிட்டோட்டிட மனத்தினில் நினைத்தானே. — ௫ மங்களமான கோபாலர் பசுக்களுடன் மகிழ்மிக மென்மேலே மனதிற் பொங்கும்படியந்த மடுவருசுடுத்தானே புயல்வண்ண னொருகாலே. — ௬ சிவைக்கருடனால்முன் அமிழ்தத்திலோர்துளி சிதறினதாற் பிழைத்தே நாளும் மறுவில்மலருடனோர் கபடமாமுள்ளதம் மடுக்கரையினிற் செழித்தே. — ௭ அந்தவிருக்ஷத்தை அழகானகிருஷ்ணனும் அகந்தனிலே மிதித்தான் மேலேறிய விந்தைசேர் கோபாலர் தடுக்கவும் அம்மடு வினில் விசையோடு குதித்தான். — ௮ குதித்தந்த நதியினிற் குழிகளெழும்பிடக் கோபா வேசங்கொண்டே கடல் மதிக்கும்மந்திரமெனக் கலங்கிடும்போதந்த வாளரமுங் கண்டே. — ௯ ஆரடாநீயென் றதட்டிச் சீறிவந்து அடிமலரைப் பத்தினான் இன்னம் பாரடாலென்று திருமேனி முழுதுந்தன் பருமுடலாற் சுற்றினான். — ௰ ஸ்ரீகிருஷ்ணபகவான காளீயன் பணாமுடியின்மீதில் ஆனந்தத் தாண்டவமாடுதல். விருத்தம். கண்ணபிரா னதையறிந்து விஸ்வரூபம் கணப்பொழுதி லெடுத்திடமுன் சுற்றுஞ்சுற்றைத் திண்ணனெனுங் காளீயன் வாங்கிமெத்த தீரனிம னென்றுபின்னுஞ் சீறவன்னோன் வண்ண முடிமீதிலொரு பதத்தைநாட்டி மற்றொருகா லுடன்மிதித்து வாலைப்பற்றிப் பண்ணுடனே அரம்பையரும் பாடத்தாமும் பாடினார் மகிழ்ந்துநன்றா யாடினாரே. நிர்த்தனம் தில்லானா தரு கமாசுராகம், ஆதிதாளம் பல்லவி. தித்தாம்தரிநாதரி தந்தரிநாம் திரிகிடநாதரிதித் தில்லானாதந்தரி தித்தாம்தரிநாதரி தந்திரிநாம். அநுபல்லவி. அத்திமிதிமி தகததிமி தகிடதரி தத்தரிகிட தகதக தரிகிடதக தளங்கு தகதிமிதக ததிகிணதோம் — தித்தாம் வடவாக்கினிதன்னை நீறுசெயும்பெருவிடம் வாயினில் வைத்தெல்லா நாசஞ்செயும் வஞ்சநெஞ்சுடைய காளியனேநீயும் திடமழிந்துவிட தேடினவினைநீ செய்வதென்ன இதோபார் தித்திடாகிட ஜெம்தரிதித்தாம் எனையெவ்வளவாக வுன்பல்லாலேகடிக்கினு மேறுமோநின் பொல்லாதாகும்விஷம் எள்ளுமாத்திரமு மென்றிருமேணியிலே சினமோடிப்படி யெத்தனைபேர்களை சீறிக்கடித்திருப்பையோ ஜெம்தரிததிமி தகிடதரிகித் உனதாண்மையைவாங்குவே னின் றுன்னைமடுவினி லோரிமையிற் பல்லோர் சேரும்படி ஒட்டிவைக்கிறே னிச்சயமாய் வுன்னை சனிவந்தின்றுன்னைத் தொடர்ந்ததிதோபார் சத்தியமாக தரிகிடதளங்கு தகதிமி தகததிங்கணத்தோம் பயந்தோடாதீர் கோபாலர்களே — விடமுள பாதகவிப் பொல்லாப் பாம்பின்கதி