ஆஞ்சனேயர் contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் ஸ்ரீ ஸ்ரீராமஜெயம். ஆஞ்சனேயர் தோத்திரப்பதிகம். சென்னை சூளை நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

காப்பு. நம்மாழ்வார் துதி. நேரிசை - வெண்பா! கங்கைநீர்நாட்டி னில்வாழ் காகுத்தன்றூதுவனைக் கங்கைசேர்த்தேத்துங் கவிக்குதவுங் — கங்கையுறு மாறன்றொளிரு மணித்தடஞ்சூழ்வண்குருகை மாறன்றிருத்தாண் மலர். திருமால் துதி. கட்டளைக் கலித்துறை. நேயம்புரியவருமாஞ்சனேயநிமலனுறு மாயம்புரியுயிறுதத்தறுகண்மதகயங்கொல் சீயம்புரியத்தமிழ்ப்பதிகத்துதிசெப்புதற்குப் பாயம்புரியகைக் கோதண்டராவ[ம]ன் பதந்துணையே. ஆஞ்சநேயர் தோத்திரப்பதிகம். நூல் ஆசிரியவிருத்தம். நீர்கொண்ட கார்கொண்ட கொண்டலரவிந்தமலர் நிகர்கொண்ட மேனிகொண்ட, நித்யவுயர் தத்வகுண சத்வபர வஸ்துவெனு நெடியமா லருநெறியினால், சீர்கொண்ட கண்டவிக லரியினது சேயெனத் திகழரியின் வருமண்ணலே, செம்பொனுல கம்புவி யராதியர்க் காதாரதிட நிலயமான பொருளே, ஏர்கொண்ட வைமபெரும் பூகமொன்றா முருவியைந் திறல்கொண்டமுதலே, இகலுமஞ் ஞானவிரு ளொழியவெங் கெங்குமொளி யிலகவெழுகின்ற சுடரே, ஆர்கொண்ட நின்மகிமை புகல் வதற் கியாவர்தர மரியவரிடத்தி லன்பாய், ஆஞ்சமய முன்னின்று சாஞ்சலிய நீத்தருளு மாஞ்சனேயக் கடவுளே. — 1 படியினொடு முடி கொள்கரை கிடுகிடென் நெடிய கடல் பாயநீ டிருவடிகளும், பாசமென நீசருயிர் நாச முறவீசியெப் பாலுமே கோலும் வாலும், கொடியிரத முரிபடக் கரிபடப் பரிபடக் குவிபடக் கொன்றகரமும், கொற்றியொடு வெற்றிபுறை வுற்றழகு பெற்றவுயர்குன் றமென மன நின்றபுயமும், விடியல்வரு மண்டல மிரண்ட னைய குண்டலம் விளங்கெழி னலங்கொள் செவியும், மிகுகருணை தகுநயன முகிழ்நகைகொள் முகவசனமே ன்மையுங் கண்டடியனேன், அடிமைசெய வரமுதலவந் தருள்வ தென்றரோ வடியவரிடத்தி லன்பாய், ஆஞ்சமய முன்னின்று சாஞ்சலிய நீத்தருளு மாஞ்சனேயக் கடவுளே. — 2 மேருமந்தரமாதி வரைசெலா நின்பாத விரலினினொ றுக்கிவிடுவாய், விரிதிரைக்கடனீரை யேற்றுவாய்பக்கலின் மிதித்துநற்றிடர் செய்குவாய், பேருமொளியிடிக ளொடு மேகக்குழாத்தைப் பிடித்துப்பிழிந் தெடுப்பாய், பிரமன்செயண்டங் கண்மெத்தென்ற பந்தாய்ப்பிறங்கிட வெறிந்தாடுவாய், ஒரும்யுகமுடிவில் வருவடவனலைவாயி னலூதித்தணித் தழிப்பாய், உரோமராசியில் வான சோதிகளெலாந் தோற்றவோங்குவாய் நினதுவண்மை, ஆருமுணர்வரிதவனை யடியனென்சொல்லுகே னடியவ ரிடத்தி லன்பாய், ஆஞ்சமய முன்னின்று சாஞ்சலிய நீத்தருளு மாஞ்சனேயக் கடவுளே. — 3 சிறுமதலையானபொழு துண்ணுநற் கனியென்று செங்கதீரின்மேற் பாய்நதனை, செப்புமவ னிரதத்தின் முன்புபின்னடைகொண்டு சென்னறா திரங்கற்றனை, மறு விலாவீர கோதண்டரகுநாத வள ருள்வழி நின்றனை, வாரிதியையங்கார தாரைகுடர்கொடுதாவி வளர்பவள வரையுற்றனை, தறுகணரிலங்கையிற் காவல்செய்வாளைத் தறைப்பட வறைந்தேகினை, ஜானகிக்காழியை யளித்தஞ்சலஞ்ச லென்று யென்றுயர் தீர்த்தனை, அறுதியில் லாமையைப் பெருதியெனவுற்றுளா யடியவரிடத்திலன்பாய், ஆஞ்சமய முன்னின்று சாஞ்சலிய நீத்தருளுமாஞ்சநேயக் கடவுளே. — 4 ஈரைந்துசிர மஃதிரட்டிவன் கானாமிராவணனசோ கவனமோர், இமையினிற்றுகள்படுத் தெண்டிசைகுலு ங்கவே யிகல்வீரகர்ச்சனை செய்தே, காரைந்துமூன் றாயு