திருமுறைகள்


தேவாரத் திருப்பதிகங்கள்


திருஞானசம்பந்தர் அருளியது

திருமுறை - 1
திருமுறை - 2
திருமுறை - 3

அப்பர் சுவாமிகள் அருளியது

திருமுறை - 4
திருமுறை - 5
திருமுறை - 6

சுந்தரர் அருளியது

திருமுறை - 7

தமிழ் மக்களின் உள்ளங்களை கடந்த ஓராயிரத்து முன்நூறு ஆண்டுகளாக பண்படுத்தி தெய்வ வாழ்வு வாழ வகை செய்த பெரியார்கள் தேவாரப்பதிகங்கள் பாடிய சைவப் பெரியார் நால்வர்களும், திருமால் அடியார்களாக திவ்வியப் பிரபந்தம் பாடிய ஆழ்வார்களும் ஆவர். அவர்கள் விட்டுச்சென்றுள்ள பாடல்கள் நம்மை உயர் நிலைக்கு எடுத்து செல்லும் நிலை வகிப்பவை. தெய்வ வடிவங்களை நம் கண் முன் நிறுத்தும் ஆற்றல் மிக்கவை.

அப்பாடல்கள் வாடாமாலைகளாக என்றென்றும் திகழ்பவை. "பொய்யிலி மாலைகள்" என்று ஞானசம்பந்தப் பெருமான் தமது தேவாரப் பதிகங்களை குறிக்கிறார். நம்மாழ்வார் தமது பாசுரங்களை "பொய்யில் பாடலகள்" என்று கூறுகிறார். "சொல்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீர்" என்பது அப்பர் பெருமானின் வாக்கு. அவற்றில் மணங்கமழ் மலர்கள் தொகுத்து நிறைந்து விளங்குகின்றன.

நமது தேவாரத் திவ்ய பிரபந்தங்கள் எல்லாம் ஆழ்ந்த தெய்வீக அனுபவத்தையும், பண்பாட்டின் உன்னத நிலையையும் எடுத்துக் காட்டுவதுடன் படிப்போர் மனதில் ஈடில்லா ஆனந்ததை அளிக்கும் அமுதங்களாகத் திகழ்கின்றன. அவற்றை படிக்க படிக்க மேலும் மேலும் படிக்க வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி எழுவதைக் காண்கிறோம்.

இங்கு தேவாரப் பதிகங்களும், திவ்யப்பிரபந்தகளும் தமிழிலும் ஆங்கிலத்திலும் (with acented script) கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு மொழியிலிருந்து மறு மொழிக்கு எளிதாக மாற்றிப் பார்க்கலாம் (தமிழ் / Roman).

ஜெர்மானிய நாட்டு கொலோன் மாநகர பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர். மால்டன் அவர்களின் உதவிக்கும் அன்புக்கும் பண்புக்கும் தமிழ் ஆர்ட்ஸ் அகெடமி நன்றியைத் தெரிவித்து கொள்கிறது.

Entire work has been transliterated into english with diacritical marks. For viewing the these great works in enlish please download Indic Times font

இரா. நாகசாமி