நயந்தேகாண்பீ ரதிசீலர்களே ஜெயமதாகவேநின் றிதோபாருங்கள் செவ்வையாகஜெம் தரி தளங்குதகதிமி தகததிங்கணத்தோம் கனபாண்டவதூதனுயர்ந்தவருள் அனுனுதினம் சுதாலாய்க் கொண்டும் மாதலந்தனில் களிப்போடோ ளிருந்தமக் கேதுமருள் தனதாயிந்தத் தாண்டவம் பாருங்கள் தயவுவைத்து கிடதக தளங்குதகதிமிதகத திங்கணத்தோம் தந்தை தாயார் பரிசனங்கள் கேள்விப்பட்டுப் பயந்தோடிவந்து புலம்பல். விருத்தம். இந்தவகை யெம்பெருமான் பாம்பின்மேலே இசைமருவு தாண்டவங்க ளாடிப்பின்னே அந்தகொடு விஷமதனால் சோகித்தார்போல் அவனியுளோர் பிரமிக்ற்[க] நடித்திருந்தகாலைத் தந்தையன்னை பரிசனங்க ளதனைக்கேட்டே சகிக்காம லதிவிரைவி லோடிவந்தே சிந்தைநொந்தன் தியருகில் நின்றுநின்று தேங்குவார் கண்ணீர்விட் டேங்குவாரே. தரு — முகாரிராகம் — ஆதிதாளம் — பல்லவி. அய்யனே யெங்கள் துரையே வுனையிந்த அரவந்தனக்கோ விரையே கொடுத்திட வையகந்தனிலேநாங்கள் வளர்த்தோமடாகிருஷ்ணா வார்த்தையொன் றெமக்குரையே. — ௧ பயங்கரமாய்மிகுந்த விஷச்சுவாலை பரப்பிக் கடிக்குமிந்த பாப்பின்மேல் தயங்கியிப்படிப்பட்ட சாஹசம்செய்தால் சகிப்பமோடா குழந்தாய். — ௨ அடிக்கடிக்கடிக்கின்றதே அதைக்கண்டெம் ஆவியுந் துடிக்கின்றதே கிருஷ்ணா கடித்தவாயெங்கும்விஷம்கலந் துடம்பினிற்பத்தி கனலாகப் பொடிக்கின்றதே. — ௩ பேசாதிருந்தால் தர்மமோ பெற்றோர்மேல் பிள்ளைகளுக்கும் வர்மமோ எங்கள்மேல் பாசமறந்தனையோ பாலாநீ பேசாத பாண்மையும் எங்கள் கர்மமோ. — ௪ எங்களுக்காகவேதான் இப்பாம்பைவிட்டு இரங்கிவரக் கூடாதா கிருஷ்ணையா மங்களமலர்முக மாதவனே யுனக்கும் எங்களுடனே வாதா. — ௫ உந்தனைப்பறி கொடுத்தே யிருப்போமோ உலகந்தனிலே யடுத்தே உன்னுடன் இந்தமடுவில்நாங்கள் இரங்கி இட்சணந்தன்னில் இறப்போ மிப்புனல் குடித்தே. — ௬ வ-ம். கிருஷ்ணபகவான் தந்தைதாயார் துயரத்தைப்போக்கி அவர்மகிழும்படிச் சொல்லுதல். விருத்தம். காதன்மிகுதந்தை அன்னைப் பரிசனங்கள் கலங்கி அழுஞ் செயல்தனைக் கண்டேயின்னம் சோதனைசெய் தாற்சகிக்க மாட்டாரிந்தத் தொன்மடுவில் வீழ்ந்திடுவா ரிவரென்றெங்கள் மாதவனார் அருட்கண்மலர் விழித்துநோக்கி மணிகடக்க கையமர்த்தி நின்மின்னென்றே சோதிமிகு செம்பவள வாய்திறந்து சொல்லுவான் அவர்துயரைக் கல்லுவானே. முற்றிற்று.
Contents | Home