தகிங்கரரை வெங்கணெறிதரு சம்புமாலிதன்னைத், தளகர்த்தரைலரொடு தளமுற்றநிருத்தரைத் தாளரன்மிதித் துழக்கிக், கூரைந்துகிர்க்கரங் கொடுபீறியெற்றியுடல் கூறுகூறாய்க் கிழித்துக், குழப்பிக்கலக்கியவ் வரக்கனைத் தேய்த்தாலி வெள்ளைபட விளையாடியே, ஆரைந்துசுத ன்னடியுற்றுமயல் செற்றனை யடியவரிடத்தி லன்பாய், ஆஞ்சமய முன்னின்று சாஞ்சலிய நீத்தருளு மாஞ்சனேயக் கடவுளே. — 5 மாபா[யா]வியாமிந்த்ர சித்துமுன்வஞ்சமாய் மலர்மகன் பகழியேவ, வளர்விசயகோ தண்ட வள்ளள் தம்பியும் வாலி தம்பியும் மகனுமுரணிற், காயாதவானரர்கள் யாவருசீவனிலை தவரிச்சமர்க்களத்தில், சண்டமாருதமோத வீழ்மாமரங்கள்போற் காய்வுற்றிருந்தபோதும், வீயாமல் வீடணன் விலக்குறவிலக்குவன் வேலேற்று வீழ்ந்தபோ தும், வேரோடுசஞ்சீவி மலையினைக் கொ[ண்]டுவந்த வீரநின்விசயதீரம், ஆயாதமதியினே னுரைசெயுந் தகையிதோ வடியவரிடத்திலன்பாய், ஆஞ்சமய முன்னின்று சாஞ்சவிய நீத்தருளு மாஞ்சனேயக் கடவுளே. — 6 இமையவர்கணாகர்முறை கேட்குநின் செவிகளுக்கெனது முறைகேட்கவிலையோ — இன்னரீர்த்தளவிலர் நன்மைவந்தாள் கருணை யெளியனேன்மீதில்லையோ, நிமையளவதன்றிமிகுநே ரமோவென்னிலை நினக்குவெகுதூரமாமோ — நீமனதுவைத்திடிற் சாமியென்றுயரெலா நீக்குவதுமொருபாரமோ, ச[மைய]மிதி ல்வாராத தாமதமுமென்கொலோ தக்கதுணைவேறுமுளதோ — தமியன் மேல்வர்மமோ விதுநினது தர்மமோ தடையானதென் கர்மமோ, அமைவருகி லேன்விரைவில் வந்துதவி செய்குவா யடியவரிடத்திலன்பாய் - ஆஞ்சமய முன்னின்று சாஞ்சலிய நீத்தருளு மாஞ்சனேயக கடவுளே. — 7 பெற்றதாய்தந்தைநீ சுற்றமொடு நம்பிநீ பேரருட்குருவுநீயே — பேதமில்லாதுதவு கல்விநீ நெறியினிற் பிரியாத போதநீயே, நற்றவமுநீ மிக்கவரமுநீ யுரமுநீ நாள்பெருஞ்செல்வநீயே — நாதனீயா தலாலோதிலார்போல் விடுத னல்லருளினுக்குரியதோ, குற்றங்கள்பலசெய்த துட்டனாகிலுமடிமை கொண்டபின் விடலாகுமோ — குறைகொண் டிரதிடிற் பொரைகொள்வதன்றியே கோபங்கொள்வாருமுண்டோ, அற்றமிதில்வந்துதவி செய்குவாயையனே யடியவரிடத்திலன்பாங் ஆஞ்சமய முன்னின்று சாஞ்சலிய நீத்தருளு மாஞ்சனேயக்கடவுளே. —- 8 வாதமுதன்முப்பிணியில் விளையுமெப்பிணியுநினைமன தினினைக்குமுன்னே — வந்தவழி தெரியாம லோடுமேபொ ல்லாதவஞ்சனைவகுத்தபில்லி, ஏதமுறுசூனியம் முதலா னகர்மங்கள் யாவையும் நீராகுமே — இருளனொடுமுனிகறு ப்படல் வீரன்மாடனு மிடாகினியு மாகாளியும், பூதவேதாளவித லேமனுடனவ னேவல்புரிகின்ற காலபடரும் — பொய்யா தன்பெய ருரைத்திடினடுங்கிடுவாய் பொத்தியே யோடிடுவார், ஆதலானின்பெருமை வறிவதற்கெளியதோ வடியவரிடத்திலன்பாய் — ஆஞ்சமய முன்னின்று சாஞ்சலிய நீத்தருளு மாஞ்சநேயக்கடவுளே. — 9 நின்னருள்படைத்தவர்க் கென்னகுறையளகேச னிகரானவாழ்வுபெறுவார் — நீள்பொதியமாமலையின் மாதவவ கத்தியனை நேர்சொல்லுகல்வி பெறுவர், மன்னவர்க்கரசரா யுயர்புகழுநிறைவான வாழ்நாளுமுடையராவர் — மாதருட்ன் மக்கள்கிளையாலறு குபோலவே வளர்வுறப்பெற்றிருப்பர், இன்னதெனுமொழிசெவி யுறாமலே சுகம்பிழவில் யாவரொடும் வீற்றிருப்பார் — இம்மையிலுமறுமையினு மேதகைய ராவரெனிலெளிய னினைவிட்டகல்வனோ, அன்னைநிலையானுமே பெறவருள்க வண்ணலே யடியவரிடத் திலன்பாய் — ஆஞ்சமயமுன்னின்று சாஞ்சலிய நீத்தருளு மாஞ்சநேயக்கடவுளே. — 10 ஆஞ்சநேயர் தோத்திரப்பதிகம் முற்றிற்று.